இணையத்தை கலக்கிய‌ குறும்படத்தின் கதை.


சில மாதங்களுக்கு முன் இண்டெர்நெட்டை கலக்கிய‌ டிரெய்லர் அது!.

ஆனால் அந்த டிரைலர் திரைப்படத்திற்கானது இல்லை.கிரேக்லிச்ட் ஜோ என்னும் செய்திப்படத்திற்கானது.

இந்த‌ செய்தி படத்துக்காக தனியே இணையதளம் அமைக்கப்பட்டு அதில் டிரெய்லரும் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த‌து.

ஒரு செய்தி படம் இத்தகைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது ஆச்சர்யம் தான்.ஆனால் அந்த படமே முழுவதும் ஆச்சர்யமானது தான்.

அந்த படம் உருவான கதையை கேட்டால் அட நாம்மும் பார்க்கலாமே என்று உங்களுக்கும் தோன்றும்.அமெரிக்காவில் உள்ளவர்களுக்கும் நிச்சயம் தோன்றும்.

அப்படி என்ன பிரமாதமான கதை என்றால்,ஒரு இளைஞரின் சைபர் துறவரம் தான் இந்த செய்தி படத்தின் கதை.

ஜோசப் கார்னர் என்னும் 29 வயது இளைஞர் மேற்கொண்ட
சைபர் துறவரம் இல்லை என்றால் சைபர் விரதத்தின் அனுபவ பதிவாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சைபர் துறவரம் என்றால் இண்டெர்நெட்டின் ஆற்றலை மட்டுமே நம்பி மற்ற உலக வ்ழிகளை எல்லாம் அடைத்து விட்டு இணைய பாதையில் மட்டுமே பயணித்து பார்ப்பது.

கையை கட்டிக்கொண்டி நீச்சல் அடிப்பது போல கண்ணை கட்டி கொண்டு நெடுஞ்சாலையில் நடப்பது போல இண்டெர்நெட் தரும் வழிகளையும் வாய்ப்பையும் மட்டுமே பயன்படுத்தி பார்க்க முயலும் பரிசோதனை முயற்சிகள் வலையுலகின் ஆரம்ப காலத்தில் இருந்தே பிரபலமாக இருந்டு வருகிறது.

இ காமர்ஸ் என்னும் இணைய வணிகம் அறிமுகமான காலத்தில் டாட்காம்கய் என்பவர் தன்னை ஒரு அறையில் அடைத்து கொன்டு இன்டெர்நெட் மூலமே பொருட்களை ஆர்டர் செய்து உயிர் வாழ முடியும் என காட்ட முயன்றிருக்கிறார்.

அதே போல கிளார்க் ஹாரிஸ் என்பவர் ஒரு மாத காலம் பேசாமல் மவுனமாக இருந்து சமூக வலைப்பின்னல் தளம் மூலமே மற்றவர்களோடு பேச முயன்றிருக்கிறார்.

இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் டிவிட்டர் மூலம் கிடைத்த தொடர்புகள் மற்றும் உதவுகளை கொண்டே உலகை வலம் வந்திருக்கிறார்.

அமெரிக்க வாலிப்ர ஒருவர் ஒரு மாத காலத்திற்கு மெக்டோனால்ஸ் பர்கரை தவிர வேறு எதையும் சாப்பிடமால் இருந்து அந்த அனுபவத்தை சூப்பர்மீ என செய்திபட்மாக எடுத்திருக்கிறார்.

சில நேரங்களில் விளம்பர் நோக்கம்,சில நேரங்களில் சமூக நோக்கம் ஆகியவை இந்த சைபர் சோதனைகளுக்கு வித்திட்டிருக்கின்றன.

இதே போலவே ஜோசப் கார்னரும் திடிரென ஒரு இணைய பரிசோதனையில் ஈடுபட்டார்.

ஒரு மாத காலம் கிரேக்லிஸ்ட் இணையதளத்தின் மூலம் மட்டுமே வாழ வேண்டும் என்பது தான் அந்த சோதனை.

கிரேக்லிஸ்ட் இண்டெர்நெட்டின் முன்னணி வரிவிளம்பர தளம்.அநேகமாக டாப்டென் இணையதளங்களில் ஒன்று எனலாம்.

கிரேக்லிஸ்ட்டில் எதையும் விற்கலாம் வாங்கலாம் என்று சொல்லப்படுகிறது.விற்கலாம் வாங்கலாம் என்றால் பல நேரங்களில் இலவசமாக என்றும் பொருள்.மீதி நேரங்களில் மலிவாக வாஙகலாம்.பொருட்களில் துவங்கி சேவைகள் வரை கிரேக்லிஸ்ட்டில் பட்டியலிடப்படாதவையே கிடையாது என்று சொல்லலாம்.

