வெள்ளிவிழா காணும் பவர்பாயிண்ட்;ஒரு பிளேஷ்பேக் !

மைக்ரோசாப்ட் போலவே தான் பவர்பாயிண்டும்!

மைக்ரோசாப்ட் எப்படி பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் அதே நேரத்தில் பலரால் வெறுக்கப்படுகிறதோ அதே போலவே அதன் பிரபலமான சாப்ட்வேர்களில் ஒன்றான பவர்பாயிண்டும் உலகம் முழுவதும் பயன்படுத்தபடுகிறது,வெறுக்கப்படுகிறது.

இரண்டுக்குமே ஒரே காரணம் தான்.அது பவர்பாயிண்டு பிரசன்டேஷன்களை சுலபமாக்கியிருப்பது தான்.

காட்சிரீதியாக ஒரு எண்ணத்தை உணர்த்த விரும்பும் எவரும் பவர்பாயிண்டை கொண்டு அழகான காட்சி விளக்கத்தை (பிரசன்டேஷன்)தயார் செய்து விடலாம்.அதன் பின்னே உள்ள ஐடியா நன்றாக இருந்தா விளக்கமும் நன்ராக இருக்கும்.ஆனால் மொக்கை ஐடியாக்களை எல்லாம் எத்தை அழகான ஸ்லைடுகளாக காட்டினாலும் அலுப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

கல்லூரி மாணவர்களில் துவங்கி பேராசிரியர்கள்,நிறுவன அதிகாரிகள் கார்ப்பரேட் தலைவர்கள் என பலரும் பவர்பாயிண்ட் உதவியால் அழகழகான ஸ்லைடுகளால் பொறுமையை சோதித்து வருகின்றனர்.

இதனால் தான் பவர்பாயிண்ட் கேலிக்கும் ஆளாகிறது.காட்சி விளக்கத்தை மிகவும் மலினப்படுத்தி விட்டதாக பலரும் குறை பட்டு கொள்ளும் நிலையும் இருக்கிறது.

பல பவர்பாயிண்ட் விளக்கங்கள் பவர்பாயிண்டா என அலர‌ வைக்கும் நிலை இருந்தாலும் இதற்கு பவர் பாயின்டை பொறுப்பாக்க முடியாது.

அதிலும் பவர்பாயிண்ட் வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் அதனை கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காக்குவது சரியாக இருக்காது.

சாப்ட்வேர்களில் வெற்றிகரமான ஒன்றாக கருதப்பட வேண்டிய பவர்பாயின்ட் 25 ஆண்டுகளை தாக்கு பிடித்து இன்னும் பரவலாக பயன்படுத்தப்படும் சாப்ட்வேராக இருப்பது சாதரண விஷயம் அல்ல!.

எனவே இந்த சாப்ட்வேர் வரலாற்றை கொஞ்சம் கண்ணியத்தோடு திரும்பி பார்க்கலாம்.

பவர்பாயின்ட் மைக்ரோசாப்டிற்கு சொந்தமானது என்பது உலக‌றிந்த விஷ‌யம்.அது மட்டும் அல்லாமல் அது மைக்ரோசாப்டின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறது.விண்டோஸ் என்றால் பவர்பாயிண்டும் இருக்கும்.

ஆனால் பவர்பாயின்ட் மைக்ரோசாப்ட் உருவாகியது இல்லை.வாங்கியது.முதன் முதலில் கையக‌ப்படுத்தியது.

1987 ம் ஆண்டு பவர்பாயிண்டை மைக்ரோசாப்ட் நிறுவனம் கையக‌ப்படுத்தி தன்னோடு இணைத்து கொண்டது.

முதலில் அதற்கு வைக்கப்பட்டிருந்த பெயர் பிரசன்டர்(இது நன்றாகவா இருக்கிற‌து).

தாமஸ் ரட்கின்,டென்னிஸ் ஆஸ்டின் ,மற்றும் ராபர்ட் காஸ்கின்ஸ் ஆகிய மும்மூர்த்திகள் தான் இதனை உருவாக்கியவர்கள்.

