வாத்து படங்களோடு வாருங்கள்!அழைக்கும் இணையதளம்


எங்கே இருக்கிறது உங்கள் வாத்து ? இந்த கேள்வியை கேட்டதுமே நீங்கள் குழப்பம் அடையாமல் லேசான ஆமோதிப்புடன் புன்னகை செய்தீர்கள் என்றால் இதே பெயரிலான இணையதளத்தை நீங்கள் அறிந்திருப்பதாக புரிந்து கொள்ளலாம்.

ஆம் வேர்ஸ் யுவர் டக் பீன் என்னும் பெயரில் ஒரு இணையதளம் இருக்கிறது.கொஞ்சம் சுவாரஸ்யமான இணையதளம்!வாத்து புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கான தளம்.

புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் தளங்கள் என்றதுமே ஃபிளிக்கர் உள்ளிட்ட பல தளங்கள் நினைவுக்கு வரலாம்.ஆனால் இதென்ன வாத்து படங்களை பகிர்ந்து கொள்வதற்கான தளம் என்று தோன்றலாம்.அது தான் இந்த தளத்தின் சுவாரஸ்யமே.

ஃபிளிக்கர் போன்ற தளங்களில் நீங்கள் எந்த புகைபபடத்தை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.ஆனால் இந்த தளத்தில் வாத்துடன் எடுத்து கொண்ட படம் அல்லது வாத்து படத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ளலாம்.அதாவது பொம்மை வாத்து.
இந்த பொம்மை வாத்துக்களோடு விதவிதமான இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து கொண்டு அந்த படத்தை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.இப்படி உலகம் முழுவதும் உள்ள வாத்து பிரியர்கள் வாத்தும் படங்களை இங்கே பகிர்ந்துள்ளனர்.இன்னும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இப்படி வாத்து படங்களை பகிர்ந்து கொள்வதால் என்ன பயன்?சும்மா ஜாலிக்காக தான் என்று பதில் சொன்னாலும் வெறும் கேளிக்கை மட்டுமே நோக்கம் அல்ல.அப்படியே மற்றவர்களோடு இணைய தொடர்பையும் ஏற்படுத்தி கொள்வது தான்.

இணையம் வழியே தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் நட்பை வளர்க்கவும்,கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் பேஸ்புக் இருக்கவே இருக்கின்றன.

ஆனால் அவற்றின் நோக்கமும் வீச்சும் வேறானவை.வாத்து மூலமான வலைப்பின்னலை ஏற்படுத்தி தரும் இந்த தளத்தின் சுவாரஸ்யம் வேறானது.

இங்கு வாத்து தான் இணைக்கும் பாலம்.ஒருவர் தனக்கு பிடித்தமான இடத்தில் வாத்து பொம்மையோடு படம் எடுத்து கொண்டுவிட்டு இந்த தளத்தில் அதனை இடம் பெறச்செய்யலாம்.அதே போல மற்றவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள வாத்து படங்களை பார்க்கலாம்.அப்படியே பரஸ்பரம் தொடர்பு கொண்டு பேசிக்கொள்ளலாம்.

வாத்துடன் படம் எடுத்து கொள்வதற்காகவே புதிய இடங்களை தேடிச்செல்லலாம்.உண்மையில் இப்படி வெளியுலகம் நோக்கி அழைத்து செல்வதே இந்த தளத்தை நோக்கி பலரை ஈர்த்துள்ளது.வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்காமல் வெளியே செல்லும் ஊக்கத்தை இந்த தளம் ஏற்படுத்தியிருப்பதாக இதன் உறுப்பினர்கள் பலரும் கருதுகின்றனர்.சுற்றுலா செல்வது போல ஏதாவது புதிய இடத்துக்கு சென்று வாத்துடன் படம் எடுத்து அதனை இங்கே பகிர்வதை பலரும் விரும்புகின்றனர்.

அதே நேரத்தில் அழகான மற்றும் வித்தியாசமான வாத்து படத்தை எடுத்து அசத்த புதுப்புது வழிகளையும் யோசிக்கலாம்.

சுவாரஸ்யமாக தான் இருக்கிறது இல்லையா?

இந்த தளத்தின் நிறுவனருக்கு தற்செயலாக உதயமான எண்ணம் இது.அவரது சகோதரருக்கு ஒரு முறை தோழி ஒருவர் வாத்து பொம்மையை பரிசாக தந்திருக்கிறார்.அந்த தோழி வெளியூர் பயணத்தின் போது வாத்து பொம்மையை எடுத்து செல்ல இருந்ததாகவும் பயணம் ரத்தனாதால் பொம்மையை பரிசாக தருவதாகவும் கூறியிருக்கிறார்.

அதன் பிறகு ராணுவ வீரான சகோதரர் தான் செல்லும் நாடுகளுக்கெல்லாம் அந்த வாத்து பொம்மையை எடுத்து சென்று பல்வேறு இடங்கள் மற்றும் நகரங்களில் புகைப்படம் எடுத்து கொண்டார்.அந்த புகைபப்டங்களை வைத்து கொண்டு அரட்டை அடித்து கொண்டிருந்த போது இந்த எண்ணத்தையோ ஒரு இணையதளமாக மாற்றினால் என்ன என்று தோன்றியது.

இதனையடுத்து வாத்து படங்களை அனைவரும் பகிர்ந்து கொள்ள வழி செய்யும் தளத்தை அமைத்தனர்.

வாத்து புகைப்படம் என்னும் பொதுவான சரடு முன் பின் அறிமுக இல்லாதவர்களிடையே ஒரு அறிமுகத்தை உண்டாக்கும் இந்த தளத்தை பலரும் விரும்பி ஆதரித்து வருகின்றனர்.

இந்த தளத்தில் உள்ள விதவிதமான வாத்து பொம்மைகளை பார்த்தாலே ஒருவித உர்சாகம் ஏற்பட்டு மனது லேசாகிறது.

நீங்களும் கூட இந்த வாத்து பகிவில் இணையலாம்.வேர்ஸ் யுவர் டக் பீன் தளத்திற்கு சென்றால் இமெயில் முகவரியை சமர்பித்து உறுப்பினராவதறகான அழைப்பிதழை பெற்று கொள்ளலாம்.உங்களிடம் வாத்து பொம்மை இல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்த தளம் மூலமே அழகான வாத்து பொம்மையை வாங்கி கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://www.wheresyourduckbeen.com/beta/beta.html

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s