கடத்தப்பட்ட கலெக்டரை விடுவிக்க ஒரு பேஸ்புக் பக்கம்.

கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்பதற்கான முயற்சிகள் அரசு தரப்பில் தொடர்கிறது.அவரி விடுவிப்பதற்கான விலையை மாவோயிஸ்ட்களும் பேச்சு வார்ர்த்தை என்னும் பேரத்தில் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர்.இரண்டாவதாக விதித்த நிபந்தனையில் மேலும் 9 தீவிரவாதிகளை விடுவிக்க கோரியுள்ளனர்.

இதனால் சிக்கல் நீடிக்கும் நிலையில் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார் என்பது தெரியாமலே இருக்கிறது.மக்கல் நலனுக்காக பாடுபடும் ஒரு இளம் கலெகடருக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி சோதனை தான்!.

மேனனை விடுவிக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.நான் பேச்சு வார்த்த நடத்த தயார் என்று ஆர்மபத்திலேயே சுவாமி அக்னிவேஷ் அறிவித்தார்.

ஆஸ்துமா நோயாளியான மேனன் மாவேஸ்யிஸ்ட்கள் பிடியில் தவித்து கொண்டிருக்க கடத்தல் படலத்தின் காட்சிகள் முடிவில்லாமல் நீள்கிறது.

இந்நிலையில் சாமன்யர்களான நாம் மேனன் நிலை பற்றிநாளிதழ்களில் படிக்கிறோம் ,கவலைப்பொங்க பேசுகிறோம்!அவர் விடுவிக்கப்பட காத்திருக்கிறோம்.அப்படியே அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று பேஸ்புக் மூலம் குரலும் கொடுக்கலாமே!

இதற்காக என்றே அலெக்ஸ் பால் மேனனை விடுவியுங்கள் என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் ஒன்று துவக்கப்பட்டுள்ள‌து.இதன் மூலம் நீங்களும் ஆதரவு குரல் கொடுக்கலாம்!.

சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் உங்களுக்கான கணக்கு அல்லது பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம் .அதே போல குறிப்பிட்ட நோக்கத்திற்கான பக்கத்தையும் உருவாக்கி கொள்ளலாம்.இந்த பக்கங்களை நிறுவனங்கள் மார்க்கெட்டிங் நோக்கில் பயன்படுத்தி வருகின்றன.சமூக நோக்கிலும் இந்த பக்கங்களை பயன்படுத்தலாம்.அதாவது குறிப்பிட்ட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவோ அல்லது குறிப்பிட்ட இலக்கிற்கு குரல் கொடுக்கவோ இது போன்ற பக்கத்தை அமைக்கலாம்.அமைத்து,பேஸ்புக்கில் நண்பர்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்வது போலவே இந்த இலக்கிற்கான ஆதரவு திரட்டலாம்.

இதே போல தான் கலெக்டர் விடுவிக்கப்படுவதற்காக பேஸ்புக் பக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 ம் தேதி மாவோயிஸ்ட்களால் கடத்தபட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக் பால் மேனன் அவர்களை விடுவிக்க கோறுகிறோம் என அறிமுக பகுதியில் அறிவித்து கொள்ளும் இந்த பக்கம் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் ஆதரவு குரல்களை கோருகிற‌து.

உங்கள் ஆதர‌வை தெரிவிப்பது எப்படி?பேஸ்புக் கலாச்சாரப்படி இந்த பக்கத்தை விரும்புவதாக (லைக் )சொல்லலாம்.இது வரை 4 ஆயிரம் பேருக்கு மேல் இப்படி ஆதரவு செய்துள்ளனர்.

இப்படி ஆதரவு தெரிவித்த பிறகு இந்த பிரச்சனை தொடர்பாக உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யலாம்.அதாவது மேனன் விடுதலையை வலியுறுத்தியும் கடத்தலை கண்டித்தும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.இந்த கருத்துக்கள் ஒரு உரையாடல் போல தொடரும் போது மக்கள் மன்றத்தின் குரலாக அது ஒலிப்பதை உணரலாம்.

மேனனை விடுவிவியுங்கள் என்பதே இப்போது இளம் இந்தியாவின் குரலாக இருக்க்கிற‌து என்பது போன்ற கருத்துக்கள் இந்த பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.

பேஸ்புக்கின் இலக்கணமே நண்பர்களின் நண்பர்கள் என்னும் கருத்தாக்கம் தானே எனவே இந்த விடுதலை கோரும் பக்கம் பற்றி உங்கள் பேஸ்புக் பக்கத்திலும் த‌கவல் தெரிவித்து நணப்ர்களின் ஆதரவை கோரலாம்.

இப்படி மேனன் விடுதலையை மையமாக கொண்டு கூடும் நண்பர்கள் சமூகம் இந்த பிரச்ச்னையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக கடத்தல் பேச்சு வார்த்தை தொடர்பான சமீபத்திய செய்திகளும் இந்த பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.நாளிதழ் செய்தி ,முதல்வர் பேட்டியின் யூடியூப் இணைப்பு என உயிர்போடு இந்த பக்கம் இருக்கிறது.

இந்த பிரச்சனை தொடர்பான அனைத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த பகிர்வுகள் அமைந்துள்ளன.

எல்லாம் சரி இந்த பேஸ்புக் பக்கம் மேனனை விடுவிக்க வல்லதா?இதை மாவோயிஸ்ட்கள் படித்து மனம் மாறி விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாமா?அல்லது அரசு மக்கள் மனதறிந்து தனது முயற்சியை தீவிரமாக்கும் என எதிர்பார்கலாமா?

இல்லை இந்த பக்கம் மேனன் விடுதலை கோருவதற்கான தார்மீக ஆதரவு குரல் மட்டுமே.அதோடு பிரச்சனை தொடர்பான பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியது.பொது மக்கள் விலகி நிற்காமல் தங்கள் குரலை ஒலிக்க செய்வதை இந்த பக்கம் உறுதி செய்கிற‌து.

அதோடு இந்த பிரச்சனை மக்கள் மன்றத்தில் பொது விவாதத்தில் இருக்கவும் வழி செய்கிற‌து.விரைவான தீர்வுக்கான குரலாகவும் இது ஒலிக்கிறது.

எப்படி பார்த்தாலும் இணைய யுகத்தில் இத்தகைய போராட்ட குரல்கள் ஒலிப்பது அவசியமானதே.

மேனன் விடுவிக்கப்பட்டார் என்ர செய்தி இந்த பக்கத்தில் விரைவில் வெளியாகட்டும்!.

மேனனுக்காக குரல் கொடுக்க:http://www.facebook.com/FreeAlexPaulMenon

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s