உலக கலைகளுக்குகான கூகுல் ஜன்னல்.


உலகம் முழுவதும் அருங்காட்சியகங்கள் இருக்கின்றன.எந்த நகருக்கு சுற்றுலா சென்றாலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் அருங்காட்சியகமும் இருக்கும்.பல அருங்காட்சியகங்கள் உலக அளவில் புகழ் பெற்றதாகவும் இருக்கின்றன.

எல்லாம் சரி லண்டனிலோ பாரிசிலோ உள்ள புகழ் பெற்ற அருங்காட்சியகங்களுக்கு நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைத்து விடும்?இந்த கேள்வி உங்களுக்கும் இருந்தால் கவலையை விடுங்கள் இப்போது உங்கள் வீட்டில் இருந்த படியே உலகில் உள்ள அருங்காட்சியகத்திற்கு எல்லாம் சென்று வந்து விடலாம்.

அதாவது இண்டெர்நெட் வழியாகவே உலக அருங்காட்சியகங்களில் உள்ள ஓவியங்கள் மற்றும் கலை படைப்புகளை பார்த்து ரசிக்கலாம்.

தேடியந்திர மகாராஜாவான கூகுல் இதற்கான இணையதளத்தை அமைத்துள்ளது.கூகுல் ஆர்ட் பிராஜக்ட் என்னும் பெயரில் கூகுல் அமைத்துள்ள இணையதளத்தில் உலகின் 150 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள அருங்காட்சியக ஓவியங்களை பார்வையிடலாம்.

இந்த தளத்தில் நுழைந்து எந்த நகரத்து அருங்காட்சியகத்தை காண விருப்பமோ அதில் உள்ள ஓவியங்களை கண்டு ரசிக்கலாம்.

அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியங்களை இணையதளம் வழியே கண்டு ரசிக்க முடிவது நல்லது தான்.பல அருங்காட்சியகங்களுக்கு இணையதளமும் இருக்கின்றன.ஆனால் கூகுல் உருவாக்கியுள்ள இந்த இணையதளத்தில் என்ன சிறப்பு என்றால் ஓவியத்தை நேரில் பார்க்க முடிவதை விட இன்னும் தெளிவாக மேலும் துல்லியமாக பார்க்க முடியும் என்பது தான்!.

கூகுல் பயன்படுத்தும் தொழில்நுட்பமே இதற்கு காரணம்.

கூகுல் மேப்,கூகுல் எர்த் போன்ற சேவைகள் இருப்பது போல கூகுல் ஸ்டிரிடி வியூ என்னும் சேவையும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

ஒரு நகரின் காட்சிகளை காமிராவில் பதிவு செய்யும் நோக்கத்தோடு கூகுல் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.வளைத்து வளைத்து படம் எடுப்பது போல கூகுல் நவீன காமிரா கொண்டு நகரத்து தெருக்களில் வலம் வந்து அங்குள்ள காட்சிகளை 360 கோணங்களிலும் படம் எடுத்து கொள்கிறது.

இந்த திட்டம் பெரும் சர்சைக்குறியதாக இருக்கிறது.இப்படி தெரு தெருவாக வந்து படம் எடுப்பது அந்தரங்கத்தின் மீதான ஊடுருவலாக குற்றஞ்சாட்டப்படுகிறது.ஒரு சில நகரங்களில் கூகுல் ஸ்டிரிட் வியு வாகனத்தை விரட்டி அடித்த சம்பவங்களும் உண்டு.

இந்த திட்டம் சர்ச்சைக்குறியதே தவிர இதில் படமெடுக்க பயன்படும் தொழில்நுட்பம் ஈடு இணையில்லாதது.தெருவில் பதிவாகும் காட்சியையும் அதில் இருக்கும் மனிதர்களையும் தெளிவாக காணலாம்.

இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூகுல் அருங்காட்சியக ஓவியங்களை படமெடுக்கிறது.(இதோடு பிகாசா தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது)அவை வழக்கமான ஸ்கேன் செய்யப்பட்ட படங்கள் அல்ல;மாறாக டிஜிட்டல் வடிவில் மூலத்தின் துல்லியத்தோடு உயிர் பெறும் நகல்கள்.மெகா பிக்சல் என்றெல்லாம் சொல்வது போல இந்த படங்கள் கிகா பிக்சல் துல்லியத்தோடு இருப்பவை.எனவே இவற்றை எந்த இடத்திலும் கிளிக் செய்து பெரிதாக்கி பார்த்து கொள்ளலாம்.

கூகுல் மொழியில் சொல்வதானால் ஓவியத்தின் தூரிகை கோடுகளை கூட துல்லியமாக காணலாம்.இப்படி அங்குலம் அங்குலமாக ஓவியத்தை பார்க்க முடிவது நேரில் பார்க்கும் போது கூட சாத்தியமில்லை.தொழில்நுட்பத்தின் உதவியோடு கூகுல் இதனை சாத்தியமாக்கியிருக்கிறது.

சும்மாயில்லை கூகுல் ஊழியர்கள் நாவின் காமிராவோடு ஒவ்வொரு ஓவியத்தையும் அதன் நுணுக்கங்களையும் மணிக்கணக்கில் படமெடுத்துள்ளனர்.
ஓவியங்களை பார்த்து ரசிப்பதோடு ஒரு அருங்காட்சியகத்தை சுற்றி பார்ப்பது போலவே உலா வரலாம்.

150 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களோடு உடன் பாடு செய்து கொண்டு அங்குள்ள ஓவியங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றி அவற்றை இணையதளத்தில் இடம் பெற வைத்துள்ளது.அது மட்டும் அல்ல.ஓவியங்கள் பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன.அதுவும் 18 மொழிகளில்.

இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட அருங்காட்சியகங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.(டெல்லி அருங்காட்சியகத்தில் உள்ள புகழ் பெற்ற ராத கிருஷ்ணன் ஓவியத்தை பார்த்தால் சொக்கி போய் விடுவீர்கள்)அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருங்காட்சியகம் வான்கா அருங்காடியகம் போன்ற உலக புகழ் பெற்ற அருங்காட்சியகங்களும் இதில் அடக்கம்.மேலும் பல அருங்காட்சியகங்கள் மற்றும் மேலும் பல படைப்புகள் இதில் இடம் பெற வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இணையதள முகவரி;http://www.googleartproject.com/

பி.கு;
கூகுலின் இந்த இணையதளத்தை பற்றி படிக்கும் போதே அல்லது இதனை பயன்படுத்தி பார்க்கும் போது பாரிசில் உள்ள புகழ் பெற்ற மோனோலிசா ஓவியத்தை காண முடியுமா?என்ற கேள்வி எழலாம்.ஆனால் இதற்கான பதில் ஏமாற்றம் தரும்.காரனம் மோனோலிசா ஓவியம் இந்த தளத்தில் கிடையாது.இருந்தும் கவலைப்பட வேண்டாம் மோனோனோலிசா ஓவியத்தின் இருப்பிடமான பாரிச்ன் லோரே அருங்காட்சியகம் தனது இணையத்தளத்தில் இந்த ஓவியத்தை இடம் பெற வைத்துள்ளது.

மோனோலிசாவை காண;http://paris.arounder.com/en/museums/louvre/louvre-museum-monalisa.html

Advertisements

3 responses to “உலக கலைகளுக்குகான கூகுல் ஜன்னல்.

  1. Pingback: உலக அதிசயங்களை காண கூகுல் வசதி | Cybersimman's Blog·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s