சிறுவர்களுக்கான இமெயில் சேவை.

பிறக்கும் போதே குழந்தைகளுக்கு எல்கேஜியில் சீட் வாங்கி விட வேண்டும் என்பதெல்லாம் பழைய ஜோக்.இப்போது இணைய யுகத்தில் பிறக்கும் போதே குழந்தைகளுக்கான டிவிட்டர் முகவரிகளையும் பேஸ்புக் பக்கங்களையும் உருவாக்கி வைக்கும் பழக்கம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

டிவிட்டர் பேஸ்புக் அளவுக்கு ப்துமையாக இல்லாமல் இமெயில் இப்போது கொஞ்சம் அவுட் ஆப் பேஷன் ஆகிவிட்டாலும் பிள்ளைகளுக்காக இமெயில் முகவரிகளை உருவாக்கி வைப்பதும் பெற்றோர்களின் கடமையாக கருதலாம்.

எப்படியும் பிள்ளைகள் வளர்த்துவங்கியதும் இமெயிலை பயன்படுத்தும் தேவை ஏற்படும் என்பதால் முன்கூட்டியே இமெயில் முகவரியை உருவாக்கி வைப்பது நல்ல யோசனை தான்.அவர்களின் பெயருலேயே இமெயில் முகவரி கிடைக்க இப்படி முந்தி கொள்வது அவசியமும் கூட!

சிறுவர்களுக்கான இமெயில் முகவரியின் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் உணர்ந்து வரும் நிலையில் சிறுவர்களுக்காக என்று பிரத்யேகமான இமெயில் சேவை அறிமுகமாகியுள்ளது.

மெயிலி என்னும் பெயரிலான அந்த சேவையை பார்த்ததுமே சிறார்களுக்கு பிடித்து போகும்.பெற்றோர்களுக்கும் பிடித்து போகும்.

சிறார்களுக்கு ஏன் பிடிக்கும் என்றால்,இந்த சேவை அந்த அளவுக்கு வண்ணமயமானதாக இருக்கிறது.

சிறுவர்களுக்கான இமெயில் அவர்களின் உலகிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் அல்லவா?மெயிலி அப்படி தான் இருக்கிறது.

ஜிமெயில் ,பழைய ஹாட்மெயில் போல் எல்லாம் இதில் டைப் செய்து கொண்டிருக்க வேண்டாம்.தூரிகைகளை கொண்டு வரையலாம்.எழுதலாம்.அதற்கு வண்ணமயமான பின்னணியை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆம் சிறுவர்கள் இதில் உள்ள தூரிகையை பயன்படுத்தி வண்ணமயமான சித்திரங்களை வரைந்து வண்ண் பென்சிலால் வாசகங்களை எழுதலாம்.அப்பியே இதில் உள்ள காமிரா மூலம் படங்களையும் கிளிக் செய்து சேர்த்து கொள்ளலாம்.அதன் பிறகு அழகான பின்னணியில் இருந்து பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.

இமெயிலேயே கதை சொல்லலாம்.

சிறுவர்கல் தங்கள் நோட்டு புத்தகத்திலேயே கூட இப்படி சித்திரங்களை வரைந்து மனதில் உள்ள எண்ணங்களை எழுதி பெற்றோரிடம் தருவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.சிறுவர்களுக்கு பிடித்த இதே முறையில் இமெயில் அனுப்ப வழி செய்கிறது மெயிலி.

சிறுவர்கள் தங்களுக்கான இன்பாக்சையும் பெற்று கொண்டு அதில் அப்பா,அமா,தங்கை,தம்பி போன்றோரை சேர்த்து கொள்ளலாம்.இந்த மெயிலில் இருந்து அப்பாவுக்கும் அமாவுக்கும் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மெயில் அனுப்பி மகிழலாம்.

இந்த வண்ணமயமான மெயில் சிறுவர்களையும் பகிழ்ச்சியில் ஆழ்த்தும் அதனை பெறும் தாத்தா பாட்டிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

இந்த மெயிலை பெற்றோர்கள் உருவாக்கி கொடுத்து தங்கள் மேற்பார்வையிலேயே வைத்திருக்கலாம்.அதாவது குழந்தைகள் யாருக்கு மெயில் அனுப்புகின்றனர் என்பதையும் என்ன செய்தியை அனுப்புகின்றனர் என்பதையும் கண்காணித்து கொண்டே இருக்கலாம்.எனவே இந்த மெயில் மிகவும் பாதுகாப்பானது.

சிறுவர்களுக்காக இமெயிலை மறு உருவாக்கம் செய்திருக்கிறோம் என பெருமை பட்டு கொள்ளும் மெயிலி சேவை அருமையானது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இந்த சேவையில் உள்ள ஒரே குறை இது டேப்லெட் என்று சொல்லப்படும் பலகை கணணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது தான்.டேப்லெட்டில் பார்க்கும் போது இதன் அம்சங்களும் வண்ணமயமான வசதிகளும் கண்ணை கவரும் என்றாலும் சாதாரண கம்ப்யூட்டரிலும் அணுக முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என தோன்றலாம்.

இப்படி கவலைப்படுபவர்கள் எற்கனவே உள்ள சிறுவர்களுக்கான இமெயில் சேவைகளை பயன்படுத்தி பார்க்கலாம்.

கிட்ஸ்மெயில்,கிட்ஸ்சேப்மெயில்,சேப்2ரீட் ,கிட்மெயில் போன்ற இமெயில் சேவைகளை முயன்று பார்க்கலாம்.

இணையதள முகவரி;http://www.maily.com/

Advertisements

2 responses to “சிறுவர்களுக்கான இமெயில் சேவை.

  1. Pingback: பயனுள்ள வலைத்தளங்களை அறிமுகப்படுத்தும் வலைப்பதிவு. « chalkpiece·

  2. Pingback: பயனுள்ள வலைத்தளங்களை அறிமுகப்படுத்தும் வலைப்பதிவு. « chalkpiece·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s