அமெரிக்க மிடில் கிளாசின் மாத பட்ஜெட்டில் கணிசமான சிக்கனத்தை ஏற்படுத்தி தரும் நிறுவனம் என்று வால்மார்ட் பற்றி ஒரு கருத்து உண்டு.அதே கருத்து கிரேக்லிஸ்டிற்கும் பொருந்தும்.அந்த அளவுக்கு சாரசரி அமெரிக்கர்களின் தேவையை கிரேக்லிஸ்ட் பூர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

வால்மார்ட் போலவே கிரேக்லிஸ்ட்டும் சர்ச்சைக்குறியது என்பது வேறு விஷயம்.ஆனால் எளிதாகவும் மலிவாகவும் பல விஷயங்களை பெற கிரேக்லிஸ்ட்டை பயன்படுத்தலாம்.நாளிதழ் வரி விளம்பரங்களை விட கிரேக்லிஸ்ட் விளம்பரங்களின் வீச்சும் பரப்பும் அதிகம்.

ஜோசப் காரனர் கடந்த 2008 ம் ஆண்டு கிரேகிலிஸ்ட் வரி விளம்பரங்களை மட்டுமே நம்பி ஒரு மாத காலம் வாழ முடியுமா? என யோசித்தார்.சிந்தனையோடு நின்று விடாமல் அதை சோதித்து பார்த்து விடவும் துணிந்தார்.

இப்படி தான் அவரது ஒரு மாத சைபர் துறவரம் ஆரம்பமானது.

கிரேக்லிஸ்ட் வரி விளம்பரங்கள் மூலம் வாழ்வது என்றால் உணவு முதல் இருப்பிடம் வரை எல்லா தேவைகளுக்கும் வரி விளம்பரங்களை மட்டுமே பயன்படுத்துவது.அதாவது பசிக்கிறதா வரி விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்டு சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.தூஙக் வேண்டுமா அதற்கான இடத்தையும் விளம்பரம் மூலம் தான் தேட வேண்டும்.பயணம் சேய வேண்டுமா அதையும் விளம்பரம் மூலம் தான் தேட வேண்டும்.எதற்காகவும் கை காசையும் செலவு செய்யக்கூடாது.நண்பர்கள் உதவியையும் நாடக்கூடாது.எதுவாக இருந்தாலும் கிரேக்லிஸ்ட் வரி விளம்பரமே துணை.ஒரே விதி விலக்கு குடிநீர் மட்டும் தான்.

இந்த உறுதியோடு அந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி ஒரு லேப்டாப்,புதிய செல்போன்,இமெயில் முகவ்ரி,பாச்போர்ட்,டூத்பிரெரெஷ்,மற்றும் துணிகளோடு வீட்டை விட்டு புறப்பட்டு விட்டார்.

அதன் பிறகு சரியாக ஒரு மாத காலம் அறிமுகம் இல்லாதவர்களின் கருணையை நம்பியே அவர் இருந்திருக்கிறார்.

இந்த அனுபவத்தை தான் கிரேக்லிஸ்ட் ஜோ என்னும் பெயரில் செய்தி படமாக உருவாக்கி இருக்கிறார்.

தனது பரிசோதனையை படம் எடுக்கும் திட்டத்தோடு தன்னோடு கேமிராமேன் ஒருவரையும் அழைத்து சென்றிருந்தார்.அந்த காமிராமேனும் கிரேக்லிஸ்ட் விளம்பரம் மூலம் கிடைத்தவர் தான்.

முப்பது நாட்கள் வரி விளம்பரம் மூலம் அறிமுகம் இல்லாதவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் தயவில் வாழ வேண்டும் என்னும் போது அந்த அனுபவம் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும் தானே.அந்த நம்பிகையில் தான் கிரேக்லிஸ்ட் ஜோ தயாராகியிருக்கிறது.

வெறும் சுவாரஸ்ய அனுபவத்தை பதிவு செய்வது மட்டும் கார்னரின் நோக்கம் அல்ல:அறிமுகம் இல்லாதவர்களின் கருணை மற்றும் உதவும் மனோபாவத்தையும் உணர்த்துவது தான்.

இந்த எண்ணம் தனக்கு தோன்றியதே 2008 ல் அமெரிக்காவில் நிலவிய அவநம்பிக்கையினால் தான் என்கிறார் கார்னர்.பொருளாதார சீர்குலைவால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து நாளிதழிகளில் இருந்து டிவி நிகழ்ச்சி வரை எங்கும் பொருளாதார தேக்க நிலை பற்றிய பாதிப்பு பற்றி பேசிக்கொண்டிருந்த போது காரனர் ஏன் எல்லோரும் புலம்பி கொண்டிருக்க வேண்டும் நம் நாட்டில் நல்லதே இல்லையா என காட்ட விரும்பி அதற்கான பயணமாக இந்த கிரேக்லிஸ்ட் சோதனையை தேர்வு செய்தார்.

இந்த சோதனை மூலம் வித்தியாசமான மனிதர்கள்,எதிர்பாராத அனுபவங்கள் வாயிலாக சராசரி அமெரிகர்களின் கருணையும் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார்.

எல்லோரும் இதனை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் படத்திற்காக அதே பெயரில் இணையதளத்தையும் அமைத்திருந்தார்.இந்த தளத்திலேயே டிரெய்லரையும் பார்க்கலாம்.படத்தை ஐடியூன்சில் வாங்கி பார்க்கலாம்.
இந்த படம் உருவான பின்னணி காட்சிகள் பற்றி ஏபிசி இணையதளம் சுவாரஸ்யமான கட்டுரையை வெளியிட்ட‌து.

இணையதள முகவரி;http://www.craigslistjoe.com/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s