புக்மார்க் சேவையில் புதிய அவதாரம்.


உங்கள் வாழ்கையையே மாற்றி காட்டுகிறோம் வாருங்கள் என அழைக்கிறது கிலிபிக்ஸ் இணையதள‌ம்.வாழ்கை என்று கிலிபிக்ஸ் குறிப்பிடுவது இணைய வாழ்கையை!

அதாவது இணைய பயணத்தில் எதிர்கொள்ளும் விஷயங்களை பின்னர் எளிதாக தேடி கண்டுபிடிக்கும் வகையில் ஒரே இடத்தில் தொகுத்து வைத்து கொள்ள உதவுகிறது கிலிபிக்ஸ்.

ஒரு விதத்தில் பார்த்தால் கிலிபிக்ஸ் புக்மார்கிங் சேவை தான்.ஆனால் அதனை மிகவும் மேம்பட்ட முறையில் வழங்குகிறது.

புக்மார்கிங் என்பது என்ன?இணையத்தில் உலாவி கொண்டிருக்கும் போது நல்ல கட்டுரையையோ அல்லது சுவையான விஷயத்தையோ பார்க்கும் போது அப்போது அதில் கவனம் செலுத்த முடியாவிட்டால் பின்னர் வந்து பார்த்து கொள்ளலாம் என்று குறித்து வைத்து கொள்ளும் வசதி தானே!.

இத்தகைய புக்மார்கிங் சேவைகளில் பலவிதங்கள் இருக்கின்றன.அவற்றில் புதுவிதமானதாக கிலிபிக்ஸ் அறிமுகமாகியிருக்கிறது.

கிலிபிக்சை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.டிவிட்டர் அல்லது பேஸ்புக் கணக்கு மூலமே இதில் உறுப்பினராகி விடலாம்.ஜிமெயில் கணக்கு மூலமும் உள்ளே நுழையலாம்.அதன் பிறகு இணையத்தில் எந்த இடத்திலும் கிலிப் செய்யலாம்.அதாவது அந்த பக்கத்தை குறித்து வைத்து கொள்ளலாம்.

இதற்காக கிலிப் பட்டனை பிரவுசரின் புக்மார்க் பகுதியில் இணைத்து விட்டால் போதுமானது.எந்த இணையபக்கத்தை குறித்து வைத்து கொள்ள விரும்புகிறோமோ அந்த பக்கத்தில் இருந்து கிலிப் ப‌ட்டனை கிளிக் செய்தால் அந்த பக்கம் புக்மார்க் செய்யப்பட்டு விடும்.

இது வழக்கமாக எல்லா புக்மார்கிங் சேவையும் செய்வது தான்.ஆனால் கிலிபிக்சில் இதன் பிறகு தான் சுவாரஸ்யமே இருக்கிற‌து.

புக்மார்க் செய்தவற்றை எல்லாம் அழகாக அடுக்கி வைக்க முடியும் என்பது தான் அது.

நல்ல கட்டுரை,சுவாரஸ்யமான யூடியூப் வீடியோ,வாங்க‌ நினைக்கும் புத்தகம்,ஆன்லைன் ஷாப்பிங்கில் பார்த்து ரசித்த ஆடை என எதை வேண்டுமானாலும் புக்மார்க் செய்து கொள்வதோடு ஒவ்வொன்றையும் அதற்குறிய தலைப்பின் கீழ் வகைப்படுத்தி வைக்க முடியும்.

அதாவது நல்ல கட்டுரைகளையும் செய்திகளையும் அதற்கான தலைப்பின் கீழ் போட்டு வைக்கலாம்.அதே போல புத்தகங்களுக்கு ஒரு பெட்டி வீடியோக்களுக்கு ஒரு பெட்டி என உருவாக்கி கொள்ளலாம்.அவரவர் தெவைக்கேற்ப எத்தனை பெட்டிகள் வேண்டுமானாலும் உருவாக்கி புக்மார்க் செய்தவற்றை வகைப்படுத்தி கொள்ளலாம்.

இப்படி எல்லாமே ஒழுங்காக வகைப்படுத்தப்படுவதை தான் கிலிபிக்ஸ் இணைய வாழ்கையை ஒருங்கிணைக்க உதவுவதாக கிலிபிக்ஸ் சொல்கிற‌து.

புக்மார்க் இணைப்புகளை பெட்டிபெட்டியாக சேமித்து வைப்பதை பார்க்கும் போது இணையத்த்தில் பார்த்து ரசிப்பவற்றை இணைய பலகையில் அவற்றை புகைப்படங்களாக குத்தி வைத்து கொள்ள வழி செய்யும் பின்ட்ரெஸ்ட் சேவை நினைவுக்கு வரலாம் என்றாலும் இது பின்ட்ரெஸ்ட் போன்றது அல்ல!.

புக்மார்க் செய்தவற்றை அழகாக வகைப்படுத்தி கொள்ள உதவுவதோடு அவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் இந்த சேவை கைகொடுக்கிறது.இதற்காக சின்போர்டு என்னும் வசதி உள்ளது.இதில் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டால் நண்பர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் பார்க்கலாம்.

புக்மார்கிங் சேவையில் புதிய அவதாரமான கிலிபிக்சை ப‌யன்படுத்தி பாருங்கள்!

இணையதள முகவரி;http://www.clipix.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s