அப்போது கம்ப்யூட்டர் உலகம் அதன் பிள்ளை பருவத்தில் இருந்தது.ஆப்பிள் மேக்குகளை அறிமுகம் செய்து பர்சனல் கம்ப்யூட்டருக்கு உயிர் கொடுத்து கொண்டிந்தது.இன்னொரு பக்கம் பில்கேட்ஸ் என்னும் இளைஞர் மைக்ரோசாப்ட்டை உருவாக்கி நடத்தி கொண்டிருந்தார்.

இந்த மும்மூர்த்திகள் போர்தாட் என்னும் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்தனர்.வர்த்தக விளக்கங்களை அளிப்பதற்கான ஸ்லைடுகளை உருவாக்குவதற்கு என ஒரு சாப்ட்வேரை உருவாக்கினால் எதிர்கால கம்ப்யூட்டர் தலைமுறைக்கு ஏற்றதாக இருக்கும் என காஸ்கின்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் ந‌ம்பிக்கையோடு இந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் பவர்பாயின்ட் சாப்ட்வேரை பிரசன்டர் என்னும் பெயரில் உருவாக்கினர்.

முதலில் விண்டோசை மனதில் வைத்து தான் செயல்பட்டனர் என்றாலும் அதில் சில தொழில்நுட்ப சிக்கல் இருந்த்தால் முதலில் ஆப்பிளின் மேக்கில் செயல்படும் வகையில் அதனை உருவாக்கினர்.ஆப்பிளும் அதன் அருமையை உணர்ந்து நிதியுதவி மூலம் ஆதரவு அளித்தது.

பின்னர் மைக்ரோசாப்ட் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தியது.இதன் ப‌யனாக 1987 ல் அதிகார்பூர்வமாக அறிமுகமாவதற்கு ஒரு வார்ம் முன் மைக்ரோசாப்டால் வாங்கப்பட்டது.காப்புரிமை சிக்கலை தவிர்க்க பிரசன்டர் என்பதற்கு பதில் பவ‌ர்பாயின்டு என்று பெயர் சூட்டப்பட்டது.

அதன் பிறகு மற்றெதெல்லாம் வரலாறு அறியும் என சுருக்கமாக சொல்லி விடலாம்.

அதற்கு முன்னர் காட்சி விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றால் மணிக்கக்கணக்காக உடகார்ந்து வாசகங்களை எழுதி வரைப்பட மற்றும் புகைப்படங்களை சேர்த்து ஸ்லைடுகளை கஷ்டப்பட்டு உருவாக்க வேண்டும்.பவர்பாயிண்ட் இதனை சுலபமாக்கி காட்டியது.அதனாலேயே பிரபலமானது.இதுவே வினையானது வேறு விஷயம்.

இந்த 25 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பவர்பாயிண்ட் விளக்கங்கள் கோடிக்ககணக்கில் அளிக்கப்பட்டுள்ளன.

உலகின் நூறு கோடி கம்ப்யூட்டர்களில் அது உட்கார்ந்து கொண்டிருக்கிற‌து.

அது மட்டும் அல்ல மைக்ரோசாப்ட் கையக‌ப்படுத்திய நிறுவனங்களிலேயே பவர்பாயின்ட் தான் லாபகரமானதாக இருக்கிறது.

மைக்ரோசாப்ட் தனது வரலாற்றிலேயே முதன் முறையாக இந்த காலாண்டில் தான் நஷ்டத்தை சந்தித்திருப்பதாகவும் இதற்கு பெரும் செலவில் அது கையக‌ப்படுத்திய சில நிறுவன‌ங்களே காரணம் என்றும் சொல்லப்படும் நிலையில் பவர்பாயின்டின் அருமையை நன்றாக புரிந்து கொள்ளலாம்.

எனவே பவர்பாயின்டை வசைபாடுபவர்கள் கூட அதனை கொஞ்ச்ம வாழ்த்தலாம்.

————–
பவர்பாயிண்டை உருவாக்கிய ராபர்ட் காஸ்கின்சின் இணையதளம்.;http://www.robertgaskins.com/#powerpoint25

————

பவர்பாயின்டு விளக்கங்களை தேட என்றே ஒரு தேடியந்திரம் இருக்கிறது தெரியுமா? http://www.pptsearchengine.net/

Advertisements

2 responses to “வெள்ளிவிழா காணும் பவர்பாயிண்ட்;ஒரு பிளேஷ்பேக் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s