பாடகி சின்ம‌யியும் டிவிட்டர் சர்ச்சையும்!.

திரைப்பட பின்னணி பாடகி சின்மயி தொடர்பான டிவிட்டர் சர்ச்சை தொடர்கிறது.புதிய புகார்கள்,பதில் குற்றச்சாட்டுக்கள்,திருப்பங்கள் என இந்த பிரச்சனை பெரிதாகி கொண்டே இருப்பதோடு சிக்கலாகி கொண்டும் இருக்கிறது. இந்த பிரச்சனையை மேலோட்டமாக அணுகாமல் ஆழமாக புரிந்து கொள்ள முயல்வதே சரியாக இருக்கும்.

முதலில் பாடகி சின்மயி மீது டிவிட்டரில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலாகவே இந்த பிரச்சனை வெளியாகத்துவங்கியது.ஒரு சில டிவிட்டராளர்கள் சின்மயி மீது தரக்குறைவான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கின்றனர்.இந்த குறும்பதிவுகள் ஒரு பெண்ணாக அவரை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தன.சின்மயியின் தாயும் சில குறும்பதிவுகளில் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தார்.

இவை பற்றி எல்லாம் சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வேதனையையும் ஆவேசத்தையும் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக சட்டபூர்வமான உதவியை நாட இருப்பதாகவும் கூறியிருந்தார்.டிவிட்டராளர்களில் பலரும் இது தொடர்பாக சின்ம‌யிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

சின்மயி என்றில்லை யார் மீதும் இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.உண்மையில் டிவிட்டர் போன்ற சேவைகளில் இத்தகைய தனிப்பட்ட தாக்குதலை ந‌டத்துவது எளிதாக இருக்கிறது.இடு தொடர்பான சட்டபூர்வ பாதுகாப்பு தேவை என்ற கருத்து வலுப்பெற்று விவாதமும் நடைபெற்று வருகிறது.ஆனால் இந்த பாதுகாப்பு என்பது தணிக்கைக்கு வித்திட்டு விடக்கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

டிவிட்டரில் தனிநபர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது என்பது சர்வதேச அளவிலான பிரச்சனையாக இருக்கிறது.இவை டிரால் என்று பிரபலமாக குறிப்பிடப்படுகிறது.ஆஸ்திரேலியாவில் டாசன் என்னும் பெண்மணி இது போன்ற பிரச்சனையால் தற்கொலைக்கு முயன்ற சமபவமும் உள்ளது.

சின்மயியும் இதே போன்ற பிரச்சனைக்கு தான் இலக்காகியிருப்பதாக கருதலாம்.சினமயி மட்டும் அல்ல திரைப்பட நடிகை குஷ்புவும் கூட இதே போன்ற தனிப்பட்ட தாக்குதலுக்கு ஆளானார்.மிக மோசமான சொந்த வாழ்க்கை தாக்குதலுக்கு ஆளாக குஷ்பு அதற்கு ஆவேசமாக தன்னை தானே இழிவுப‌டுத்தி கொண்டு குறும்பதிவிட்டு பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

இவை எல்லாம் டிவிட்டர் இரு பக்கமும் கூறான ஆயுதம் என்பதற்காக உதாரனங்கள்.

டிவிட்டரில் யார் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம்,இது டிவிட்டரின் குறை அல்ல.டிவிட்ட்ரை எப்படி பயன்படுத்துவது என தீர்மானிப்பவரின் குறை.

சரி இது போன்ற டிவிட்டர் தனிநபர் தாக்குதலுக்கான தீர்வு என்ன என்பது விவாதத்திற்கு உரிய கேள்வி.

இந்த கேள்விக்கான பதில் ஒரு போதும் கருத்து சுதந்திந்திரத்தை பதம் பார்ப்பதாக இருந்து விடக்கூடாது .இது ஒரு புறம் இருக்க சின்மயி விஷ‌யத்தில் இந்த பிரச்சனை தனிநபர் தாக்குதலாக மட்டும் முடிந்து போனதாக தெரியவில்லை.

இந்த பிரச்ச‌னையின் பின்னணி இலங்கை மீனவர்கள் மீதான‌ தாக்குதலின் போது நடந்த டிவிட்டர் ஆதரவு இயக்கம் மற்றும் இடஒதுக்கீடு தொடர்பாக தெரிவிக்கப்பட்ட‌ கருத்துக்களாகவும் விரிகிறது.

கொள்கை சார்ந்த விவாதங்களில் தனிநபர் தாக்குதலுக்கு இடமில்லை தான் .ஆனால் தனிநபர் தாக்குதல் பாதுகாப்பு என்னும் கேடயத்தால் கொள்கை சார்ந்த விவாதங்களில் இருந்தும் தப்பித்துவிட முடியாது.

