புதிய வேலை வாய்ப்பு இணையதளங்கள்.


வேலை வாய்ப்பு இணையதளங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.அதாவது புதிய தளங்கள் உதயமாவதோடு அவை புதுமையானதாகவும் இருக்கின்றன.ரேங்க் ஷீட் மற்றும் ஐ லிப்ட் ஆப் ஆகிய இரண்டு தளங்களுமே இதற்கான அழகான உதாரணங்கள்.

இரண்டு தளங்களுமே வழக்கமான வேலை வாய்ப்பு தளங்களில் இருந்து வேறுபட்டவையாக இருக்கின்றன.இரண்டுமே வழக்கமான வேலைவாய்ப்பு தளங்களில் இருந்து மேம்பட்டவையாக இருக்க முயல்கின்றன.

வேலைவாய்ப்பு தளங்கள் ஒரு பக்கம் வேலை தேடுபவர்களை பட்டியலிட்டு இன்னொரு பக்கம் வேலை வாய்ப்புகளை பட்டியலிட்டு இருவருக்குமான இணைப்பு பாலமாக இருக்கின்றன.அப்படியே வேலை தேடி வருபவர்களுக்கு பொருத்தமான நல்ல வேலை வாய்ப்பை தேடித்தர முயல்கின்றன.

இத்தகைய வேலை வாய்ப்பு தளங்கள் அநேகம் இருக்கின்றன.ஆனால் இந்த தளங்களில் இரு தரப்பினருக்குமே பிரச்சனை இருக்கிறது.வேலை தேடுபவர்களை பொருத்தவரை சம்பிரதாயமான பயோடேட்டா தங்கள் திறமையை வெளிப்படுத்த போதுமானதாக இல்லை என்று நினைக்கின்றனர்.பல்லாயிரக்கணக்கானோர் போட்டி போடும் போது தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தி கொள்ள முடிந்தால் நிறுவன‌ங்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்கலாம் என்று வேலை தேடுபவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வர்த்தக நிறுவங்களை பொருத்தவரை ஆயிரக்கணக்கில் குவியும் விண்ணப்பங்களில் இருந்து பொருத்தமானவற்றை தேர்வு தேர்வு செய்வது என்பது சிக்கலானதாக அமைந்து விடுகிறது.அதோடு வேலை தேடும் எல்லோருமே பயோடேட்டாவில் தங்களது தகுதி, திறமை பற்றி பிரகாசமான குறிப்புகளை எழுதி வைப்பதால் அவர்களில் காகித புலிகள் யார்,உண்மையான திறமைசாலிகள் யார் என முடிவுக்கு வருவது சிக்கலானதாகி விடுகிறது.

வர்த்தக நிறுவன‌ங்கள் சரியான முடிவுக்கு வர விண்ணப்பங்களை அலசி ஆராய்ந்து களையெடுத்து அதன் பிறகு நேர்முக தேர்வுக்கு அழைத்து கேள்விகள் கேட்டு தகுதியான நபர்களை கண்டுபிடித்தாக வேண்டும்.இது நேரத்தை விரயாக்கமாக்க கூடியது என்பதோடு மனிதவள மேம்பாட்டு துறையினரை சோதித்து விடக்கூடியது.

இந்த குறைகளை களைந்து இரு தரப்பினருக்குமே உதவக்கூடிய அடுத்தக்கட்ட வேலை வாய்ப்பு தளங்களாக ரேங்க் ஷீட் மற்றும் ஐ லிப்ட் ஆப் உருவாக்கப்பட்டுள்ளன.

இரண்டு தளங்களுமே தேர்வு அல்லது சோதனையின் அடிப்படையில் இயங்குகின்றன.

அதாவது வேலை வாய்ப்பு தேடி வருபவர்கள் தங்கள் திற‌மையை நிருபித்து காட்ட வைக்கின்றன.இதற்காக இரண்டு தளங்களுமே ஆன்லைன் தேர்வுகளை நடத்துகின்றன.

இந்த தேர்வுகள் மூலம் வேலை தேடுபவர்கள் தங்கள் திறமையை நிறுவனங்களுக்கு அழகாக உணர்த்தலாம்.

