திரைப்படங்களுக்கான புதுமையான தேடியந்திரம்.


எனி கிளிப் தளத்தை பற்றி கேள்விப்பட்டவுடன் திரைப்பட ரசிகர்கள் எல்லோரும் அதனை புக்மார்க் செய்து கொள்ள விரும்புவார்கள் .அதன் பிறகு ஆங்கில படங்கள் தொடர்பாக எப்போது சந்தேகம் ஏற்பட்டாலும் எனி கிளிப்பை தான் நாடுவார்கள்.திரைப்படங்களை ரசிக்க விரும்பினாலும் எனி கிளிப்பை தான் நாடுவார்கள்.

முதல் முறையாக இந்த தளத்தை பார்க்கும் போதே உணமையான திரைப்பட ரசிகர்கள் சொக்கிப்போய் விடுவார்கள்!.காரணம் இந்த தளம் திரைப்படங்கள் தொடர்பான எந்த தகவலையும் தேடிக்கொள்ளலாம் என்பது தான்.அந்த வகையில் இந்த தளம் திரைப்படங்களுக்கான தேடியந்திரம்.ஆனால் மாமூலான தேடியந்திரம் அல்ல.
திரைப்படங்களுக்குள் உள்ள விவரங்களை தேடித்தரும் தேடியந்திரம்.அதாவது ஒரு படத்தில் உள்ள காட்சிகள்,வசனங்கள்,ஆடை அலங்காரம் என எதை வேண்டுமானாலும் தேடலாம்!.

சில நேரங்களில் திரைப்பட ரசிகர்களுக்கு தாங்கள் பார்த்து ரசித்த அபிமான நட்சத்திரத்தின் படத்தில் குறிப்பிட்ட காட்சி குறித்த சந்தேகம் ஏற்படலாம்.நண்பர்களுடன் விவாதித்து கொண்டிருக்கும் போது ஒரு படத்தின் குறிப்பிட்ட வசனத்தை நினைவு கூர விரும்பலாம்.இது போன்ற நேரங்களில் எனி கிளிப்பில் அந்த விவரத்தை குறிப்பிட்டு தேடினால் சம்பந்தப்பட்ட காட்சியை அல்லது வசனத்தை வீடியோ கிளிப்பாக இது உன் வைக்கிற‌து.

இதே போல ஒரு படத்தின் எந்த இடத்திலும் எந்த விவர்த்தையும் தேடலாம்.சந்தேகம் நிவர்த்தியாக மட்டும் அல்ல ஏற்கனவே பார்த்து ரசித்த படத்தில் குறிப்பிட்ட காட்சியை மீண்டும் பார்த்து ரசிக்க விரும்பினாலும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

காட்சிகள்,வசனங்கள்,பாடல்கள்,நாயகியின் ஆடை என எல்லாவற்றையும் தேடி அவற்றுக்கான வீடியோ கிளிப்பை பெறலாம்.அதற்கேற்ற வகையில் திரைப்படங்கள் தொடர்பான எல்லா விவரங்களையும் சேகரித்து பட்டியலிட்டுள்ளனர்.

இந்த கிளிப்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.

தேடப்பட்ட கிளிப்கள் தற்போது பார்க்கப்பட்டு வரும் கிளிப்கள் போன்ற தலைப்புகளிலும் காட்சிகளை ரசிக்கலாம்.

ஹாலிவுட் படங்களுக்கான இந்த தேடியந்திரம் எத்தனை அற்புதமானது என்று சொல்ல வேண்டியதில்லை.

அதே நேரத்தில் இணையத்தை பொருத்த வரை கோலிவுட் எத்தனை பின் தங்கியிருக்கிறது என்பதையும் இந்த தளம் உணர்த்துகிறது.

கோலிவுட்டுக்கும் இதே போன்ற‌ தேடியந்திர‌ம் இருந்தால் ரஜினியின் பன்ச் டயலாகையோ சிவாஜியின் நடிப்பு கீற்றையோ ,எம்ஜிஆரின் பாடல் வ‌ரிகளையோ நொடிப்பொழுதில் தேடி ரசிக்கலாம்.

ஆனால் அதற்கு முதலில் நமது படங்களில் உள்ள சகல விதமான விவரங்க‌ளையும் தொகுத்து தேடக்கூடியவையாக மாற்ற வேண்டுமே!.

இணையதள முகவரி;http://www.anyclip.com/

Advertisements

4 responses to “திரைப்படங்களுக்கான புதுமையான தேடியந்திரம்.

  1. MR CYBERSIMMAN, THERE IS A WEBSITE ONLINEWATCHMOVIES.NET WHERE YOU CAN SEE MOVIES OF VARIOUS GENRES DATING BACK TO SO MANY YEARS AND NEW ONES IN MANY LANGUAGES. CAN YOU PLEASE REVIEW THE SITE FOR US .
    THE SITE YOU HAVE MENTIONS ANYCLIP.COM IS GOOD THE QUALITY OF VIDEO IS VERY GOOD.THANKS FOR SHARING.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s