பதிவர்களுக்கு பரிசளிக்கும் திரட்டி.

தமிழ் இணைய உலகில் திரட்டிகளுக்கு குறைவில்லை.ஆனாலும் புதிது புதிதாக திரட்டிகள் அறிமுகமாகி கொண்டு இருக்கின்றன.இப்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் திரட்டி ஹாட்லிங்ஸ்இன் டாட் காம்.

ஹாட்லிங்ஸ்இன் பற்றி பார்ப்பதற்கு முன் தமிழ் திரட்டிகள் பற்றி ஒரு பார்வை பார்த்து விடலாம்.தமிழ்மண‌த்தில் துவங்கி தமிழிஷ் (இப்போது இன்ட்லி)வலைப்பூக்கள்,உலவு,உடான்ஸ்,தமிழ்10 என பத்துக்கும் மேற்பட்ட திரட்டிகள் உள்ளன.

இவை எல்லாமே பொதுவில் திரட்டி என்று குறிப்பிடப்படாலும் அடிப்படையில் இரண்டு வகை இருக்கின்றன.தமிழ்மணம்,தேன்கூடு போன்றவை பிரதானமாக வலைப்பதிவுகளுக்கானவை.இந்த பிரிவில் முன்னோடியாக கருதப்படும் டெக்னோரெட்டியை பின்பற்றி துவங்கப்பட்டவை.

இன்ட்லி போன்றவை வலைப்பதிவுக்கானவை மட்டும் அல்ல;இணையத்தில் வெளியாகும் எல்லா விதமான செய்திகளுக்கும் ஆனவை.இந்த வகை திரட்டிகள் முன்னோடி தளமான டிக்கை பின்பற்றி உருவானவை என்று கருதலாம்.

டிக் செய்திகளை ஜனநாயகமயமாக்கிய சேவையாக புகழப்படுகிறது.அதாவது செய்தி வெளியீட்டை ஆசிரியர் குழுவிடம் இருந்து விடுவித்து இணையவாசிகள் கைகளில் ஒப்படைத்த சேவையாக கருதப்படுகிறது.டி வருகைக்கு முன்னர் செய்தி தேர்வு என்பது ஆசிரியர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது.அவர்களால் மட்டுமே இதனை சரியாக செய்ய முடியும் என கருதப்பட்டது.

டிக் தான் இதனை உடைத்து இணையவாசிகளே செய்திகளை சமர்பிக்கலாம் என கொண்டு வந்தது.அந்த செய்தி தகுதியுடையதா என தீர்மானிக்கும் பொறுப்பை சக இணைய‌வாசிகளிடமே வழங்கியது.அதாவது வாக்களிப்பதன் மூலம் ஒரு செய்தியை முன்னுக்கோ பின்னுக்கோ கொண்டு வர முடியும்.

இப்படி இணையவாசிகளே ஒரு சமூகமாக செய‌ல்ப‌டும் போது பலதரப்பட்ட செய்திகளை பாரபட்சமற்ற முறையில் தெரிந்து கொள்ள வழி ஏற்படும் என கருதப்பட்டது.

டிக் செல்வாக்கு பெற்ற விதம் மற்றும் இப்போது தேய்ந்து போயிருக்கும் விதம் குறித்து நிறையவே விவாதிக்கலாம்.விஷ்யம் என்னவென்றால் டிக் செய்திகளை ஜனநாயகமயாமாக்கியது என்பது தான்.டிக் மூலம் இணையத்தில் கண்ணில் படாமலே போய்விடக்கூடிய பல செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

டிக்கின் குளோனாகவே தமிழிஷ் அறிமுகமானது என கருதலாம்.தொடர்ந்து பல திரட்டிகள் அறிமுகமாயின.

