மலிவு விலையில் திரைப்பட டிக்கெட்கள் தரும் இணையதளம்..

எப்படியாவது டிக்கெட் வாங்கி திரைப்படம் பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் துடித்ததெல்லாம் ஒரு காலம்.இதற்காக மணிக்ககணக்காக வரிசையில் காத்திருப்பார்கள்,பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்களை இடண்டு மூன்று மடங்கு விலை கொடுத்து வாங்கவும் தயாராக இருப்பார்கள்.

ஆனால் இப்போதோ ரசிகர்கள் எப்போதோ தான் படம் பார்க்க வருகின்றனர்.அடித்து பிடித்து டிக்கெட் வாங்க எல்லாம் யாருக்கும் ஆர்வம் இல்லை.

விளைவு திரையரங்குகள் காற்று வாங்குகின்றன.ஹவுஸ்புல் போர்டு போட்டு வெறுப்பேற்றிய காலம் போய் இன்று பாதி திரையரங்கு நிறைந்தாலே பெரிய விஷயமாகி விட்டது.

ஹாலிவிட் முதல் கோலிவுட் வரை இந்த நிலை தான்.இதற்கான காரணங்கள் ஆய்வுக்குறியவை .அவை ஒரு புறம் இருக்கட்டும் இந்த நிலையில் இரு தரப்பினருக்குமே பயனளிக்கக்கூய வகையிலான சேவையை டீல்பிலிக்ஸ் இணையதளம் அறிமுகம் செய்துள்ளது.

டீல்பிலிக்ஸ் தளம் மலிவு விலையில் அதாவது டிக்கெட் விலையை விட 40 முதல் 50 சதவீதம் வரை குறிவான விலையில் வழங்குகிறது.இதன் மூலம் ரசிகர்களுக்கு குறைந்த விலையில் படம் பார்த்த பலன் கிடைக்கும் என்றால் திரையரங்குகளுக்கோ காலி இருக்கைகள் நிரம்பிய பலன் கிடைக்கும்.

அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ள தளம் இது.

திரையரங்குகளில் கூட்டம் குறைந்து கொண்டே வருவது பற்றி பலரும் கவலை பட்டு கொண்டிருக்கும் நிலையில் அதற்கான சிறு தீர்வாக இந்த சேவை அறிமுகமாகியுள்ளது.

இந்த சேவையின் மூலம் குறைந்த விலையில் டிக்கெட் பெற விரும்பும் ரசிகர்கள் தாங்கள் பார்க்க விரும்பும் திரைப்படத்தையும்,பார்க்க விரும்பும் நாளையும் தேர்வு செய்து தெரிவிக்க வேண்டும்.எந்த பகுதியில் படம் பார்க்க விருப்பம் என்பதையும் குறிப்பிட வேண்டும் ,ஆனால் எந்த திரையரங்கம் என்பதை தேர்வு செய்ய முடியாது.(திரையரங்குகளுக்கு கவுரவ பிரச்சனையாக இருக்கலாம் என்பதால் இப்படி)

இதனையடுத்து டீல்பில்க்ஸ் தளம் உங்களுக்கான சலுகை விலை டிக்கெட்டை பரிந்துரைக்கும் .அதற்கு ஒப்புக்கொண்டு டிக்கெட்டை வாங்கி கொண்ட பின் எந்த திரையரங்கு என்பது தெரியவரும்.

விற்காத சரக்கை தள்ளுபடியில் தள்ளிவிடுவது போல தான் இதுவும்.ஆனால் ரசிகர்கள்,திரையரங்குகள் இரு தரப்பினருக்குமே ஆதாயம் தரக்கூடியது.

ஹாலிவிட்டில் ஆரம்பித்து விட்டார்கள்,கோலிவுட்டிலும் ஆரம்பிக்கலாம்.

யோசித்து பாருங்கள் சலுகை விலையில் கூட்டமாக கூட டிக்கெட்கள் பெற்று அரங்கை நிரப்பி விடலாம்.குழுவாக பார்க்க விரும்பும் ரசிகர்கள் கூடுதல் சலுகையும் கோரிப்பெறலாம்.

இணையதள முகவரி;http://www.dealflicks.com/movie_index.php

2 responses to “மலிவு விலையில் திரைப்பட டிக்கெட்கள் தரும் இணையதளம்..

    • அமெரிக்கர்கள் என்றில்லை நண்பரே நாமும் இதே திசையில் தான் செல்ல வேண்டும் நண்பரே.பழைய தொழில்நுட்பங்களில் இருந்து விடுபட்டு புதிய தொழில்நுட்பங்களின் வாய்ப்புகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.அதற்கான நூற்றுக்கணக்கான உதாரணங்களில் ஒன்று தான் இந்த தளம்.

      அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s