பாட்காஸ்டிங் செய்ய புதிய வழி.

பாட்காஸ்டிங் பரபரப்பாக பேசப்பட்ட அளவுக்கு பிரபலமாகவில்லை.பெரிய அளவில் வெற்றியும் பெறவில்லை.பாட்காஸ்டிங்க்கை பலரும் மறந்து விட்ட நிலையில் அதனை நினைவு படுத்தும் வகையில் ஆடியோ சார்ந்த புதிய சேவை அறிமுகமாகியுள்ளது.

ஆடியோலிப் என்னும் இந்த சேவை உலகின் முதல் மைக்ரோ பாட்காஸ்டிங் சேவை என்று வர்ணித்து கொள்கிறது.புதிய பாட்காஸ்ட்களை பகிர்ந்து கொள்வதற்கான சுலபமான வழியாக இது அமைந்துள்ளது.

பாட்காஸ்டிங் என்பது ஒலி வடிவிலான கோப்புகளை செய்தியோடை வழியே பகிர்ந்து கொள்வதற்கான வசதி என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.செய்தியோடை(ஆர் எஸ் எஸ்) வழியே புதிய பதிவுகளை பெறுவது போல பாட்காஸ்டிங்கில் ஒலி கோப்புகளை இமெயில் போல பெற்று கேட்டு ரசிக்கலாம்.

பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளுக்கு சந்தாதாரராகி ஐபாட் போன்ற இசை கேட்பு சாதனங்களில் அதனை கேட்டு ரசிக்கலாம்.

பாட்காஸ்டிங் தனி உலகமாக இயங்குகிறது.

பாட்காஸ்டிங் வழியே உரை நிகழ்த்தலாம்,வானொலி போல நிகழ்ச்சி நடத்தலாம்!

இப்போது இத்தகைய பாட்காஸ்டிங்கை டிவிட்டர் பதிவுகள் போல பகிர்ந்து கொள்ளும் வசதியை அளிக்கும் வகையில் ஆடியோலிப் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

நீங்கள் உருவாக்கிய பாட்காஸ்டிங்க்கை அதாவது ஆடியோலிப் வழியே வெளியிடலாம்.அவை இந்த தளத்தின் மூலம் வெளியிடப்படும்.இந்த பதிவுகளை இங்கேயே கேட்டு ரசிக்கும் வசதியும் உண்டு.இந்த தளத்தில் இருந்து உங்களது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வட்டத்திலும் இதனை பகிர்ந்து கொள்ளலாம்.

பாட்காஸ்டிங்கை உருவாக்குவது என்றால் ஏதோ சிக்கலான விஷய‌மாக இருக்கும் என்று நினைத்து விட வேண்டாம்!நீங்கள் சொல்ல நினைக்கும் எந்த கருத்தையும் மைக் மூலம் பதிவு செய்து அந்த ஒலி கோப்பை இங்கே சம‌ர்பித்தால் அது தான் உங்களின் பாட்காஸ்டிங்.

பாட்காஸ்டிங் செய்வது என்றால் ஒரு மைய கருத்தை தேர்வு செய்து அதனடிப்படையில் நிகழ்ச்சியை தயார் செய்ய வேண்டும்.இது எளிதானதே என்றாலும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

ஆனால் ஆடியோலிப்பில் என்ன சிறப்பம்சம் என்றால் எந்த விதமான முன் தயாரிப்பு அல்லது திட்டமிடலும் தேவை இல்லாமால் சொல்ல விரும்பும் கருத்தை நண்பர்களிடம் பேசுவது போல அப்படியே பேசி பதிவு செய்தால் போதுமானது.அதாவது டிவிட்டரில் டைப் செய்வது போல இதில் பேச்சு மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

புதிய படம் பற்றிய விமர்சனம்,நாட்டு நடப்பு மீதான் கருத்து,கேட்டு ரசித்த பாடல் பற்றிய பாராட்டு,திடிரென மின்னல் கீற்றாக தோன்றிய சிந்தனை என எதை வேண்டுமானாலும் பாட்காஸ்டிங் வடிவில் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

அந்த வகையில் கருத்து பகிர்வுக்கான புதிய களமாக இந்த சேவை அமைந்துள்ளது எனலாம்.

இதில் மேலும் சிறப்பம்சம் என்னவென்றால் பகிரப்பட்ட குரல் பதிவுகளை கேட்பதோடு அவற்றுக்கு குரல் வழியிலேயே கருத்தும் தெரிவிக்கலாம் என்பது தான்.இது விவாதம் போன்ற அழகான உரையாடலாகவும் உருவாகும் வாய்ப்புள்ளது.

புதிய பாட்காஸ்டிங்,பிரபலமான பாட்காஸ்டிங் என வகைப்படுத்தப்பட்டிருப்பதோடு மையப்பகுதியில் பாட்காஸ்டிங் பகிர்வுகள் வரிசையாக இடம் பெறுகின்றன.

ஆடியோ பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழத்தக்கூடிய சேவை தான்!.

இணையதள முகவரி;http://audiolip.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s