ஒலிம்பிக் காலி இருக்கை டிவிட்டர் செய்கிற‌து.

ஒரு மரம் டிவிட்டர் செய்திருக்கிறது.காணாமல் போன பாம்பு டிவிட்டர் செய்திருக்கிறது.இப்போது ஒரு காலி இருக்கை டிவிட்டர் செய்து உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஒரு இருக்கை எப்படி டிவிட்டர் செய்யும் என்று கேட்பதற்கில்லை.இருக்கை போல யாரேனும் டிவிட்டர் செய்கின்றனர் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

அதாவது புனை பெயரில் டிவிட்டர் செய்வது போல யார் வேண்டுமானாலும் வேறு ஒரு வஸ்துவின் பின்னே ஒளிந்து கொண்டு அது பேசுவது போல டிவிட்டர் செய்யலாம்.

இப்படி தான் அமெரிக்க விலங்கியல் பூங்காவில் இருந்து பாம்பு ஒன்று காணாமல் போன போது வாலிபர் ஒருவர் அந்த பாம்பின் பெயரில் டிவிட்டர் கணக்கை பதிவு செய்து குறும்ப்திவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி கொஞ்சம் போல இணைய புகழை தேடிக்கொண்டார்.

இப்போது லண்டன் ஒலிம்பிக் நடைபெற்று கொண்டிருக்கும் போது எப்படி இணைய புகழ் தேடிக்கொள்வது என்று அறிந்த புத்திசாலி வாலிபர் ஒருவர் ஒலிம்பிக் அரங்கில் உள்ள காலி இருக்கையை டிவிட்டரில் பேச வைத்திருக்கிறார்.

லண்டன் ஒலிம்பிக் கோலகலமாக துவங்கி நடைபெற்றாலும் பல போட்டிகளுக்கான அரங்கில் காலி இருக்கைகள் அதிகம் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.காலி இருக்கைகளுக்கான காரணம் பற்றிய விவாதம் ஒரு புறம் இருக்க யாரோ ஒருவர் இந்த காலி இருக்கை பேசினால் எப்படி இருக்கும் என்பது போல கற்பனை செய்து காரியத்திலும் இறங்கி விட்டார்.

எம்டி சீட் என்னும் பெயரில் டிவிட்டர் கணக்கை துவக்கியவர் அந்த இருக்கை யாருமற்ற தனிமையில் இருக்கும் மன உண்ரவை குறும்பதிவுகளாக பகிர்ந்து கொள்ள துவங்கினார்.

‘வெறுமையை தவிர வேறு எதையும் உணரவில்லை’ என்னும் அறிமுகத்தை கொண்ட அந்த காலி இருக்கையின் முதல் குறும்பதிவு ஒற்றை வார்த்தையில் அலுப்பாக வெளியானது.அடுத்த குறும்பதிவு நான் மிகவும் மன அயர்ச்சியோடு இருக்கிறேன் என வெளியானது.

நான் மிகவும் வெறுமையாக இருக்கிறேன் என அதன் நான்காவது குறும்பதிவு அமைந்திருந்தது.

அதன் பிறகு தான் அந்த காலி இருக்கை தன மனதை திறக்க துவங்கியது.

ஒலிம்பிக் இருக்கையாக வேண்டும் என்பது என்பது வாழ் நாள் லட்சியம்.ஊக்கமும் உற்சாகமும் கொண்ட விளையாட்டு ரசிகருக்கு இருக்கையாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.ஆனால் இப்போதோ ஒரு தோல்வியாக உண்ர்கிறேன்.

இப்படி வேதனையை வெளிப்படுத்திய அந்த இருக்கை அடுத்த குறும்பதிவில் ” அம்மா என் வாழ்க்கை ஒரு ஐகியா இருக்கை போல நிலையானதாக இருக்க வேண்டும் என விரும்பினால் ஆனால் நான் தான் லட்சிய இருக்கையாக வேண்டும் என‌ விரும்பினேன்” என குறை பட்டு கொண்டது.

