லண்டன் ஒலிம்பிக்கின் அற்புத தருணம்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் மறக்க முடியாத தருணங்களில் தொலைந்து போன டிக்கெட் டிவிட்டர் மூலம் திரும்பி கிடைத்த அற்புதத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும்.இந்த சம்பவம் டிவிட்டரின் ஆற்றலை உணர்த்துவதாக அமைந்ததோடு மனிதநேயம் மிச்சமிருப்பதறகான அடையாளமாகவும் அமைந்தது.

நடந்தது இது தான்!

ஒலிம்பிக்கில் தடகள போட்டிகளை காண்பதற்கான டிக்கெட்டை வாங்கியிருந்த மைக் போவக் என்பவர் அதனை எப்படியோ தவற விட்டு விட்டார்.கன்டா நாட்டு வாலிபரான் போவக் தனது அறைக்கு திரும்பிய பின்னர் தான் கையில் டிக்கெட் இல்லாததை உணர்ந்திருக்கிறார்.

அறை முழுவதையும் தேடிப்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.டிக்கெட்டை காண‌வில்லை.

இப்படி டிக்கெட்களை தவற விடுவதும் தொலைத்து விட்டு தேடுவதும் வாழ்க்கையில் பலருக்கும் நடப்பது தான்.ஆனால் தொலைந்து போனவை திரும்ப கிடைப்பது என்பது சில நேரங்களில் அரிதானது சில நேரங்களில் அதிர்ஷ்டமானது.பல நேரங்களில் ஏமாற்றம் தரக்கூடியது.

போவக் டிக்கெட்டை காணவில்லை என அறிந்ததும் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை.ஆனால் ஏதோ ஒரு ந‌ம்பிக்கையில் அவர் இண்டெர்நெட்டுக்கு சென்று தொலைந்து போன டிக்கெட் என டைப் செய்து பார்த்தார்.

ஆனால் நிச்சயம் ஒரு அற்புதம் காத்திருக்கும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.21 ம் நூற்றாண்டின் அற்புதம் அது.இணைய அற்புதம்.

யாரேனும் ஒலிம்பிக் டிக்கெட்டை தவற விட்டு விட்டீர்களா? என்னும் குறும்பதிவு முதல் முடியாக மின்னிக்கொண்டிருந்தது.அவர் டிக்கெட்டை தவற விட்ட இடத்தை சுட்டிக்காட்டிய அந்த குறும்பதிவை பார்த்ததுமே போவக்கிற்கு நம்ப முடியாமல் இருந்தது.

அந்த குறும்பதிவை வெளியிட்டவர் கேமருன் மான்டகோமரி .ஆஸ்திரேலியரான மான்டகோமரி லண்டனில் 3 ஆண்டுகளுக்கு முன் குடியேறியிருந்தார்.லண்டனின் பாரிங்டன் ரெயில் நிலையத்தில் அவர் அன்றைய தினம் காலை ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட்டை கண்டெடுத்தார்.

தடகள போட்டியின் முதல் நாள் நிகழ்வுக்கான அந்த டிக்கெட்டை கண்டெடுத்ததும் அதிர்ஷம் அடித்தது என நினைத்து தானே அந்த டிக்கெட்டில் போட்டியை காண சென்றிருக்கலாம்.

ஆனால் மான்ட்கோமரி அவ்வாறு நினைக்கவில்லை.அந்த டிக்கெட்டை உரியவரிடம் எப்படியாவது ஒப்படைக்க விரும்பினார்.ஆனால் எப்படி?

டிக்கெட்டை தவறவிட்டது யார் என்பது தெரியாது.அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியாது.இந்த நிலையில் அதனை உரியவரிடம் ஒப்படைப்பது எப்படி?

இதியெல்லாம் யோசித்து பார்த்து சரி இதெல்லாம் சரிபட்டு வராது என அவர் தன் வேலையை பார்க்க சென்றிருக்கலாம்.

ஆனால் மான்டகோமரி எப்படியாவது முயன்று பார்க்க தீர்மானித்தார்.

