டிவிட்டரில் ஒரு வீழ்ச்சியின் கதை.


வீழ்ந்த தேவதை என்பார்களே,லான்ஸ் ஆன்ஸ்டிராங் இந்த நிலைக்கு தான் ஆளாகியிருக்கிறார்.

சைக்கிள் பந்தைய உலகின் சாம்பியனான அவர் இனியும் சாம்பியன் இல்லை என்பது அதிகார்பூர்வமாகியிருக்கிறது.இதை ஆம்ஸ்டிராங்கும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.இதற்கான அவரது ஒப்புதல் வாக்குமூலம் டிவிட்டரில் வெளியாகியிருக்கிறது.ஆனால் வெளிப்படையாக இல்லை;கொஞ்சம் சூசகமாக!.

ஆம் டிவிட்டரில் சுயசரிதை குறிப்புகளுக்கான பகுதி உண்டு.டிவிட்டர் பயனாளிகள் இந்த பகுதியில் தங்களுக்கான அறிமுக குறிப்புகளை இடம் பெறச்செய்யலாம்.குறும்பதிவு சேவையான டிவிட்டரின் தனமைக்கேற்ப இந்த குறிப்புகளும் ரத்தினச்சுருக்கமாக இருந்தாக வேண்டும்.சாதனைகளும் பெருமைகளும் பல இருந்தாலும் இந்த பகுதியில் ஒரு சில வார்த்தைகளில் அவற்றை அடக்கியாக வேண்டும்.

எனவே டிவிட்டர் சுயசரிதை குறிப்புகளில் பயனாளுகள் தங்களை பற்றி மிக முக்கியமானதை மட்டும் தேர்வு செய்து குறிப்பிட வேண்டும்.ஒரு வரியில் அல்லது சின்னதாக ஒரு சில வரிகளில் அழகாக அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்.

இதனால் டிவிட்டரில் ஒருவர் தன்னைப்பற்றி எப்படி அறிமுகம் செய்து கொள்கிறார் என்பது மிகவும் சுவாரஸ்யமானது.அது பற்றி தனி பதிவில் காணலாம்.

இப்போது ஆம்ஸ்டிராங் விஷயத்திற்கு வருவோம்.

ஆம்ஸ்டிராங் சைக்கிள் பந்தைய சாம்பியன்.நிகரில்லாத சாம்பியன்.7 முறை அவர் சைக்கிள் பந்தைய உலகில் சிகரமாக கருதப்படும் டூர் டி பிரான்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.இதுவே மகத்தான சாதனை தான்.ஆனால் ஆம்ஸ்டிராங் சொந்த வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்த சாதனையின் பரிமாணம் எங்கோ போய்விடும்.

ஆம்ஸ்டிராங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தோடு போராடி உயிர் பிழைத்து வந்த பின் விடாமுயற்சியோடு சைக்கிள் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று பட்டங்களை வென்றிருக்கிறார்.இதனால் தான் அவர் விடாமுயற்சியின் மறுவடிவமாகவும் தன்னம்ப்பிகையின் அடையாளமாகவும் கருதப்படுகிறார்.

ஆனால் இதெல்லாம் ஆம்ஸ்டிராங்கின் பழம் பெருமையாகி விட்டது.ஆம்ஸ்டிராங் மீது கூறப்பட்ட ஊக்கமருந்து புகார் தொடர்பான வழக்கில் அவர்க்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டதை அடுத்து அவரது ஏழு பட்டங்களும் பறிக்கப்பட்டுள்ளன.எனவே இனியும் அவர் சாம்பியன் கிடையாது.

ஆம்ஸ்டிராங் தவறு செய்தாரா என்னும் கேள்விக்கு ஒற்றை வரியில் பதில் சொல்ல முடியாத அளவுக்கு இந்த வழக்கு சிக்கலானது.ஆம்ஸ்டிராங்கும் இது பற்றி விரிவாக பேசுவதை தவிர்த்து வருகிறார்.

ஆனால் அவரது பட்டங்கள் பறிக்கப்பட்டது அதிகாரபூர்வமானது என்பதால் இனி மேல் அவர் தன்னை சாம்பியன் என்று அழைத்து கொள்ள முடியாது.

இதை உணர்ந்து ஆம்ஸ்டிராங் தனது டிவிட்டர் அறிமுக பக்கத்தில் சுயசரிதை குறிப்பில் மாற்றத்தை செய்திருக்கிறார்.

இதற்கு முன் வரை அவரது அறிமுக குறிப்பில் 7 முறை டூர் டி பிரான்ஸ் சாம்பியன்.முழு நேர புற்றுநோய் போராளி என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.இப்படி தான் ஆம்ஸ்டிராங் தான் அறியப்பட வேண்டும் என விரும்பியிருக்கிறார்.

ஆனால் பட்டம் பறிக்கப்பட்டதும் இந்த சுயசரிதை குறிப்பில் இருந்து 7 முறை சாம்பியன் என்பதை நீக்கியிருக்கிறார்.என்னுடைய 5 குழந்தைகளை வளர்ப்பது,புற்றுநோயோடு போராடுவது,வாய்ப்பு கிடைக்கும் போது நீச்சல்,கோல்ப்,சைக்கிளிங்கில் ஈடுபடுவது என்று மட்டுமே இப்போது அவரது அறிமுகம் குறிப்பு அமைந்துள்ளது.

ஆக அதிகம் பேசாமல்,பெரிய அறிக்கை வெளிய்டாமல்,செய்தியாளர் சந்திப்பில் ஆவேசப்படாமல் ஆம்ஸ்டிராங் தனது சரிவை டிவிட்டரில் செய்த மாற்றம் மூலம் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த மாற்றத்தை செய்த போது ஆம்ஸ்டிராங்கின் மனம் வலித்திருக்கும்.அதாவது அவர நிரபராதி என்றால்!இல்லை என்றால் குற்ற உணர்வு உறுத்தியிருக்கும்.

ஆம்ஸ்டிராங் டிவிட்டர் முகவரி;https://twitter.com/lancearmstrong

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s