என தாத்தா 1948 ஒலிம்பிக்கில் இருக்கையாக இருந்தது பற்றி பெருமையோடு கூறியுள்ளார்.அவர் வழியை தான் நான் பின்பற்றியிருக்கிறேன் என அடுத்த குறும்பதிவு அமைந்திருந்தது.

இந்த தருணத்திற்காக தான் 7 ஆண்டுகளாக காத்திருந்தேன் ஆனால் எல்லாம் எதற்காக? என ஒலிம்பிக்கிறகாக லண்டன் 7 ஆண்டுகளாக தயாராகி வந்ததை சுட்டிகாட்டி அமைந்த அடுத்த பதிவு காலி இருக்கையின் வேதனையை இன்னும் கூடுதலாகவே வெளிப்படுத்தி ‘நான் மாபெரும் தோல்வியாக உணர்கிறேன்’ என அடுத்த பதிவில் அழுது புலம்பியது.

தொடர்ந்து வெளியான குறும்பதிவுகள் சுவாரஸ்யமாகவே இருந்தன.எல்லாம் காலி இருக்கை பேசுவது போலவே இருந்தன.

ஒரு வேளை நான் பீச் வாலிபால் போன்ற விளையாட்டு அரங்கை தேர்வு செய்திருக்க வேண்டுமோ ?இப்படி ஒரு குறும்பதிவு.

இன்று மூன்றாவது நாள்;இன்னும் வெறுமை.இது ஒரு குறும்பதிவு.

இந்த வெறுமை யார் தவறு;எல்லோரும் நிர்வாகிகளை குறை சொல்கின்றனர்.ஆனால் நான் என்ன்னையே நொந்து கொள்கிறேன்.இது இன்னொரு குறும்பதிவு.

இதனிடயே பிரிட்டன் தங்கப்பதக்கம் வென்ற‌ செய்தியையும் பகிர்ந்து கொண்டது.அருகே வந்த ஒருவர் தள்ளி போய் வேறிடத்தில் அமர்ந்த ஏமாற்றத்தையும் பகிர்ந்து கொண்டது.

5 வது நாள் அன்று நாளை எனது நாளாக இருக்கலாம் என்ற‌ நம்பிக்கையை வெளியிட்டது.

இதற்குள் காலி இருக்கை டிவிட்டரில் பிரபலமாகி விட்டது.ஆம் அதற்கு 20 ஆயிரம் பின் தொடர்பாளர்கள் உண்டாகி விட்டனர்.டிவிட்டரில் நுழைந்த சில நாட்களிலெயே பல்லாயிரக்கணக்கில் ஆதரவு கிடைப்பது நட்சத்திரங்களுக்கு மட்டுமே சாத்தியம் .ஆனால் காலி இருக்கையும் இந்த அந்தஸ்தை பெற்று விட்டது.

இந்த ஆதரவையும் குறும்பதிவாக பகிர்ந்து கொண்ட இருக்கை ஒருவழியாக ஒருவர் தன் மீது அமர்ந்து விட்ட மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டது.

ஆனால் அடுத்த சில குறும்பதிவுகளிலேயே இனியும் நான் ஒலிம்பிக் இருக்கையாக இருக்க விரும்பவில்லை என்னும் மன மாற்றத்தை வெளியிட்டது.பின்னர் இருக்கையாக இருப்பதில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்தது.

நிச்சயம் அதன் பின் தொடர்பாளர்கள் அனைவரும் இந்த குறும்பதிவுகளை ரசித்திருப்பார்கள்.

ஒரு சிறு கதை போல இந்த குறும்பதிவுகள் அழகாக இல்லை.

டிவிட்டரில் வெற்றி பெற வேண்டும் என்றால் இது தான் சுட்சமம்.

கொஞ்சம் படைப்பற்றல் கொஞ்சம் கற்பனை போதும் டிவிட்டரில் நீங்களும் பிரபலமாகலாம்.

காலி இருக்கையின் டிவிட்டர் முகவரி;https://twitter.com/OlympicSeat

Advertisements

2 responses to “ஒலிம்பிக் காலி இருக்கை டிவிட்டர் செய்கிற‌து.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s