கண்டோம் கடவுளை!இனி அடுத்தது என்ன?

அந்த அறிவிப்பை கேட்டு ஆத்திகர்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்.நாத்திகர்களோ உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.சாமான்யர்களோ என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள முடியானல் குழம்பித்தவித்தனர்.விஞ்ஞானிகளோ ஆனந்தத்தில் திளைத்தாலும் கவனம் தேவை என்று நிதானம் காத்தனர்.
ஜூலை நான்காம் தேதி வெளியிடப்பட்ட ‘கடவுகள் துகள்’ கண்டுபிடிக்கப்பட்டதற்கான அறிவிப்பு ஏற்படுத்திய எதிர்வினைகள் தான் இவை.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள செர்ன் ஆய்வு கூடத்தில் விஞ்ஞானிகள் இந்த அறிவிப்பை வெளியிட்ட போது மனித குலத்தின் அறிவியல் பயணத்தில் மற்றொரு மைல்கல் சாதனையாக இது கருதப்பட்டது.ஒரு விதத்தில் இது வரை நிகழ்த்தப்பட்ட விஞ்ஞான சாதனைகளை எல்லாம் மிஞ்சி நிற்க கூடிய சாதனை இது.பிரபஞ்சம் பற்றிய நமது புரிதலையே மாற்றி அமைக்க கூடியதாகவும் கருதப்படுகிறது.
கடவுள் துகளை கன்டுபிடிக்கப்பட்டது கடவுளையே கன்டுபிடித்து விட்டது போன்ற பரபரப்பையும் உண்டாக்கியது.அதாவது கடவுள் இடத்தை நிரப்பக்கூடிய
அடிப்படை துகளை கண்டுபிடித்து விட்டதாக கருதப்பட்டது.
ஹிக்ஸ் போசன் என்ற விஞ்ஞான பெயரில் அழைக்கப்படும் கடவுள் துகள் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அதன் உள்ளடக்கம் பற்றி விளக்ககூடியதாக கருதப்படுவதால் இது விஞ்ஞானிகள் வசம் சிக்கியது கடவுளே மனிதன் கைகளில் அகப்பட்டது போல கருதப்பட்டாலும் இந்த கண்டுபிடிப்பு உணர்த்தும் உண்மை இவ்வாறு எளிமைபடுத்தி விடக்கூடியது அல்ல.
முதலில் பரவலாக புரிந்து கொள்ளப்படுவது போல கடவுள் துகளை விஞ்ஞானிகல் கண்டுபிடித்து விடவில்லை.அந்த துகளுக்கான ஆதாரத்தை தான் கண்டுபிடித்துள்ளனர்.அதுவும் 100 சதவீதம் துல்லியத்துடன் இல்லை.விஞ்ஞானிகள் மொழியில் 99.999 சதவீத உறுதியுடன்!.இந்த நுடபமான வேறுபாடு போலவே கடவுள் துகள் ஆயவும் மிக மிக நுட்பமான விஷயங்களை கொண்டிருக்கிறது.
எல்லாம் சரி கடவுள் துகள் என்றால் என்ன?விஞ்ஞான ஆய்வில் அதன் முக்கியத்துவம் என்ன?இந்த கண்டுபிடிப்பு இத்தனை பரபரப்பை ஏற்படுத்தியது ஏன்?
பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் கண்ணுக்கு தெரியாத அணுக்களால் ஆகியிருக்கிறது.அணுக்களின் இருப்பை தெரிந்து கொள்ளவே மனித குலத்துக்கு கால அவகாசம் தேவைப்பட்டது.அணுக்களை புரிந்து கொள்ள முற்பட்ட போது அணுக்கள் இறுதியானவை அல்ல அவற்றினும் சிறிய துகள்களான புரோட்டான்,எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான் ஆகிய மூன்று அடிப்படை துகள்களால் ஆகியிருக்கும் உண்மையை உலகம் தெரிந்து கொண்டது.
ஆனால் அணுவின் அதிசயம் இத்தோடு நின்றுவிடவில்லை.அதன் சூடசமத்தை அறிந்து கொள்வதற்கான ஆய்வு புரோட்டான்,எலக்ட்ரான் தவிர குவார்க்ஸ்,லெப்டான்,போட்டான்,குலோவான் போன்ற அடிப்படை துகள்களும் அணுவுக்குள் இருப்பதும் தெரிய வந்தது.
