இண்டெர்நெட்டில் ஒலிம்பிக்சிற்கு தடை போட‌!

லண்டன் ஒலிம்பிக் கோலகலமாக துவங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் ஜுரம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.இணையத்திலும் எங்கு திரும்பினாலும் ஒலிம்பிக் தான்.

ஒலிம்பிக் போட்டிகளை இணையத்தில் கண்டு களிப்பது எப்படி என வழிகாட்டும் குறிப்புகள்,ஒலிம்பிக்கை பின் தொடர உதவும் இணையதள‌ங்களின் பட்டியல் ஆகியவற்றுக்கும் குறைவில்லை.செய்தி தளங்களை பற்றி கேட்கவே வேண்டாம்,ஒலிம்பிக்கிற்கு என்று தனி பகுதியே அமைக்கப்பட்டுள்ளது.

தேடியந்திரமான கூகுல் வேறு தினம் ஒரு ஒலிம்பிக் லோகோ என கலக்கி கொண்டிருக்கிறது.

ஒலிம்பிக் வீரர்களின் டிவிட்டர் குறும்பதிவுகள் பற்றியும் பரப‌ரப்பாக பேசப்படுகிறது.

விளையாட்டு திருவிழா என்று வர்ணிக்கப்படும் ஒலிம்பிக் தொடர்பான எதிர்பார்ப்பும் பரபரப்பும் புரிந்து கொள்ளக்கூடியது தான்.

இப்படி இணையமே ஒலிம்பிக் மயமாகி இருக்கும் நிலையில் ஒலிம்பிக்கிற்கு எதிராக ஒரு இணைய சேவை அறிமுகமாகியிருக்கிறது தெரியுமா?

ஒலிம்பிக் செய்திகளை உங்கள் பார்வையில் இருந்து முற்றிலுமாக மறைத்து விடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சேவை அது.

எந்த இணையதளத்திற்கு சென்றாலும் ஒலிம்பிக் செய்திகள் கண்ணில் படுவதை விரும்பாத‌வர்கள் (அப்படி எத்தனை பேர் இருப்பார்கள்)பிரவுசரின் நீட்சியாக வரும் இந்த சேவையை டவுண்லோடு செய்து கொண்டால் அதன் பிற‌கு ஒலிம்பிக் தொடர்பான எல்லா செய்திகளும் அவர்கள் பார்வைக்கு முடக்கப்பட்டு விடும்.

ஆக ஒலிம்பிக் பற்றிய கவன‌ சிதறல் இல்லாமல் இணையத்தில் உலா வரலாம்.

ப்ரி ஆர்ட் ஆண்டு டெக்னாலஜி என்னும் தொழிநுட்ப இணையதளம் ஒல்விம்பிக்ஸ் என்னும் பெயரிலான இந்த பிரவுசர் நீட்சி சாதனத்தை உருவாக்கி உள்ளது.

ஒலிம்பிக்ஸ் வந்து விட்டது,எல்லா பெரிய நிகழ்வுகள் போல இப்போதும் இணையத்தில் நாம் விரும்பி செல்லும் இடங்களில் எல்லாம் ஒலிம்பிக்கின் ஆதிக்கம் தான்.என‌வே தடகளம் பற்றி எல்லாம் கவலைப்படாத இணையவாசிகள் வசதிக்காக இந்த சேவையை உருவாக்கி இருப்பதாக இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள‌து.

குரோம்,பயர்பாக்ஸ்,சபாரி ஆகிய பிரவுசர்களில் இது செயல்படுகிறது.

விளையாட்டு பிரியர்களும்,ஒலிம்பிக் ரசிகர்களும் இதனை கொஞ்சம் ஓவர் என கருதலாம்.

ஆனால் விஷயம் என்னவென்றால் இண்டெர்நெட்டில் எல்லாவற்றிற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்த்தும் சேவை இது.

ஒலிம்பிக்கை பின் தொடர‌ விருப்பமில்லாதவர்கள் எல்லா இணையதளங்களிலும் ஒலிம்பிக் பற்றிய செய்திகளே இடம் பெறூம் போது வெறுப்படைய வாய்ப்பிருக்கிற‌து அல்லவா?

அவர்கள் தங்கள் அளவில் ஒலிம்பிக்கிற்கு தடை விதித்து கொள்ள இந்த சேவை வழி செய்கிறது.

விளையாட்டு உணர்வின் உச்சமாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டியை இப்படி விரோதமாக நினைப்பதை ஏற்று கொள்ள முடியாது தான்.ஆனால் குறிப்பிட்ட நிக்ழ்வுகளின் போது எல்லா தளங்களும் அந்த நிகழ்வு பற்றியே பேசுவதும் அலசி ஆராய்வதும் பலருக்கு அயர்ச்சியை தருவது நிச்சயம்.

இது போன்ற நேரங்களில் குறிப்பிட்ட அந்த நிகழ்வுகளை குறிச்சொல் பூட்டு போட்டு முடக்கி விடக்கூடிய பொதுவான ஒரு இணைய தடுப்பு சேவையை உருவாக்கினாலும் நன்றாக தான் இருக்கும்.

இணையதள முகவரி;http://fffff.at/olwimpics/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s