பேஸ்புக் மூலம் ஆலோசனை கேட்க ஒரு இணையதளம்.

புதிதாக அறிமுகமாகியிருக்கும் குறிப்பிட்ட பிராண்ட் செல்போனை நம்பி வாங்கலாமா? என்று கேட்டு யாரிடமிருந்தாவது கோரிக்கை வந்தால் குழம்பி போய்விட வேண்டாம்?நன்றாக உற்று கவனியுங்கள்.அது உங்கள் நண்பர் அல்லது நண்பர்களிடம் இருந்து வந்த கேள்வியாக இருக்கலாம்.

அதுவும் உங்களை போன்ற நண்பர்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரிந்திருக்கலாம் என்னும் எதிர்பார்ப்பில் கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கலாம்.

இப்படி சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்வதாயின் ‘டவுட’ட்’ இணையதளத்தில் உறுப்பினராக சேர்ந்த உங்கள் நண்பரின் கேள்வியாக இருக்கலாம்!.

‘டவுட’ட்’ சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் மூலம் உங்கள் வாழ்க்கையை மேலும் எளிமையாக்க உருவாக்கப்பட்டுள்ள மேலும் ஒரு புதுமையான இணைய சேவை.

டவுட’ட் என்ன செய்கிறது என்றால் உங்கள் நண்பர்கள் ஏற்கனவே நன்கறிந்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள உதவுகிறது.அவை ஆலோசனையாக இருக்கலாம்,சந்தேகங்களாக இருக்கலாம்,குழப்பத்திற்கான தீர்வாக இருக்கலாம்,தகவலாக இருக்கலாம்!.எதுவாக இருந்தாலும் அதனை உங்கள் நண்பர்கள் வாயிலாக கேட்டு தெரிந்து கொள்ளலாமே என்கிறது இந்த இணையதளம்.

எந்த பொருள் வாங்கலாம் என்ற பரிந்துரை தேவையா?எந்த ஓட்டலில் சாப்பிட போகலாம் என்ற வழிகாட்டுதல் தேவையா?குறிப்பிட்ட கல்லூரி அல்லது பள்ளியின் தரம் எப்படி என்று அறிய விருப்பமா? இவை எல்லாவற்றையும் கேள்வியாக பேஸ்புக நண்பர்களிடல் கேட்டு தெளிவு பெறலாம் என்பது தான் இந்த இணையதளத்தின் மைய நோக்கம்.

இணையத்தில் தகவல்களை பெறுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல.இப்போது கருத்துக்கலை திரட்டுவதும் ஒன்றும் கடினமானதல்ல;எந்த விஷயமாக இருந்தாலும் அது பற்றி ஊர் என்ன நினைக்கிறது உலகம் என்ன நினைக்கிறது என்று அறிந்து கொள்ள உதவும் இணையதளங்கள் இருக்கின்ற‌ன.

இவ்வளவு ஏன் முன்பின் அறியாதவர்களிடம் நேரடியாக கேள்வி கேட்டு கருத்துக்களை அறிய உதவும் தளங்களும் இருக்கின்றன.

ஆனால் அறிமுகம் இல்லாதவர்களி கருத்துக்களை எந்த அளவுக்கு நம்ப முடியும்? அதோடு சில விஷயங்களுக்கு நம்பகமான பதில் தேவை அல்லவா?

அதனால் தான் முன் பின் தெரியாதவர்களிடம் கேட்காமல் தெரிந்த மற்றும் தெரியாத நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்களேன் என்கிறது டவுட’ட் தளம்.

எது குறித்து உங்களுக்கு தகவல் அல்லது கருத்து அல்லது பரிந்துரை தேவையோ அதனை கேள்வியாக இந்த தளத்தின் வாயிலாக கேட்கலாம்.உடனே அந்த கேள்வியை உங்கள் பேஸ்புக் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்கிற‌து.நண்பர்களில் யாருக்கு பதில் தெரிகிற‌தோ அவர்கள் உங்கள் கேள்விக்கு பதில் அளிப்பார்கள்.

நண்பர்களின் பரிந்துரை என்பதால் அது நம்பகமானதாக இருக்கும்!

இந்த சேவையை பயன்ப‌டுத்த முதலில் உறுப்பினராக வேண்டும்.பேஸ்புக் கணக்கு மூலமே உறுப்பினராகலாம்.

அதன் பிறகு எப்போது தேவையோ அப்போது நண்பர்களிடம் ஆலோச‌னை கேட்கலாம்.

கேள்விகள் கருத்துக்கள் என இரண்டு வகையான கேள்விகளை கேட்கலாம்.

இரண்டுக்கும் இரண்டு விதமான படிவங்கள் இருக்கின்றன.கேள்வி கேட்பதற்கான படிவத்தில் என்ன?எங்கே?எதற்காக? என்று மூன்று பகுதியாக கேட்கலாம்.

என்ன என்பது பொருளாகவோ ,இடமாகவோ,சேவையாகவோ இருக்கலாம்.எங்கே என்பது அவற்றை எங்கே வாங்கலாம் என்பது/மூன்றாவது பகுதி அதற்கான காரணங்களை குறிப்பதற்கானது.

உதாரனத்திற்கு சென்னையில் எங்கே சைனீஸ் உணவு வகை நன்றாக இருக்கும் என நீங்கள் கேட்டால்,உங்கள் நண்பர்கள் இடத்தை குறிப்பிட்டு விட்டு அங்கே நான் சுவைத்து மகிழ்ந்திருக்கிறேன் என குறிப்பிடலாம்.இதே போல செல்போன் பற்றியோ வாடகை வீடு பற்றியோ கேட்கலாம்.

கருத்தறிவது என்றால் (இந்த தளம் இதனை டவுட் என குறிப்பிடுகிற‌து)குறுப்பிட்ட நபர் அல்லது இடம் அல்லது பொருள் பற்றிய கருத்துக்களை கேட்கலாம்.

இந்த கேள்விகள் முதலில் உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.அவர்கள் பதில் அளிக்க தயாராக இருந்தால் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.இல்லை என்றால் அவர்களின் நண்பர்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டு பதில் பெற்று தரப்படுகிறது.(இந்த நண்பர்களின் நண்பர்கள் தான் தெரியாத நண்பர்கள்).

இணையத்தில் யாரிடமோ பொத்தம் பொதுவாக கேட்பதை விட உங்கள் நட்பு வட்டத்தில் கேட்டு அவர்களின் அனுபவம் சார்ந்த பதிலை பெற்று தருவது தான் இந்த சேவையின் சிறப்பு.

இதே போன்ற‌ கோரிக்கை உங்களுக்கும் நண்பர்களிடம் இருந்து வரலாம் எனபதை தான் முதலில் கூறிப்பிட்டோம்.அதற்கு நீங்கள் விரும்பினால் பதில் அளிக்கலாம்.இல்லை என்றால் நிராகரித்து விடலாம்.ஆனால் நீங்கள் நிராகரித்தது உங்கள் நண்பர்களுக்கு தெரிய வாய்பில்லை.அதே போல உங்கள் கேள்வியை யாரேனும் நிராகரித்தாலும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.எனவே கசப்புணர்வுக்கு இட்மைல்லை.

பதில் அளித்தால் மட்டுமே தெரிய வரும் .அப்போது சந்தோஷமாக ஓரு தேங்க்யூ சொல்லலாம்.

இணையதள முகவரி;http://toutd.com/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s