எழுச்சி உரை கேட்க இந்த இணையதளம்.

செய் உரைகள்!

அதாவது செயல்பட தூண்டக்கூடிய உரைகள்!டூ லக்சர்ஸ் இணையதளம் இத்தகைய உரைகளின் இருப்பிடமாக திகழ்கிறது.

நல்லதொரு உரையை கேட்டு ரசித்தது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தில் எதையாவது செய்வதற்கு ஊக்கமும் பெற வேண்டும் என்றால் இந்த தளத்தில் உள்ள உரைகளை கேட்டு ரசிக்கலாம்.

எல்லாமே ஊக்கம் தரும் உரைகள்! எல்லாமே உலகை வென்ற சாதனையாளர்களால நிகழ்த்தப்பட்டவை.சாதனையாளர்கள் என்றால் வெற்றிப்படி மீது ஏறி நிற்பவர்கள் மட்டும் அல்ல;தங்கள் செய்ல்களால் உலகில் மாற்றத்தை ஏற்படுத்தி வருபவர்கள்.அவர்களின் அனுபவ பகிர்வாகவே இந்த உரைகள் அமிந்திருப்பதால் அவை கேட்பதற்கும் சுவையாக இருக்கும் சிந்தனையை தூண்டிவிடுவதாகவும் இருக்கும்.

உதாரனத்திற்கு டேவிட் ஆலன் என்னும் சாதனை பேச்சாளரை எடுத்துக்கொள்வோம்.கெட்டிங் திங்ஸ் டன் என்னும் புத்தகத்தை எழுதியுள்ள இவர் நமது மூளையை எப்படி திறன் மிக்கதாக ஆக்குவது என்பது குறித்து பேசுவதை கேட்கலாம்.

இதே போல கோடாலி செய்யும் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான கெப்ரியல் பார்னபி விழுமன்கள் ஏன் முக்கியமானவை என்று த்னது உரையில் விளக்குகிறார்.இதே போல தங்கள் துறைகளில் சாதித்தவர்களின் அனுபவ பகிர்வை வீடியோ உரையாக கேட்கலாம்.

உலகை மாற்றுக்கொண்டிருப்பவர்களின் ஊக்கம் தரும் உரைகள் என்னும் வர்னனையோடு இந்த உரைகள் முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ளன.எளிமையான ஆனால் நேர்த்தியான வடிவமைப்பு இந்த உரைகள் மீது ஈடுபாடு கொள்ள வைக்கிறது.தனித்தனி தலைப்புகளின் கீழ் உரைகள் பட்டியலிடபட்டுள்ளதோடு அதிகம் கேட்கப்பட்ட உரைகளும் தனியே இடம் பெறுகின்றன.

எந்த உரையை கிளிக் செய்தாலும் அதனை நிகழ்த்துபவரை சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டு உரையை கேட்டு மகிழலாம்.எல்லா உரைகளுடனும் தொடர்புடைய மற்ற உரைகளும் அடையாளம் காட்டப்படுகின்றன.

இவை எல்லாம் சாதரண உரைகள் அல்ல! இவை அனைத்துமே குறிபிட்ட நோக்கத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்டவை.எல்லாமே மற்றவர்களை செய்ய தூண்டுபவை.அதானல் தான் இவை செய் உரைகள் ,அதாவது டூ லக்செர்ஸ் என குறிப்பிடப்படுகின்றன.குறிப்பிடத்தக்க விஷயங்களை செய்து கொன்டிருப்பவர்கள் தாங்கள் சாதிப்பது மட்டும் அல்லாமல் மற்றவர்கள் மனதிலும் செயலுக்கான விதையை தூவுவார்கள் என்னும் நம்பிக்கையில் அவர்களின் நம்பிக்கையைகளையும் கருத்துக்களையும் உரையாக பகிர்ந்து கொள்ள வைக்கப்பட்டுள்ளதாக இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உரைகளை கேட்கும் போது உங்கள் வயிற்றிலும் ஒரு சாதனை தீ சுடர் விடத்துவங்கி விடும் என்றும் நம்பிக்கை அளிக்கும் இந்த தளம் ஆண்டுதோறும்
சாதனையாளர்களை தேர்வு செய்து உரை நிகழ்த்த வைத்து அதன் பதிவை இந்த தளத்தில் அளிக்கிறது.இந்த உரைகள் நிகழ்ச்சியாகவும் ஏற்பாடு செய்யப்பாடு நடத்தப்படுகின்றன.

ஆங்கலத்தில் அமைந்துள்ள உரைகள் என்றாலும் அறை குறை ஆங்கிலம் தெரிந்தாலே போதும் இவற்றை புரிந்து கொள்ளலாம் என்று சொல்லக்கூடிய வகையில் கேட்போரை கட்டிப்போடும் படியாக இவை இருக்கின்றன.

சமூக மாற்றத்திற்கு போராட தூண்டும் வகையில் ,புதியதொரு நிறுவத்தை துவக்க ஊக்கம் அளிக்கும் வகையில்,எந்த சவாலையும் சந்திக்க துணிவு கொள்ளும் வகையில் இந்த உரைகள் இருக்கின்றன.

எழுச்சி உரைகளை தவிர ஊக்கம் தரக்குடிய புத்தகங்களும் பட்டியலிட்டுள்ளன.எல்லாமே மாற்றத்தை மையமாக கொண்டவை.

டேவிட் மற்றும் கிலார் ஆகிய இருவரும் இந்த செய் உறைகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்ரனர்.பிரிட்ட்னை சேர்ந்த வேல்ஸ் அகுதியில் வசிக்கும் இருவரும் தான் இந்த தளத்தின் நிறுவனர்கள்.

இணையதள முகவரி; http://www.thedolectures.com/

———–
‘பரிவு’ மாத இதழுக்காக எழுதியது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s