வீடியோ விமர்சனங்களுக்கான இணையதளம்!

எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதற்கு முன்பாக அந்த பொருள் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்வது நல்லது தான்.விலை ஒப்பீட்டில் துவங்கி,பயந்தன்மை,செயல்பாடு,நிறைகுறைகள் உள்ளிட்ட விஷயங்களை அலசிப்பார்த்து விட்டு அந்த பொருளை வாங்குவது பற்றி முடிவெடுக்கலாம்.

இப்படி நுகர்வாராய்ச்சியில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கு பொருட்கள் பற்றிய தகவல்களை வழங்கும் தளங்களும் நிறையவே இருக்கின்றன.குறிப்பிட்ட பொருட்கள் பற்றிய நுகர்வோரின் விமர்சன கருத்துக்களையும் இந்த தளங்கள் வழியே அறிந்து கொண்டு நிபுணர்கள் சொல்வது போல அறிவார்ந்த வாங்கும் முடிவுகளை மேற்கொள்ளலாம்.

ஆனால் என்ன தான் பொருட்களின் விமர்சன கருத்துக்களை படித்தாலும் காட்சி ரீதியிலான விளக்கத்திற்கு ஈடாகாது.அதாவது வீடியோ விளக்கங்கள்!.

இத்தகைய வீடியோ விமசனங்களை வழங்கும் தளமாக பியூப்பில் வீடியோ ரிவியூ தளம் விளங்குகிறது.இந்த தளம் பொருட்களின் நிறைகுறை பற்றி அலசி ஆராயும் வீடியோ விளக்கங்களால் நிறைந்திருக்கிறது.

கார்களில் துவங்கி,செல்போன்,வீட்டு உபயோக சாதங்கள்,கலைப்பொருட்கள்,அழகு சாதங்கள் என எல்லா வகையான பொருட்கள் பற்றியும் விமர்சன வீடியோக்களை இங்கு காணலாம்.சாப்ட்வேர்,இசைக்கருவிகள்,கைகடிகாரங்கள் போன்ற பொருட்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ விமர்சனங்கள் எல்லாமே சக நுகர்வோரால் சமர்பிக்கப்பட்டவை.எனவே விளம்பர சார்பு இல்லாமல் பொருட்கள் பற்றிய உண்மையான விமர்சன கருத்துக்களாக இவை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.அதோடு காட்சி வடிவிலான விளக்கமும் இருப்பதால் சொல்லப்படும் கருத்தை சரியாக புரிந்து கொள்ளலாம்.

முகப்பு பக்கத்தில் விமர்சன வீடியோக்கள் வரிசசையாக பட்டியலிடப்பட்டிருந்தாலும் குறிபிட்ட பொருள் தொடர்பான விமர்சன வீடியோ தேவை என்றால் அதனை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.

இதை தவிர த்ற்போது நுகர்வோர் பார்த்து கொண்டிருக்கும் வீடியோக்களும் தனியே பட்டியலிடப்பட்டுள்ளன.அந்த அந்த பிரிவின் வகைகளின் கீழும் விமர்சன‌ங்கள் பட்டியலிப்பட்டுள்ளன.குறிப்பிட்ட வர்த்தக நிறுவனங்களின் பிராண்ட்களும் தனியே வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வீடியோ விமர்சனத்தினை பார்த்து விட்டு அது சரியாக உள்ளதா என்பதை தெரிவிக்க வாக்களிக்கும் வசதியும் இருக்கிறது.வீடியோக்களை பேஸ்புக்,டிவிட்டர் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

உண்மையிலேயே பயனுள்ள தளம்.

ஆனால் இதில் நுகர்வோர் தங்கள் விமர்சனத்தை சமர்பிக்கும் வசதி இருக்கிறதா என்று தெரியவில்லை.ஏற்கனவே உள்ள வீடியோக்கள் எப்படி தேர்வு செய்யப்பட்டவை என்றும் தெரியவில்லை.

அதே போல இந்தியர்களுக்கு,அதாவது இந்திய பொருட்கள் பற்றி அறிய இந்த தளம் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்றும் தெரியவில்லை.ஆனால் தொழில்நுட்ப சாதங்கள் மற்றும் சாப்ட்வேர் போன்றவை உலகலாவியவை என்பதால் அவை பற்றி தாராளமாக தெரிந்து கொள்ளலாம்.

இருந்தாலும் இதே போல இந்திய விமர்சன தளம் உருவாக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

இணையதள முகவரி;http://people-video-review.com/

Advertisements

4 responses to “வீடியோ விமர்சனங்களுக்கான இணையதளம்!

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html) சென்று பார்க்கவும்…

    நன்றி…

  2. தங்களது தளம் வலைப்பதிவுடன், எனது வலைப்பதிவும் வலைச்சரத்தில் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்களும், மகிழ்ச்சியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s