பயோடேட்டாவில் அது தெரியும் இது தெரியும் என குறிப்பிட்டு விட்டு உண்மையில் எது தெரியும் என்ற சந்தேகத்தை நிறுவன அதிகாரிகள் மத்தியில் ஏற்படுத்தாமல் எது தெரியும் என குறிப்பிட்டுள்ளனரோ அதற்கான சான்றை தேர்வு மூலம் காட்ட இந்த தளங்கள் வழி செய்கின்றன.

ஐ லிப்ட் ஆப் தளத்தை பொருத்தவரை சாப்ட்வேர்,நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆன்லைன் தேர்வுகளை வழங்குகிறது.வேலை தேடுபவர்கள் முதலில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு அதன் பிறகு தங்களுக்கான தேர்வை எழுதி திறமையை உணர்த்தலாம்.

வர்த்தக நிறுவனங்கள் தாங்கள் எதிர்பார்க்கும் திறமைகள் கொண்ட நபரை இந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம்.

உண்மையில் இந்த தளம் வேலைக்கு பொருத்தமான நபர்களை தேர்ந்தெடுப்பதில் வர்த்தக நிறுவனங்களின் வேலையை எளிதாக்குகிறது என்று சொல்ல வேண்டும்.

வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிய படாதபாடு படுவதற்கு பதில் அவர்கள் இதில் எல்லாம் திறமைசாலிகள் என்று இந்த தளம் சோதனை நடத்தி காட்டி விடுகிறது.

வாலை தேடுபவர்களுக்கும் இது தங்களின் சரியான திறமையை நிறுவனங்கள் பார்வைக்கு சமர்பிக்க வழி செய்கிறது.

பொதுவான தேர்வுகளோடு நிறுவன‌ங்கள் விரும்பினால் தங்களுக்கான பிரத்யேக தேர்வையும் வடிவமைத்து சம‌ர்பிக்கலாம்.

ரேங்க் ஷீட் தளம் இதோ போன்றது தான் என்றாலும் இது கொஞ்சம் கூடுதலான அம்சங்களை கொண்டிருக்கிறது.ஆன்லைன் சான்றிதழ் வழங்கும் தளம் என வர்ணித்து கொள்ளும் இந்த தளம் முழுக்க முழுக்க சாப்ட்வேர் பிரிவு தொடர்பான தேர்வுகளை மட்டுமே அளிக்கிறது.

டாட்.நெட்,ஜாவா,சி ஷார்ப் என பல பிரிவுகளில் தேர்வு எழுதி அதில் உள்ள திறமையை உணர்த்தலாம்.

தேர்வுகளுக்கான சான்றிதழையும் இந்த தளம் வழங்குகிறது.அதோடு நின்று விடவில்லை.பயோடேட்டாவை துடிப்பானதாக மாற்றிக்கொள்ளவும் உதவுகிறது.பயோடேட்டாவில் திறமைகளை சேர்த்து கொண்டு அதனை மேலும் ஈர்ப்பு மிக்கதாக மாற்றலாம்.

பயோடேட்டா பக்கத்தை இணைய முகவரியாகவும் பகிர்ந்து கொள்ளும் வசதி இருக்கிறது.அந்த அளவுக்கு உறுப்பினர்களின் பயோடேட்டா பக்கம் செறிவானதாக மாறியிருக்கும்.

அது மட்டும் அல்ல உறுப்பினர்கள் சக உறுப்பினர்களோடு கலந்துரையாடி அவர்கள் பணி சூழலில் தொழில்நுடப் சவால்களை எப்படி எதிர்கொள்கின்ற‌னர் என்றும் தெரிந்து கொள்ளலாம்.அந்த வகையில் இந்த தளம் வலைப்பின்னல் தளத்தின் சாயலை கொண்டிருக்கிறது.

பயோடேட்டாவை மட்டும் நம்பியிருக்காமல் வேலைக்கான திறமையை நிருபித்து காட்ட உதவும் தளங்கள் .

அதாவது கல்லூரியிலும் பயிற்சி நிறுவங்களிலும் தேர்வு எழுதி வெற்றி பெற்று நிலையிலும் இரண்டாவதாக ஒரு தேர்வு எழுத தயாராக இருப்பவர்கள் இந்த தளங்களை நல்ல வேலைக்கான சுலபமான வாய்ப்பாகவே கருதுவார்கள்.

இணையத்ள முகவரி;

1.http://www.iliftoff.com/web_iliftoff/index.php

2.http://ranksheet.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s