இப்போது ஹாட்லிங்ஸ்இன் திரட்டிக்கு வருவோம்.வடிவமைப்பிலோ தோற்றத்திலோ இந்த திரட்டியும் மற்ற திரட்டிகள் போலவே உள்ளது.அடிப்படை செயல்பாடும் ஒன்றாகவே உள்ளது.பதிவர்கள் அல்லது இணையவாசிகள் செய்தி அல்லது கட்டுரையை சமர்பிக்கலாம்.இப்படி சம‌ர்பிக்கப்பட்டவை வரிசையாக முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்படுகின்றன.

இப்படி ஒரே போன்ற திரட்டிகள் தேவையா?மற்ற திரட்டிகளில் இருந்து இது எந்த விதத்தில் மாறுபடுகிறது என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

இந்த கேள்விகளுக்கு ஹாட்லிங்ஸ்இன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பதில்கள் அதன் நோக்கத்தை தெளிவாக உணர்த்துகிறது.

முதலில் ஏற்கனவே பல திரட்டிகள் இருப்பதை இது ஒப்புக்கொள்கிறது.ஆனால் தன்னை வேறுபடுத்தி கொள்ள முடியும் என்று நம்புகிறது.

தற்போது தமிழில் துவக்கப்பட்டுள்ள இந்த திரட்டி ஆங்கிலம் மற்றும் தெலுங்கு போன்ற இந்திய மொழிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

உண்மையில் இந்த விரிவாக்கம் நலல் யோசனை.பல மொழிகளை பேசும் மாநிலங்களை கொண்ட நம் நாட்டில் ஒரு சேவையை நாடு தழுவிய அளவில் விரிவாக்கம் செய்வது நமக்குள்ள அணுகூலங்களில் முக்கியமானது.

மேலும் தமிழ் சூழலில் முன்னிலை பெற வாரம் ஒரு நட்சத்திர பதிவரை தேர்வு செய்து பரிசளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே தமிழ் மணம் இப்படி நட்சத்திர பதிவரை அடையாளம் காட்டினாலும் பதிவர்களுக்கு பரிசளிப்பது என்பது வரவேற்கத்தக்கது.தமிழ் சூழலில் பதிவர்கள் எந்த விதமான பலனோ ஊக்கமோ இல்லாமல் தான் செயல்படுகின்றனர்.எனவே பரிசுகள் தேவை தான்.

இந்த திரட்டியை குறைவான நபர்களே பயன்ப்டுத்தி வருகின்றனர்.முகப்பு பக்கத்தில் ஒரு சிலரின் பெயர்களே மீண்டும் மீண்டும் வருகின்றன.ஆனால் திரட்டிக்கு வருகை தரும் வாசக‌ர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக குறிப்பிடுகிறது.அதாவது இணைப்புகளை வெளியிடும் பதிவர்களை விட படிக்கும் வாசகர்கள் அதிகம் என்கிறது.அப்படியிருந்தால் அதுவும் நல்லது தான்.

அதே போல குழு மனப்பான்மைக்கு வித்திடக்கூடிய வாக்களிக்கும் முறைக்கு மாறாக வாசகர்களி அதிகம் படிக்கும் பதிவுகள் தானாக முன்னிலை பெறும் முறை பின்பற்றப்படுவதாக குறிப்பிடுகிறது.

இவையெல்லாம் நல்ல விஷயங்கள் தான்.பார்ப்போம் ஹாட்லிங்ஸ்இன் எப்படி போட்டியை சமாளிக்கிறது என்று.

ஹாட்லிங்ஸ்இன் திரட்டியில் கவனத்தி ஈர்க்கும் ஒரு விஷயம் வலது பக்கத்தில் மேலே உள்ள வண்ண புள்ளிகளை கிளிக் செய்தால் இணைப்புகளின் நிறமும் அதற்கேற்ப மாறுகிறது.சின்ன விஷயம் தான் ஆனால் இணையவாசிகளுக்கு கூடுதல் அதிகாரத்தை தரும் இது போன்ற இன்னும் பிற அம்சங்களை எதிட்பார்க்கிறோம்.

இணையதள முகவரி;http://www.hotlinksin.com/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s