இஷ்டம் போல இமெயில் சேவை.

இன்றைய பதிவை நாளைக்கு வெளியாகும் வகையில் செய்வதற்கான வசதி வலைப்பதிவுகளில் இருக்கிறது.அதே போல டிவிட்டரில் குறும்பதிவுகளை விரும்பிய நாளில் விரும்பிய நேரத்தில் வெளியிடுவதற்கான வசதியை அளிக்கும் தளங்களும் இருக்கின்றன.

இதே போன்ற வசதி இமெயிலுக்கும் தேவை என்று நினைத்தால் ரைட் இன் பாக்ஸ் இணையதளம் இதனை வழங்குகிறது.

பிரபலமான ஜிமெயில் சேவையில் செய்லபடக்கூடிய வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம் நீங்கள் இப்போது டைப் செய்த இமெயிலை எப்போது வேண்டுமானாலும் உரியவர்களுக்கு அனுப்பலாம்.

அதாவது வேலையை எல்லாம் முடித்து விட்டு நள்ளிரவு ஒரு மெயிலை டைப் செய்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம் அதனை அந்த நேரத்தில் அனுப்பிவைக்காமல் காலை 8 மணிக்கோ அல்லது 10 மணிக்கோ செல்லும்படி செய்யலாம்.பிரவுசர் இணைப்பாக செயல்படும் இந்த சேவையை பயன்ப்டுத்து போது மெயிலை இப்போதே அனுப்பவா அல்லது பிறகா? என்று கேட்கும்.பிறகு என்றால் எப்போது என குறிப்பிட்டால் அந்த நேரத்தில் மெயில் இன்பாக்ஸ் கதவை தட்டும்.

ஐடி சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.காரணம் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் தொடர்பு கொள்ளும் போது அந்நாட்டுக்கும் நம் நாட்டுக்கும் இடையிலான நேர இடைவெளி சிக்கலாக இருக்கலாம்.ஆனால் இந்த சேவையை பயன்படுத்தி நாம் பகலில் டைப் செய்தாலும் அங்கிருப்பவருக்கு இரவில் போய் சேராமல் காலையில் கிடைக்கும் படி செய்யலாம்.

அது மட்டுமா நமக்கு நாமே நினைவூட்டல் மெயில்களை அனுப்பி வைத்து கொள்ளவும் இதனை பயன்டுத்தலாம்.பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நினைவு படுத்துவது ,மின் கட்டணம்க் செலுத்த நினைவூட்டுவது போன்ற மெயில்களை நாமே அனுப்பி கொள்ளலாம்.

மேலும் நாம் அனுப்பிய இமெயில் எப்போது திறந்து பார்க்கப்படுகிறது என்பதையும் இந்த சேவை கண்டறிந்து சொல்லும்.அதில் உள்ள இணைப்புகள் கிளிக் செய்யப்படுவதையும் சொல்கிறது.

இமெயில் துனை சேவைகளில் மிகவும் சுவாரஸ்யமானது.பயனுள்ளதும் கூட!

http://www.rightinbox.com/

Advertisements

One response to “இஷ்டம் போல இமெயில் சேவை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s