டிவிட்டரில் காதல் லைவ் ரிலே!

திரைப்படங்களில் காதலனோ காதலியோ ஐ லவ் யூ என்று ஊருக்கே கேட்கும் படி உற்சாகமாக கத்தி சொல்லியதுண்டு.சில துடுக்கான காதலர்கள் மைக் வைத்தும் காதலை வெளிப்படுத்தியதுண்டு.எல்லாம் காதலில் புதுமையை புகுத்துவதற்கான இயக்குனர்களின் முயற்சிகள் தான் .

ஆனால் கனடாவில் காதலன் ஒருவர் தனது காதலை டிவிட்டரில் லைவ் ரிலே செய்து ஆயிரக்கணக்கானோரை தனது காதல் யாத்திரையை பின் தொடர வைத்திருக்கிறார்.திரைபட கதைகளையே மிஞ்சி விடும் அளவுக்கு அவரது காதல் கதை சுவாரஸ்யமாகவும் அமைந்திருக்கிறது.

கனடாவின் வின்னிபெக நகரை சேர்ந்த மைக் டுயர்சன் என்னும் அந்த வாலிபர் ஜேனல்லே ப்ரீட் என்னும் அழகான இளம் பெண்ணை காதலித்து வந்தார்.கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன் மலர்ந்து காதல் இது.

மேல்நாட்டினரின் டேட்டிங் கலாச்சாரப்படி இருவரும் சந்தித்து பேசி காதலர்களாகி இருந்தனர்.இந்நிலையில் காதலித்தது போதும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என மைக் தீர்மானித்தார்.தனது திர்மானத்தை காதலியிடம் சொல்லி அவளது சம்மதத்தை பெறுவது என்றும் முடிவு செய்து கொண்டார்.

பொதுவாக காதலர்கள் இப்படி திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்பதை கொஞ்சம் ரொமேன்டிக்காகவே செய்ய விரும்புவார்கள்.முற்றிலும் எதிர்பார்க்காத தருணத்தில் யூகிக்க முடியாத விதத்தில் காதலை சொல்லி திருமணத்திற்காக கையை கோருவதை என்றும் மறக்க முடியாத வகையில் காவியமயமாக்கவே விரும்புவார்கள்.

இந்த ஆனந்த அதிர்ச்சியை காதலிக்கு தருவதற்காக காதலர்கள் ஓராயிரம் புதுமையான வழிகளை கடை பிடித்துள்ளனர்.

மைக்கும் இதே போல புதுமையான வழியை பின்பற்றி தனது காதலை வெளிப்படுத்தி காதலியை ஆச்சர்யத்திலும் ஆனந்ததிலும் ஆழ்த்து அவளது சம்மத்தை பெற விரும்பினார்.இதற்காக அவர் இது வரை யாருமே முயன்றிறாத வழியை தேர்வு செய்தார்.

அந்த வழி டிவிட்டர் வழியே காதலை லைவ் ரிலே செய்வது!

அதாவது ஆயிரம் பேர் படைச்சூழ காதலியிடம் சென்று காதலை சொன்னால் எப்படி இருக்கும்?அதே போல மைக் டிவிட்டர் மூலம் நண்பர்களை பின் தொடர செய்து காதலியிடம் தனது விருப்பத்தை தெரிவிக்க முடிவு செய்தார்.

எப்படி என்றால் காதலியிடம் தனது மனதை தெரிவிக்கும் வரை தான் எடுத்து வைக்கும் ஓவ்வொரு அடியையும் டிவிட்டரில் பகிர்ந்து கொள்வது என முடிவு செய்து கொண்டார்.காதலியிடம் திருமண கோரிக்கையை முன் வைப்பது என தீர்மானித்த அன்று மாலை அவர டிவிட்டரில் இந்த எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

நாளை என் காதலியிடம் என்னை மணக்க சம்மதமா என கேட்கப்போகிறேன்,இந்த பயணத்தை அப்படியே டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளவும் போகிறேன் என்று குறிப்பிட்டிருந்தவர் விருப்பம் உள்ளவர்கள் பின்தொடர வசதியாக மைக் பிரபோசாஸ் என்னும் ஹாஷ்டேகையும் உருவாக்கி இருந்தார்.