இவை அனைத்தும் அணுவுக்குள் உள்ள உப துகள்களாக கருதப்படுகின்றன.அதாவது அணுவுக்குள் உள்ள அணு துகள்கள்.இநத் அணுத்துகள்களின் சேர்க்கையின் மூலம் தான் அணுவின் உறுப்புக்களான ப்ரோட்டன்களும் நியூட்ரான்களும் உருவாகியிருக்கின்றன.உதாரணத்திற்கு ஒரு புரோட்டான் மூன்று குவார்களின் சேர்க்கையால் ஆகியிருக்கிறது.அந்த மூன்று குவார்க்குகளையும் குலோவான்கள் இறுக பற்றியிருக்கின்றன.
இவ்வாறு 14 அடிப்படையான துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன.இவை குவார்க்ஸ்,லெப்டான்,பெசான்ஸ் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த 14 அணுத்துகள்கள் தான் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் அடிப்படையாக கருதப்படுகிறது.இவற்றை கொண்டு அணுக்களின் உலகை விவரிக்க உருவாக்கப்பட்ட மாதிரியே அடிப்படை மாதிரி (ஸ்டான்டர்டு மாடல்)என அழைக்கப்படுகிறது.
1950 களில் இந்த கோட்பாடு முன்வைக்கப்பட்டது.பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் இந்த கோட்பாட்டினால் விளங்கி கொள்ள முடியும் என்று விஞ்ஞான உலகம் நம்புகிறது.
பிரபஞ்சத்தின் தோற்றம் என்றால் ஆதியில் எல்லாம் எப்படி உருவானது என்பது தான்.அதாவது முதன் முதலில் எந்த புள்ளியில் இருந்து பிரபஞ்சம் உண்டானது என்னும் கேள்விக்கான பதில்.
கடவுள் உலகை படைத்தார் என்று சொல்லப்பட்டாலும் பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன் திடிரென ஒரு பெருவெடிப்பு ஏற்பட்டு அப்போது அளப்பறிய ஆற்றலும் வெப்பமும் வெளிப்பட்டு அவை குளிர்ர்ந்த போது கோள்களும் நட்சத்திரங்களும் இந்த உலகமும் உருவானதாக கருதப்படுகிறது.இந்த ஆதார நிகழ்வு பிக் பேங் என்று குறிப்பிடப்படுகிறது.
பிக் பேங் என்னும் பெருவெடிப்பின் மூலமே பிரபஞ்சம் உண்டானதாக சொல்லப்படும் கோட்பாடு அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இந்த கோட்பாட்டை முழுமையாக புரிந்து கொள்வதில் பல கேள்விகளுக்கு பதில்கள் தேவைப்படுகின்றன.
அவற்றில் ஒன்று தான் கடவுள் துகளுக்கான தேடல்.பெருவெடிப்புக்கு முன் எதுவுமே இருக்கவில்லை.காலமும் இல்லை.இடமும் இல்லை.பொருளும் இல்லை.இந்த இல்லை என்னும் நிலையில் இருந்து எல்லையில்லாமல் சுருங்கி செல்லகூடிய மைய புள்ளியில் இருந்து பெரு வெடிப்பு உண்டாகி பிரபஞ்சம் பிறந்தது.அதன் பின் தான் அணுவும் வந்தது,அகிலமும் வந்தது.அண்டமும் வந்தது.
ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆதார சக்தி கிடைத்தது எப்படி?
இந்த கேள்வி தான் கடவுள் துகளை தேட வைத்தது.பிரபஞ்சத்தின் அடிப்படையான அணுக்களின் அடிப்படையான புரோட்டான்களும் இதர துகள்களும் குறிப்பிட்ட தன்மை கொண்டவை.நிறை கொண்டவை.
ஆனால் பெருவெடிப்பின் போது எல்லா துகள்களும் ஒலியை மிஞ்சும் வேகத்தில் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தன.அந்த வேகத்தில் அவற்றுக்கு நிறை என எதுவும் இருக்கவில்லை.நிறை இல்லாததால் அவற்றின் மூலம் அணுத்துகள்களும் அணுக்களும் உருவாக வாய்ப்பிருக்கவில்லை.
இதன் பொருள் பெருவெடிப்பு நிகழ்ந்த உடன் எல்லாமே அலைபாய்ந்து கொண்டிருந்தனவே தவிர எதுவும் உருவாக வாய்ப்பிருந்திருகாது என்பது தான்.
