இணையத்தில் வெளியான‌ முதல் புகைப்படம்;ஒரு பிளேஷ்பேக்


இண்டெர்நெட்டில் இன்று புகைப்படங்கள் கொட்டிக்கிடக்கின்றன.புகைப்படங்கள் மட்டும் அல்ல வீடியோ கோப்புகளும் நிறைந்திருக்கின்றன.புகைப்படங்கள் இல்லாத இண்டெர்நெட்டை நினைத்து பார்ப்பது கூட கடினம் என்று சொல்லும் அளவுக்கு இண்டெர்நெட்டும் புகைப்படங்களும் நெருக்கமாக இருக்கின்றன.
ஆனால் இண்டெர்நெட்டில் வெளியான முதல் புகைப்படம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்து பார்தததுண்டா?

இண்டெர்நெட்டில் வெளியான முதல் புகைப்படம் பற்றியும் அது வெளியிடப்பட்ட விதம் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலரும் எதிர்பார்க்க கூடியது போல இண்டெர்நெட்டில் புகைப்படத்தை வெளியிட்டது வலையின் பிதாமகன் டிம் பெர்னர்ஸ் லீ தான்.லீ வெளியிட்ட அந்த புகைப்படம் ஒரு இசை குழுவினுடையது.சாதாரண இசைக்குழு அல்ல.வலையின் முதல் இசைக்குழு.

லெஸ் ஹாரிபில்ஸ் செர்னட்டே என்பது அந்த குழுவின் பெயர்.அந்த குழு மாமுலான இசைக்குவும் கிடையாது.செர்ன் ஆய்வு கூடத்தில் இருந்த பெண் உதவியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் காதலிகள் இணைந்து உருவாக்கிய இசைக்குழு அது.

இந்த குழு உருவான விதமே கூட சுவார்ஸ்யமானது தான்.

சிவிட்சர்லாந்து நாட்டில் உள்ள செர்ன் ஆய்வுக்கூடம் இணைடெர்நெட்டின் தாய் வீடாகும்.ஆம் இண்டெர்நெட்டின் பரவலான வடிவான வைய விரிவு வலை இந்த ஆய்வு கூடத்தில் தான் உதயமானது.

இண்டெர்நெட் உருவாக்கப்பட்ட போது அதில் புகைப்படங்களுக்கு இடமருக்கவில்லை.ஆரம்ப கால இண்டெர்நெடில் எல்லாமே வரிவடிவில் தான் இருந்தன.

வலையை உருவாக்கிய டிம் பெர்னர்ஸ் லீ செர்ன் ஆய்வு கூடத்தில் தான் அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.1992 ம் ஆண்டு வாக்கில் அவர் இண்டெர்நெட்டில் புகைப்படத்தை இடம் பெற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.லீ இண்டெர்நெட்டில் புகைப்படத்தை சேர்க்க விரும்பியதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது.

அது வரை இண்டெர்நெட் என்னும் வலைப்பின்னல் பெரும்பாலும் பல்கலைகழகங்களில் அமைந்திருந்த கம்ப்யூட்டர் வலைப்பின்னல்களுட‌ன் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தது.விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களுமே அதனை பயன்படுத்தி வந்த‌ர்.இவர்கள் மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தப்போகின்றனர் என்ற நம்பிக்கையும் இருந்தது.

ஆனால் லீ இண்டெர்நெட் விஞ்ஞானிகளுகானதாக மட்டும் இல்லாமல் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என நம்பினார்.அந்த எண்ணத்தை மேலதிர்காரிகளும் ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக தான் இண்டெர்நெட்டில் புகைப்படத்தை சேர்க்க விரும்பினார்.விஞ்ஞானம் தொடர்பான ஆய்வு கோப்புகள் மட்டும் அல்லாமல் எல்லோருக்கும் சுவாரஸ்யம் அளிக்ககூடிய விஷயங்கள் அதில் இடம் பெற வைக்க முடியும் என உணர்த்த புகைப்படம் உதவும் என லீ நினைத்தார்.

இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போது தான் லீக்கு ஆய்வு கூட நண்பர் மூலம் செர்னட்டே இசைக்குழுவின் புகைப்படம் கிடைத்தது.

இந்த குழுவில் இடம் பெற்றிருந்த பெண்கள் உற்சாகமாக போஸ் கொடுப்பது போன்ற அந்த புகைப்படத்தை குழுவின் ஆல்பத்தின் வெளியிடுவதற்காக சில்வனோ டெ ஜெனரோ என்னும் அந்த நண்பர் எடுத்திருந்தார்.

லீ அதனை தான் கேட்டு வாங்கி பயன்படுத்தி கொண்டார்.அந்த படமே இண்டெர்நெட்டில் வெளியான முதல் புகைப்படம் என்னும் சிறப்பை பெற்றது.

செர்னட்டே இசைக்குழு உருவான விதம் தொடர்பான் தகவலையும் தெரிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும்.

செர்ன் ஆய்வுக்கூடம் விஞ்ஞானிகளால் நிர்ம்பியது.அங்கு பணியாற்றிய இளம் விஞ்ஞானி ஒருவரின் காதலி அவருக்காக தினமும் காத்திருந்து காத்திருந்து நொந்து போன நிலையில் ஆய்வு கூடத்தில் நடைபெற இருந்த விழாவில் காதலனின் கவனத்தை ஈர்க்க விரும்பினார்.

இதற்கான அவர் சில்வானோவை ஒரு காதல் பாடல் எழுதி தருமாறு கேட்டு தனது தோழிகள் சிலரை சேர்த்து கொண்டு அந்த பாடலை மேடையில் பாடினார்.இப்படி தான் அந்த குழு உருவானது.இக்குழு செர்ன் கலைவிழாக்களில் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருக்கிறது.

செர்ன் இசைக்குழுவுக்காக எழுதப்பட்ட அந்த முதல் பாடல் ஆய்வு கூடத்தில் பயன்படுத்தப்படும் அறிவியல் சொற்களை கொண்டு எழுதப்பட்டது என்பது இன்னும் சுவாரஸ்யமானது.

உனக்கு என் மேல் உண்மையான காதல் இல்லை நீ விரும்புவது எல்லாம் அந்த கொலைடரை(ஆய்வுக்கூட சாத‌னம்) தான் என பொருள்பட அந்த பாடல் அமைந்துள்ளது.

இந்த சுவையான வரலாற்று கதையை இக்குழ்வின் இணையதளத்தில் காணலாம்.இணையத்தின் அந்த காலத்தை நினைவு கூறும் வகையில் இந்த தளத்தையும் அந்த காலத்தின் எச்டிஎமெல் வடிவமைப்பிலேயே வைத்திருக்கின்ற‌னர்.

செர்ன் இசைக்குழு இணைய முகவரி;http://musiclub.web.cern.ch/MusiClub/bands/cernettes/

பிகு;இந்த செய்தி பரபரப்பாக்கப்பட்ட விதம் குறித்தும் லீ பற்றிய கருத்துக்கள் தவறாக திரித்து கூறப்பட்டது பற்றியும் இக்குழுவினர் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளனர்.

Advertisements

3 responses to “இணையத்தில் வெளியான‌ முதல் புகைப்படம்;ஒரு பிளேஷ்பேக்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s