அதோடு மறுநாள் தனது காதலியை எங்கெல்லாம் அழைத்து செல்ல திட்டமிட்டிருக்கிறேன் என்ற விவரங்களையும் டிவிட்டர் வழியே குறும்பதிவுகளாக பகிர்ந்து கொண்டவர் தங்கள் காதல் பிளேஷ்பேக்கையும் பகிர்ந்து கொண்டார்.

பராகுவே நாட்டில் தான் அவளை சந்தித்தேன் ,5 ஆயிரம் பேருக்கு மத்தியில் அவளை பார்த்த போதே என்னவள் என்பது தெரிந்து விட்டது என முதல் சந்திப்பை வர்ணித்திருந்தார்.

மைக்கின் இந்த காதல் திட்டத்தை டிவிட்டரில் படித்தவர்களுக்கு அவரது காதல் மீது ஆர்வம் உன்டானது.மனிதர் எப்படி காதலை சொல்கிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு பலர் டிவிட்டரில் அவரை பின் தொடர துவங்கினார்.
மைக்கும் அந்த ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் மறு நாள் காதலியை சந்திததில் துவங்கி அவளோடு செல்லும் இடங்களை எல்லாம் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டே வந்தார்.

அதனை படித்து கொண்டிருந்த பின் தொடர்பாளர்களுக்கு இந்த காதலர்கள் மீது ஈடுபாடும் பிடிப்பும் உண்டானது.திரைப்படத்தில் இளஞ்ஜோடியின் காதல் என்ன ஆகும் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கதையில் ஒன்று விடுவது போல பலரும் மைக்கின் விவரிப்பில் ஒன்றிப்போயினர்.

ஸ்டெல்லா என்னும் பின் தொடர்பாளர் ஒருவர் மைக்கின் காதலை ஜேன் ஏற்று கொள்கிறாளா என்று தெரிந்து கொள்ளும் வரையில் இருக்கும் இடத்தை விட்டு எழுத்திருக்க மாட்டேன் என்று லேப்டாப் முன்னரே அமர்ந்து கொண்டு விட்டார் என்றால் பின் தொடர்பாளர்களின் ஆர்வத்தை புரிந்து கொள்ளுங்கள்.

கிட்டத்தட்ட 12 மணி நேரம் தனது எண்ணங்களை பகிர்ந்து கொன்ட பிறகு மைக் காதலை சொல்லிவிட்டேன்,அவளும் ஏற்று கொண்டு விட்டால் என மகிழ்ச்சியோடு அறிவித்தார்.அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின் தொடர்பாளர்களும் அதை படித்து விட்டு ஒரு காதல் ஜெயித்த மகிழ்ச்சியில் மிதந்தனர்.பலர் டிவிட்டர் மூலமே வாழ்த்தும் தெரிவித்தனர்.

இப்படி பலர் தங்கள் காதல் மிது ஆர்வம் காட்டியதை மைக்கே எதிர்பார்க்கவில்லை.நெகிழ்ச்சியோடு அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்ட மைக் அடுத்த சில நாட்கள் காதலியுடன் மட்டும் கழிக்க போவதாக அறிவித்தார்.அதாவது டிவிட்டர் பதிவுகள் இல்லாமல் காதலியோடு இருக்கப்போவதாக தெரிவித்தார்.

என்ன தான் இருந்தாலும் ஆயிரக்கனக்கானோர் ஒருவரின் காதலில் ஆர்வம் கொண்டு அது வெற்றியில் முடிகிறதா,கல்யாண செய்தி வருகிறதா என காத்திருப்பது மிகவும் சுவாரஸ்யமானது தானே.மைக் டிவிட்டர் மூலம் இந்த சுவாரஸ்யத்தை தேடிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் இதில் மேலும் சுவாரஸ்யம் என்னவென்றால் மைக் இப்படி காதல் பயணத்தை டிவிட்டரில் லைவ் ரிலே செயதது அவரது காதலிக்கு தெரியவே தெரியாதாம்.மைக் அடிக்கடி செல்போனை பயன்படுத்துவதை பார்த்து அவர் முதலில் செல்போனை தூக்கி வீசுங்கள் என்று அன்பு கட்டளை வேறு போட்டிருகிறார்.ஆனால் மைக் தான் சமார்த்தியமாக சமாளித்து தனது காதலை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியிருக்கிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s