இதற்கு மாறாக பிரபஞ்சம் எப்படி உருவானது என்றால் பெருவெடிப்பினால் அலை பாய்ந்து கொண்டிருந்த நிறையில்லா போட்டான்களும் குவார்க்குகளும் ஒரு மாய சக்தியுடன் கூட்டணியால் நிறையை பெற்றன.அதன் பின்னரே கோள்கலும் பிரபஞ்சமும் உண்டானது.
அந்த மாய சக்தி தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையான துகள்.ஹிக்ஸ் பாசன் துகள்.இதுவே கடவுள் துகள் எனப்படுகிரது.
மற்ற எல்லா அணுத்துகள்களும் கண்டறியப்பட்டு அவற்றின் தனமைகளும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன.ஆனால் ஹிக்ஸ் போசன் இருப்பு மற்றும் உறுதி செய்யப்படவில்லை.
இந்டஹ் ஹிக்ஸ் போசன் துகளின் இருப்பு பற்றி முதன் முதலில் தெரிவித்தது பீட்டர் ஹிக்ஸ் என்னும் விஞ்ஞானி.(இதில் இந்திய விஞ்சானி சத்யேந்திர போசின் பங்களிப்பும் இருக்கிறது.)1964 ம் ஆண்டு இது பற்றிய கட்டுரையை அவர் வெளியிட்டார்.
இந்த துகள் இருந்தால் தான் அடிப்படை கோட்பாடு செல்லுபடியாகும்.எனவே கடந்த 50 ஆண்டுகளாக விஞ்ஞான உலகம் இந்த துகளை கண்டறிவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது.
இந்த இடத்தில் கொஞ்சம் கவனம் தேவை.துகள் என்னும் போதே ஏதோ கண்ணுக்கு தெரியாத அளவில் நுண்ணிய ஒரு வஸ்து என்பதை அணுமானித்து கொள்ளலாம்.ஆனால் இந்த துகளோ அதனினும் நுண்ணியது.புரோட்டான் போன்றவற்றை கூட ஆய்வு கூடத்தில் பிடித்து நிறுத்து விடலாம்.ஆனால் கடவுள் துகளை பிடிப்பது என்பது சாத்தியமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
காரணம் இந்த துகள் புரோட்டான்களை விட 200 மடங்கு நிறை கொண்டதாக கருதப்பட்டாலும் அவை தோன்றும் போதே மறைந்து விடும் தன்மை கொண்டவை.அதாவது கண்ணிமைக்கும் நேரம் என்பார்களோ அதில் நூறு கோடியில் ஒரு பகுதி அதில் நூறு கோடியில் ஒரு பகுதி நேரமே இவை இருக்கும் அதன் பிறகு வேறு வடிவில் அழிவுக்கு உள்ளாகி விடும்.
ஒரு நொடியின் நூறு கோடியின் ஒரு பகுதியின் நூறு கோடியில் ஒரு பகுதி எனனும் நேர பரப்பை நம்மால் கற்பனை செய்து பார்த்தாலே தலை சுற்றிவிடும்.சும்மாவா பெருவெடிப்பு உண்டான ஒரு நொடியின் நூறு கோடியின் ஒரு பகுதிக்குள் இந்த கடவுள் துகள் தலையை காட்டி எல்லாவற்றுக்கும் ஆதாரமாக அமைந்ததாக நவீன விஞ்ஞானம் சொல்கிறது.
எனவே இப்படிப்பட்ட சிறுமைப்பட்ட துகளை எப்படி கண்டறிவது சாத்தியம்?
இந்த விஞ்ஞான சவாலை தான் பூமிக்கு அடியில் 27 மீட்டர் அளவிலான குகை அமைத்து அதில் அதி குளிர்ந்த காந்த தடுப்புக்களை ஏற்படுத்து அவர்றின் நடுவே புரோட்டான்களை ஒளிக்கு நிகரான வேகத்தில் மோதவிட்டு அப்போது உருவான விளைவுகளை கணக்கு போட்டு கடவுள் துகளின் இருப்பை கண்டுபிடிக்க முயன்றுள்ளனர்.
அதாவது பூவுக்குள் பூகம்பம் என்று சொல்வது போல குகைக்குள் ஆதியில் நிகழந்த பெருவெடிப்புக்கு நிகரான நிலையை உருவாக்கி கடவுள் துகளை சிக்க வைக்க முயன்றுள்ளனர்.
இதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது என்றதும் ஏதோ பொறியில் சிக்கிய எலி போல அந்த துகள் சிக்கியதாக நினைப்பது சரியாக இருக்காது.அது தான் தோன்றும் போதே வேறு வடிவில் மாறிவிட்டதே.
