டிவிட்டரில் கலக்கும் 80 வயது பாட்டி.

80 வயதில் டிவிட்டர் மீது ஆர்வம் ஏற்படுவதே பெரிய விஷயம் தான்.டிவிட்டரில் ஆர்வமும் ஏற்பட்டு அதில் முத்திரையும் பதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இன்னும் அரிதானது தான்.

ஆனால் அமெரிக்காவில் 80 வயது பாட்டி ஒருவர் டிவிட்டரில் தீவிர ஆர்வம் காட்டி வருவதோடு தனக்கென 80 ஆயிரம் பின் தொடர்பாளர்களை பெர்று விட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து கொண்டு அதை நோக்கி வேகமாக முன்னேறியும் வருகிறார்.டிவிட்டர் உலகமே அவரது பயணத்தை ஆர்வத்தோடு கவனித்து வருகிறது.

ஜோஸி டிம்பில்ஸ் என்பது தான் அந்த டிவிட்டர் பாட்டியின் பெயர்.ஜே_டிம்ஸ் என்பது அவரது டிவிட்டர் பெயர். இந்த பெயரில் தான் அவர் டிவிட்டர் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

நியுயார்க் அருகே உள்ள ஸ்டேட்டா தீவில் வசிக்கும் இந்த பாட்டிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் டிவிட்டரில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.பாட்டியின் 24 வயது பேரன் பிரான்டிபைன் தான் அவருக்கு டிவிட்டரை அறிமுகம் செய்து பயன்படுத்தவும் சொல்லிக்கொடுத்தது.பாட்டியும் டிவிட்டர் சுவாரஸ்யமாக இருக்கிறதே என நினைத்து அதனை பயன்படுத்த துவங்கி விட்டார்.

வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பதை விட டிவிட்டர் மூலம் உலகை தொடர்பு கொள்வது பாட்டிக்கு பிடித்திருந்தது.ஆகவே ஆர்வத்தோடு டிவிட்டர் மூலம் குறும்பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

பேரன் உதவியோடு டிவிட்டர் செய்யத்துவங்கிய இந்த பாட்டி வெளி உலகின் பார்வைக்கு வரமலே இருந்திருப்பார்.ஆனால் பாட்டியின் டிவிட்டர் லட்சியம் அவரை பிரபலமாக்கி இன்று டிவிட்டர் நடசத்திரமாகவே மாற்றி விட்டது.

பாட்டி கொண்ட லட்சியம் டிவிட்டரில் தனக்கென 80 ஆயிரம் பின் தொடர்பாளர்களை பெறுவது தான்.

டிவிட்டரை பயன்படுத்தும் எவருக்குமே அதிக பின் தொர்பாளர்கள் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பது இயல்பானது தான்.ஆனால் இது அத்தனை சுலபம் இல்லை.ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் பின் தொடர்பாளர்களை பெற வேண்டும் என்றால் பிரபலமாகவோ அல்லது நட்சத்திரமாகவோ இருக்க வேண்டும்.மற்றபடி சாமான்யர்கள் அதிக பின் தொடர்பாளர்களை பெறுவது கொஞ்சம் கடினமானது தான்.

இவ்வளவு ஏன் ஆயிரக்கணக்கில் பின் தொடர்பாளர்களை பெற முடியும் என்ற நம்பிக்கையே கூட எத்தனை பேருக்கு ஏற்படக்கூடும் என்று தெரியவில்லை.

ஆனால் டிவிட்டர் பாட்டி டிம்பில்சுக்கு இந்த எண்ணம் ஏற்பட்டது.டிவிட்டரை சும்மா பயன்படுத்துவதை காட்டிலும் அதற்கு ஒரு இலக்கு தேவை என நினைத்தவர் எப்படியாவது 80 ஆயிரம் பின் தொடர்பாளர்களை சேர்த்து விட வேண்டும் என தீர்மானித்து கொண்டார்.அதாவது அவரது வயதில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு ஆயிரம் என கணக்கு.

எனக்கு 80 வயதாகிறது,எனவே 80 ஆயிரம் பின் தொடர்பாளர்கள் தேவை என்று இந்த இலக்கை தனது டிவிட்டர் பக்கத்திலும் அறிவித்தார்.

இநத அறிவிப்பு பாட்டியை கவனிக்க வைத்ததோடு பின் தொடர்பாளர்களையும் பெற்றுத்தர துவங்கியது.வெகு சுலபமாக பத்தாயிரம்,இருபதாயிரம் என முன்னேறத்துவங்கியவர் இப்போது 70 ஆயிரத்தை கடந்து விட்டார்.

