இணையத்தில் எப்போதுமே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.காரணம் வைரஸ் வில்லங்கங்கள் எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்லவே முடியாது.அதோடு மால்வேர் ,ஸ்பைவேர் போன்ற வில்லங்கங்களும் இருக்கின்றன.இவை போதாதென்று பிஷிங் மோசடி இமெயில் மோசடி உள்ளிட்ட அபாயங்களும் அப்பாவி இணையவாசிகளி குறி வைத்து காத்திருக்கின்றன.
எனவே தான் ‘ஐ லவ் லாங் யூ ஆர் எல்’ இணையதளம் எந்த சுருக்கமான முகவரியையும் நேரடியாக திறந்து உள்ளே சென்று விடாதீர்கள் என்று ஆலோசனை சொல்கிறது.அதற்கு மாறாக முதலில் சுருக்கமான முகவ்ரிகளுக்கு பின்னே உள்ள பெரிய முகவரி என்ன என்பதை தெரிந்து கொண்டு உள்ளே செல்லுங்கள் என்று சொல்கிறது.பெரிய முகவரி என்றால் இணையதளங்களின் மூல முகவரி!
டிவிட்டர் யுகத்தில் நீள்மான இணைய முகவரியை அப்படியே பகிர்ந்து கொள்ளும் தேவை இல்லாமல் அவற்றின் சுருக்கங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள உதவும் இணைய முகவரி சுருக்க சேவைகள் அறிமுகமாகி பிரபலமாகி பரவலாயின.
140 எழுத்துக்களுக்கு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முயலும் போது இணைய முகவரி சுருக்கமாக இருப்பதும் பேருதவியாக தான் இருக்கின்றன.ஆனால் இந்த சுருக்கமான முகவரிக்கு பின்னே எதிர்பாராத வில்லங்கங்களும் இருக்கலாம்.
காரணம் பிஷிங் என்னும் இணைய கடத்தலில் ஈடுபடும் மோசடி பேர்வழிகள் சுருக்கமான முகவரிக்கு பின்னே மறைந்திருக்கலாம்.நீங்களும் தெரியாமல் அதை கிளிக் செய்தால் வலை விரித்து காத்திருக்கும் இணையயதளத்திற்கு சென்று மாட்டிக்கொள்ள நேரலாம்.
இப்படியாக மால்வேர் ,ஸ்பைவேர் போன்ற வில்லங்கள் உளவு சாப்ட்வேர்களின் தாக்குதலுக்கு இலக்காகலாம்.பொதுவாக வைரஸ் தடுப்பு சேவைகள் சுருக்கப்பட்ட முகவரிகளை கண்காணிப்பதில்லை என்பதால் ஸ்பைவேர்கள் சுலபமாக உள்ளே நுழைந்து விடுகின்றன.
இன்னும் பல மோசடி முயற்சிகள் சுருக்கப்பட்ட முகவரிகள் பின்னே மறைந்திருக்கலாம்.
ஆகையால் தான் எந்த சுருக்கப்பட்ட முகவரிகளை பார்த்தாலும் முதலில் அதன் பின்னே உள்ள மூல முகவரியை பார்த்து அது சரியான இணையதளம் தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று எச்சரிக்கிறது ஐ லவ் லாங் யூ ஆர் எல் இணைய சேவை.
இந்த தளத்திற்கு ஏன் இந்த அக்கறை வேறு எந்த தளத்திற்கும் இல்லாத அக்கறை என்று பராசக்தி பாணியில் கேட்டால் ,இப்படி சுருக்கமான முகவரிகளின் பின்னே உள்ள முழுமையான முகவரி என்ன என்பதை அடையாளம் காட்டும் சேவையை இந்த தளம் வழங்குகிறது என்பதே விஷயம்.
சுருக்கமான முகவரிகளின் பின்னே உள்ள இணையதளம் எது என்பதை அடையாளம் காட்டுவது தான் இந்த தளத்தின் நோக்கமே.இமெயிலிலோ டிவிட்டர் இனைப்பிலோ சுருக்கமான இணைய முகவரியை பார்த்தால் அதனை இந்த தளத்தில் சம்ர்பித்தால் அதன் பின்னே உள்ள தளம் எது என்பதை இது சொல்லி விடுகிறது.
இப்படி அவசரப்படாமல் மூல முகவரியை அறிந்து கொண்டு அவற்ரை பயன்படுத்த துவங்கினால் முகவரி சுருக்கம் என்னும் முகமுடியின் கீழ் மறைந்திருக்கும் மோசடி தளங்களின் வலையில் சிக்காமல் இருக்கலாம்.
அவசியமான சேவை தான்.இந்த அவசியத்தை இந்த தளம் புகைப்பட சித்திரங்களாக அழகாக விளக்கியிருக்கும் விதமும் அருமை.
லாங் யூ ஆர் எல் தளமும் இதே போன்ற சேவையை வழங்குகிறது.சுருக்கமான இணையதள முகவரிகளை பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் எந்த தளத்திற்கு அழைத்து செல்லப்பட இருக்கிறிர்கள் என்னும் முன்னோட்டத்தை இந்த தளம் காட்டுகிறது.
இணையதள முகவரி;http://www.ilovelongurl.com/
‘
THE WOT ADD ON DOES THE SAMETHING MR CYBERSIMMAN -YOU DONT HAVE TO SEPERATELY TYPE THE URL –WOT GIVES THE RATING ON 5 PARAMETERS –HOW IS THIS BETTER THAN WOT–CAN YOU PLAEASE EXPLAIN —
thanks foe the usefull info sir
thank for the use full info
அருமையான பதிவு …
உங்கள் பதிவு மேலும் பலரை சென்றடைய DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ்.DailyLib
we can get more traffic, exposure and hits for you
To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்
நன்றி
தமிழ்.DailyLib