விஞ்ஞானிகள் செய்தது என்னவென்றால் இந்த துகள் ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் விளைவுகளை கொண்டு அதன் இருப்புக்கான ஆதாரங்களை தேடியது தான்.அந்த ஆதாரங்களும் சும்மா கிடைத்துவிடவில்லை.புரோட்டான்களின் மோதல் தொடர்பான லட்சக்கணக்கான தகவல்கள் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களால் அலசி ஆராயப்பட்டு பெறப்பட்டுள்ளன.
இந்த முடிவுகளையும் விஞ்ஞானிகள் இரண்டு வருட காலமாக அலசிக்கொண்டிருந்தனர்.கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் ஓரளவு சாதகமான தகவல்கள் கையில் கிடைத்த போது கடவுள் துகளின் இருப்பை நெருங்கி விட்டதாக உணர்ந்தனர்.ஆனால் இதனை உறுதிப்படுத்தி கொள்ள மேலும் விவரங்கள் தேவைப்பட்டன.
அவை கையில் கிடைக்கவே நம்பிக்கை வலுப்பட்டது.இவற்றின் சிகரமாக தான் ஜூலை 4 ல் கடவுள் துகள் இருப்புக்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக அறிவித்தனர்.
ஆக இது வரை கோட்பாடு நோக்கில் மட்டுமே இருந்து வந்த ஹிக்ஸ் போசன் துகளுக்கான சான்று முதல் முறையாக விஞ்ஞான உலகின் கையில் கிடைத்திருக்கிறது.இதன் மூலம் அடிப்படை மாதிரியில் இருந்த முக்கிய ஒட்டை அடைக்கப்பட்டு விட்டது.பிரபஞ்சத்துக்கான விளக்கத்தில் அடிப்படையான சக்தியும் கிடைத்துள்ளது.
எல்லாம் சரி கடவுள் துகள் கிடைத்து விட்டதால் கடவுளுக்கு நிகரான சக்தியை கண்டுபிடித்ததாக கருதலாமா?பிரபஞசத்தின் படைப்பு ரகசியத்தை இனி எளிதாக புரிந்து கொண்டுவிடலாமா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் சுலபமான பதில்கள் கிடையாது.
கடவுளின் மனதை கண்டுபிடித்து விட்டதாகவும் பெருமை பட்டு கொள்ள முடியாது.அதை நோக்கி முக்கிய அடி எடுத்து வைத்திருக்கிறோம்.பிரபஞ்சத்தில் இன்னும் பிடிபடாத மர்மங்கள் நிறைய உள்ளன.
ஹிக்ஸ் போசன் துகள் போலவே இன்னும் ஒரு துகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.அதனை கண்டுபிடிக்க வேண்டும்.ஆம் இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே அதன் நேர் எதிர் தன்மை கொண்ட பொருளோடு இருப்பதாக ஒரு கோட்பாடு இருக்கிரது.அதனை பரிசோத்தித்து பார்க்க வேண்டும்.இவை ஆன்டி மேட்டர் என்று சொல்லப்படுகிரது.
மேலும் பிரபஞ்சத்தில் ஊடுறுவி இருக்கும் கருப்பு வஸ்துவின் தன்மை என்ன என்று தெரியவில்லை.இவ்வளவு ஏன் பூவி ஈர்ப்பு சக்தி குறித்தே இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை காண வேண்டும்.
ஆனால் இந்த ஆய்வு பயணத்தில் முக்கிய ஊக்கமாக விளங்க கூடிய ஒன்றாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

———–

புதிதாக உதயமாகியுள்ள பரிவு மாத இதழுக்காக எழுதியது.

நன்றி;‍ப‌ரிவு

Advertisements

15 responses to “கண்டோம் கடவுளை!இனி அடுத்தது என்ன?

  1. நல்ல அறிவியல் கட்டுரை தந்தமைக்கு நன்றி. பிரபஞ்சத்திற்கு எல்லை அறியும் வரை கடவுள் துகள் ஆராய்ச்சி நீண்ட வண்ணம் தான் இருக்கும்.

  2. அருமையான கட்டுரை. இது போன்ற கட்டுரைகளை எளிய தமிழில் அனைவராலும் புரிந்துகொள்ள தக்க வகையில் கொடுப்பது தாங்கள் மட்டுமே.சேவை தொடர வாழ்த்துக்கள். ழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s