அது மட்டும் அல்ல பாட்டி பிரபலங்களின் கவனிப்பையும் நட்பையும் பெற்றிருக்கிறார்.பாப் பாடகி ரிகானா, கூடைப்பந்து நட்சத்திரம் ராபின்சன் என பல நட்சத்திரங்கள் அவரது பின் தொடர்பாளர்களாக மாறியதோடு பாட்டியின் இலக்கை ஆதரிக்கும் வகையில் அவரது குறும்பதிவுகளை ரி டிவீட்டும் செய்து வருகின்றனர்.

பல நட்சத்திரங்கள் பாட்டிக்கு டிவிட்டர் மூலம் நேரடி செய்தி அனுப்பி ஆதரவும் தெரிவித்துள்ளனர்.அவர்களில் பலர் பாட்டிக்கு நண்பர்களாகவும் மாறி விட்டனர்.அந்த உற்சாகத்தில் பாட்டி எனது தத்து பேரப்பிள்ளைகள் என தனியே ஒரு பட்டியலையும் ஆரம்பித்திருக்கிறார்.அதில் 300 க்க்கும் மேற்பட்ட பிரபலங்கள் அவரது பேரன்களாக உள்ளனர்.

பிரபலங்களை பலரும் தொலைவில் பார்த்தே வியக்க முடியும் என்ற நிலையில் பாட்டியின் இந்த செல்வாக்கு வியப்பானது தான்.சமீபத்தில் கூடைப்பந்து நட்சத்திரம் ராபின்சன் ஒரு போட்டியை நேரில் காண பாட்டிக்கு பிரத்யேக டிக்கெட் அனுப்பியிருந்தார்.பேரனோடு சென்று அந்த போட்டியை பார்த்து ரசித்து விட்டு அந்த அனுபவத்தையும் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

பாட்டியின் டிவிட்டர் குறும்பதிவுகளும் பொதுவில் உற்சாக்மானதாகவே இருக்கிறது.அதோடு கலக்கலாக உடை அணிந்து போஸ் கொடுக்கும் படங்களையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பின்னணியில் இடம் பெற வைத்து வருகிறார்.

இதுவரை 20 ஆயிரம் குறும் பதிவுகளுக்கு மேல் வெளியிட்டுள்ளவர் 5 ஆயிரம் பேருக்கு மேல் பின் தொடர்கிறார்.

80 ஆயிரம் பின் தொடர்பாளர் எண்ணிக்கையை எட்டியதும் தன்னை பின் தொடரும் நட்சத்திரங்களுக்காக தான் உருவாக்கும் புதிர்களை ஏலம் விட்டு நிதி திரட்டி சேவை அமைப்புக்கு தரப்போவதாக பாட்டி சமீபத்திய குறும் பதிவில் தெரிவித்துள்ளார்.பாட்டியின் நம்பிக்கை அப்படி!

https://twitter.com/#!/J_DIMPS

Advertisements

6 responses to “டிவிட்டரில் கலக்கும் 80 வயது பாட்டி.

 1. அன்புடையீர்,
  இந்தியாவிலும் எங்களைப் போன்ற பாட்டிகள் பதிவுகள் எழுதிக் கலக்கி வருகிறோம். திருமதி காமாட்சி (80 வயது)
  ‘சொல்லுகிறேன்’ (chollugiren. wordpress.com) என்ற தலைப்பில் எழுதி வருகிறார்.
  நானும் வலைபூக்கள் பதிவு செய்ய ஆரம்பித்து இன்னும் ஒருவருடம் கூட ஆகவில்லை. அதற்குள் வருகையாளர் எண்ணிக்கை 10,000 கடந்து விட்டது.
  எங்களைப் போன்றவர்களைப் பற்றியும் எழுதுங்கள், ப்ளீஸ்!

  • நிச்சயம் மகிழ்ச்சொயோடு எழுதுகிறேன்.நம்மூர் டிவிட்டர் சாதனையாளர்கள் பற்றிய இது போன்ற தகவலுக்காக தான் காத்திருக்கிறேன்.னேலும் விவரங்களை தெரிவிக்கவும்.

   அன்புடன் சிம்மன்

 2. உங்களது விரைவான பதில் மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
  திருமதி காமாட்சி அவர்களின் இணையதளம் chollukireen.wordpress.com
  எனது இணையத்தளம் ranjaninarayanan.wordpress.com.
  இன்னொருவர் திரு வை. கோபாலக்கிருஷ்ணன்
  என்னைப் பற்றி அறிய: http://ranjaninarayanan.wordpress.com/2012/05/12/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
  நன்றியுடன்,
  ரஞ்ஜனி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s