ஒலிம்பிக் போட்டியின் எல்லா டிக்கெட்களிலும் அதனை வாங்கியவரின் பெயர் அச்சிடப்பட்டிருக்கும்.அந்த டிக்கெட்டிலும் பெயர் இருந்தது.அந்த பெயருக்குறியவரை கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்ப்பதற்காக அவர் பேஸ்புக் கூகுல் பிலஸ், கூகுல்,டிவிட்டர் ,லிங்க்டின் போன்ற தளங்களில் அந்த பெயரை டைப் செய்டு தேடிப்பார்த்தார்.

இந்த தேடல்கள் எந்த பலனையும் தரவில்லை.அப்போது தான் டிகெட்டை வாங்கியது தவறவிட்டவராக இல்லாமல் அவரது நண்பராக கூட இருக்கலாமே என்ற‌ எண்ணம் தோன்றியது.

இது நிலமையை மேலும் சிக்கலாக்கியது.இருந்தும் மான்டகோமரி நம்பிக்கையோடு மேலும் முயன்று பார்க்க தீர்மானித்து டிவிட்டரின் உதவியை நாடினார்.

அப்படி அவர் வெளியிட்ட குறும்பதிவு தான் போவக் பார்த்தது.

போவக் அதனை உடனே பார்த்து விடவில்லை.அந்த குறும்பதிவு அவர் கண்ணில் படுவதற்கு சில மணி நேரங்கள் ஆனது.அது வரை மான்டகோமரி டிக்கெட்டுக்கு உரியவரை கண்டுபிடிப்பதற்கான தேடலில் தீவிரமாக இருந்தார்.

தனது குறும்பதிவுக்கு எந்த பதிலும் கிடைக்காதது கண்டு அவர் பிபிசி போன்ற செய்தி தளங்களுக்கு அந்த செய்தியை குறும்பதிவு செய்தார்.அவை அதனை மறு பதிவிட்டன.இதனால் மேலும் பலரை அது சென்ற‌டைந்தது.

இதற்குள் பலரும் உரியவரை கண்டுபிடிப்பது கடினம் ,நீங்களே அந்த டிக்கெட்டை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறினர்.மான்டகோமரி தனது நோக்கத்தில் உறுதியாக இருந்தார்.

அந்த உறுதியின் பலனாக தான் டிக்கெட்டை தவறவிட்ட போவக் அந்த குறும்பதிவை பார்த்தார்.

உடனே அவர் பரபரப்போடு,அது எனது டிக்கெட்டாக இருக்க வேண்டும்.தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளுங்களேன் நான் ஆதாரங்களை தருகிறேன் என்று பதில் தெரிவித்தார்.

அதன் பிறகு ஒரு இமெயில் மற்றும் பத்து நிமிடங்களில் டிக்கெட் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

எதிர்பார்க்க கூடியது போலவே தொலைந்த டிக்கெட் மீண்டும் கிடைத்தது போவக்கை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.அதிலும் ஒருவர் அதனை தன்னிடம் ஒப்படைக்க இந்த அளவுக்கு முயன்றது நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மனிதநேயம் மீதான எனது நம்பிக்கையை இது மெய்பித்துள்ளது என அவர் டிவிட்டரில் அந்த நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

மான்டகோமரியோ லண்டன் போன்ற பெரு நகரில் உங்கள் பக்கம் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.அது தான் நல்ல மனதை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்த போது அதனை பயன்படுத்தி கொண்டேன் என்று அடக்கத்தோடு குறிப்பிட்டிருந்தார்.

நல்ல மனதோடு டிவிட்டரை பயன்படுத்திக்கொள்ளும் புத்திசாலித்தனமும் அவரிட‌ம் இருந்ததை பாராட்ட வேண்டும் .

————-
http://twitter.com/patternr

http://twitter.com/mikeboag

Advertisements

One response to “லண்டன் ஒலிம்பிக்கின் அற்புத தருணம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s