ஆதரவு கோரும் புதிய தமிழ் அகராதி.

தமில் மொழியை வளமாக்க உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது என்னும் அழைப்போடு புதிய அகராதி பற்றிய இந்த பதிவை துவக்கலாம்.காரணம் இந்த அகராதியின் நோக்கமும் அது தான்.

ஆம் தமிழில் முற்றிலும் திறந்த தன்மை கொண்ட அகராதியாக இந்த புதிய அகராதி உருவாக்கப்பட்டு வருகிறது.அதாவது விக்கி பாணியில் இணையவாசிகளின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டு வரும் அகராதி இது.

மற்ற இணைய அகராதிகள் போல இல்லாமல் இதில் இணையவாசிகளே புதிய சொற்களை சமர்பித்து அதற்கான பொருளையும் குறிப்பிடலாம்.விக்கி பாணியிலான அகராதி என்பதால் அந்த சொல்லுக்கான அர்தத்தில் திருத்தம் இருந்தால் சக இணையவாசிகளே அந்த திருத்ததை சமர்பிக்கலாம்.

இவ்வாறு இணையவாசிகளின் பங்களிப்போடு இந்த இணைய அகராதி வளர்ந்து வருகிறது.

புதிய சொற்களை யார் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.இதற்காக என்றே புதிய சொற்கள் பகுதி உள்ளது.புதிய சொல்,அதற்கான அர்த்தம்,இணையான ஆங்கில சொல் ஆகிய விவரங்களை இந்த பகுதியில் தெரிவித்து அந்த சொல்லை சமர்பிக்கலாம்.

மேலதிக விவரங்களாக அந்த சொல்லை பயன்படுத்துவது தொடர்பான உதாரணம் மற்றும் ஒத்த சொற்கள்,எதிர் சொற்கள் போன்றவற்றையும் இடம் பெற வைக்கலாம்.வேற்று மொழி அர்த்தங்களையும் குறிப்பிடலாம்.

அதே நேரத்தில் ஏதேனும் சொல்லுக்கான பொருள் தெரியாமல் இருந்தால் அந்த சொல்லை பொது மன்றத்தில் சமர்பித்து அர்த்தம் கேட்கலாம்.அந்த சொல்லை அறிந்தவர்கள் அதற்கான பதிலை அளிப்பார்கள்.பதில் அளிக்கப்படும் சொற்கள் பச்சை நிறத்தில் டிக் போடப்பட்டு காட்சி தருகின்றன.

திறந்த தன்மை கொண்ட அகராதி என்பதால் இந்த வகையான சொற்கள் மட்டுமே என்ற எந்த வகையான கட்டுப்பாடும் இல்லாமல் எந்த வகையான சொற்களையும் சமர்பிக்கலாம்.புதிய அகராதியின் நோக்கத்தை விளக்கும் பகுதியில் இது பற்றி தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த மொழியும் காலத்திற்கேற்ப மாறு வருவதால் அதில் பழைய சொற்கள் மறைந்து புதிய சொற்கள் இணைவது இயல்பானது தான்.இந்த உண்மையை புரிந்து கொண்டு மக்களினால் உருவாக்கப்படும் முற்றிலும் திறந்த சொற்களஞ்சியமாக இலக்கிய சொற்களில் இருந்து பேச்சு வழக்குச் சொற்கள், கலைச்சொற்கள், தொழில் நுட்ப்ப சொற்கள் என தமிழில் அடங்கும் அனைத்து விதமான சொற்களுமே இச் சொற்களஞ்சியத்தினில் உள்ளடக்கப்பட்டுவருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் மொழி பல்வேறு விதங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் அவை எல்லாவற்றையும் இன்றைய மற்றும் நாளைய தலைமுறைக்காக இங்கு திரட்டப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேச்சு தமிழ் சொற்களை சேர்ப்பது சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

அகராதியில் எந்த சொற்களையும் இணைக்கலாம் என்றாலும் அடுத்தவரை தூண்டும் அல்லது புண்படுத்தும் நோக்கிலான சொற்களுக்கு மட்டும் இடமில்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.இத்தகைய அவச்சொற்களை கண்டால் அது குறித்து எச்சரிக்கை செய்து நீக்கச்செய்யலாம்.

அகராதியில் இனைக்கப்படும் சொற்கள் முகப்பு பக்கத்தில் வரிசையாக இடம் பெறுகின்றன.இனையவாசிகளின் வாக்குகளும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.புதிதாக சேர்க்கப்பட்ட வரிசயில் மட்டும் அல்லாது அகர வரிசைப்படியும் சொற்களை காணும் வசதி உள்ளது.தேவையான சொற்களை தேடும் வசதியும் உள்ளது.

சொற்களை சம்ர்பித்து பங்களிப்பவர்களின் பெயர்களும் குறிப்பிடப்படுவதோடு அதிகம் பங்களிப்பவர்களின் பெயர்கள் வகை மேகங்களாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

தமிழில் நல்ல இணைய அகராதிகள் இருந்தாலும் இணையவாசிகளின் பங்களிப்போடு முற்றிலும் திறந்த மக்கள் அகராதியாக உருவாகும் இந்த புதிய அகராதியை மனதார வரவேற்கலாம்.

ஆங்கிலத்தில் பீட்ட என்று புதிய தளங்களில் குறிப்பிடப்படுவது போல பரிட்சாத்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்த அகராதியில் இது வரை1600 க்கும் அதிகமான சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன.இந்த எண்ணைக்கை லட்சக்கனக்கை எட்டுமானால் தமிழ் மொழியின் பரந்து விரிந்த தனமையை இணையத்தில் கண்டு மகிழலாம்..

தமிழ் ஆர்வம் கொண்டவர்கள் ஆதரித்தால் நன்றாக இருக்கும்.இது போன்ற இணைய முயற்சிகள் ஒரு இயக்கம் போலவே வேகம் பெற வேண்டும்.

அகராதியை ஆதரிக்க:http://www.agaraathi.com/index.php

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s