இந்திய அணிக்கு டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்.

ஜுனியர் உலக கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது.அதுவும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி.மகத்தான சாதனை தான் இது.

ஒரு விதத்தில் பார்க்கப்போனால் 2011 ல் டோனி தலைமையிலான அணி 26 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலககோப்பையை வென்றதை விட இது முக்கியமானது.காரணம் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம் எத்தனை பிர்காசமாக இருக்கிறது என்பதற்கான அடையாளமாக இந்த வெற்றி அமைந்துள்ளது.

கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள இந்திய இளம் அணி இப்போது டிவிட்டரில் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறது.கிரிக்கெட் நட்சத்திரங்கள்,முன்னாள் வீரர்கள்,கிரிக்கெட் நிர்வாகிகள்,தொழிலதிபர்கள் என பல தரப்பட்டவரும் குறும்பதிவு மூலம் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

எது நடந்த்தாலும் டிவிட்டரில் உற்சாகமாக கருத்து தெரிவிக்கும் வழக்கம் கொண்ட கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் ‘இளம் வீரர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.உலக் கோப்பையை வென்ற அணிக்கு வாழ்த்துக்கள்.கேப்டனுக்கும் வாழ்த்துக்கள் ‘என்று தனது குறும்பதிவு வாழ்த்தில் உற்சாகம் பொங்க குறுப்பிட்டிருந்தார்.

‘சாம்பியன்,சாம்பியன்,சாம்பியன்,இன்னொரு உலக கோப்பையை கொண்டு வந்ததற்காக ஜூனியர் அணிக்கு பாராட்டுக்கள்” இது சுழல் பந்து விச்சாளர் ஹர்பஜனின் பாராட்டு குறும்பதிவு.

வாழ்த்துக்கள் என ஒற்றை வார்த்தையில் விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் வாழ்த்தியிருந்தார்.

ஐபிஎல் ஆணையரான ராஜீவ் சுக்லா இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு போராடிய ஆஸி அணிக்கும் வாழ்த்து கூறியிருந்தார்.

முன்னாள் ஐபிஎல் தலைவரான லலித் மோடி தனது வாழ்த்து குறும் பதிவில் இந்த அணி தான் எதிர்காலம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்திய வீரர்கள் மட்டும் அல்ல வெஸ்ட் இன்டிஸ் விரர் கிரிஸ் கெய்லேவும் இந்திய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.”மகத்தான் செய்தி இந்திய அணி ஜூனியர் உலக கோப்பையை வென்றுள்ளது.இறுதி போட்டியில் இந்தியா ஆஸியை வீழ்த்தியது.வாழ்த்துக்கள் “.இது அவ‌ரது வாழ்த்து.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ,இந்திய இளம் வீரர்கள் நாட்டை பெருமிதம் கொள்ள வைத்திருப்பதாக தனது வாழ்த்தில் குறிப்பிட்டிருந்தார்.

தொழிலதிபாரான விஜய் மல்லையா ‘இந்த வெற்றி அடுத்த உலக் கோப்பையை சீனியர் அணி வெல்வதற்கு ஊக்கமாக அமையும் என குறிப்பிட்டிருந்தார்.

ஆனந்த் மகிந்திரா வாழ்த்துக்கள்,எந்ப்போதுமே எதிர்காலம் பிரகாசமானதாகவும் வளமானதாகவும் இருக்கும் என் உற்சாகமாக குறிப்பிட்டிருந்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்தரா இறுதிப்போட்டி பெரும் விருந்தாக அமைந்திருந்தது என கூறி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

பிரபலங்கள் மட்டும் அல்ல மற்றவர்களும் கூட உற்சாகமாக தங்கள் வாழ்த்துக்களை குறும்பதிவுகளாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பிரித்தி அகர்வால் என்பவர் ஜூனியர் அணி கேப்டன் சந்தை இந்திய அணியின் எதிர்காலம் என வர்ணித்திருந்தார்.

ஜஸ்டெஇன் ஜோஸ் என்பவர் அவரை இன்னொரு கோஹலி என வர்ணித்திருந்தார்.

மஹா டிவீட்டியா என்பவர் ஆம்ஸ்டிராங் மறைவுடன் இந்த வெற்றியை தொடர்புபடுத்தி தனது வாழ்த்தை தெரிவித்திருந்தர்.

இந்திய ஜூனியர் அணிக்கு குவியும் டிவிட்டர் வாழ்த்துக்களை இந்த முகவரியில் தெரிந்து கொள்ளலாம்;http://whotalking.com/%23UnmuktChand

Advertisements

2 responses to “இந்திய அணிக்கு டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s