சின்ம‌யி மீனவர் பிரச்சனை தொடர்பாகவும் இடஒதிக்கீடு குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் அவர் மீதான கருத்தியல் தாக்குதலுக்கு வித்திட்டுள்ளது.அந்த தாக்குதல் இன்னும் தொடர்கிறது.எனவே இந்த பிரச்ச‌னையை வெறும் தனிநபர் தாக்குதலாக மட்டும் பார்க்க முடியாது.

இது தொடர்பாக மாமல்லன்,கோவிகண்ணன் பதிவுகள் விரிவான புரிதலை அளிக்கின்ற‌ன.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் கடிதம் இதன் வேறு ஒரு பரிமானத்தை உண‌ர்த்துகிறது.

உண்மையில் சொல்லப்போனால் இந்த பிரச்சனை டிவிட்டர் எத்தனை தீவிரமான கருத்து களம் என்பதை புரிய வைக்கிறது.

ஆனால் ஒன்று டிவிட்டரில் எச்சரிக்கையாக இருப்பதைவிட நேர்மையாக இருப்பதே முக்கியம்.

பி.கு;இது இந்த பிரச்சனை குறித்த விரிவான பதிவு அல்ல;ஆழமான புரிதலுக்கான எண்ணற்ற விஷயங்களை சுட்டிக்காட்ட வேன்டும்.எனினும் இந்த சர்ச்சை தொடர்பான இருபக்க நியாயங்களையும் சுட்டிக்காட்டும் பறவை பார்வை பதிவே இது.

அது மட்டும் அல்ல இந்த பிரச்சனையின் மைய‌த்தை இந்த பதிவில் நான் ஆய்வு செய்ய முற்ப‌டவில்லை.ஒரு தொழில்நுட்ப வலைப்பதிவாளனாக அதிலும் டிவிட்டர் பயன்பாடு பற்றி தொடர்ந்து எழுதி வருபவன் என்ற முறையில் டிவிட்டர் என்னும் தொழில்நுட்ப சாதனத்தின் பயன்பாடு சார்ந்தே இதனை சார்ந்தே எழுதியிருக்கிறேன்.

இந்த பிரச்சனையில் எனது நிலைப்பாடு என்பது பொது வாழ்க்கையில் பொருந்தும் அதே விதிகள் டிவிட்டருக்கும் பொருந்தும் என்பது தான்.

———
http://www.maamallan.com/2012/10/blog-post_23.html

http://www.maamallan.com/2012/10/blog-post_26.html

http://govikannan.blogspot.in/2012/10/blog-post_23.html

http://tamil.oneindia.in/movies/news/2012/10/writer-condemn-chinmayi-wrong-complaint-163654.html

7 responses to “பாடகி சின்ம‌யியும் டிவிட்டர் சர்ச்சையும்!.

  1. யாரோரு பிரபலமானவரும் அவர் துறை சார்ந்த கருத்துகளுக்கு ஆமோதித்தோ அல்லது எதிர்த்தோ சொல்வதில் ஆட்சேபணை இருக்க முடியாது. ஆனால் அவர் அதை தாண்டி வேறொரு துறையை பற்றி அதிலும் எளிதில் பற்றிக்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கருத்து சொல்லும்போது சர்வ ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். நிச்சயம் எதிர் கருத்துகள் வர வாய்ப்புண்டு என்றும் அவ்வாறு வந்தால் அதை நல்ல படியாக எதிர்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவம் அடைந்திருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் முதலில் சாதாரனமான கருத்து மோதல் ஆரம்பித்து பின்னார் தடித்து ஆபாச வசனத்தோடு முடியும்போது உணர்ச்சிவசப்பட்டு புகார் தெரிவிக்க புறப்பட்டுவிடக்கூடாது. சின்மயி அவசரப்பட்டு பலரை போலீசில் மாட்டிவிட்டுட்டார். கருத்து பிடிக்காவிட்டால் பிளாக் அல்லது அன்பாலோ செய்துவிட்டு போயிடலாமே. அல்லது டிவிட்டருக்கே புகார் செய்யலாமே. மற்றவர்கள்மேல் தவறு இருந்தாலும், சின்மை செய்தது அதைவிட மகா தவறு. எல்லாவற்றுக்கு மேலாக சைபர்கிரைம் ஆட்கள் முற்றிலும் விசாரிக்காமல், சின்மையை திருப்திபடுத்த மட்டுமே செயல்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

  2. தவறுகள் இரு பக்கமும் உள்ளது,முதலில் புகார் கொடுப்பவர்கள் புத்திசாலிகள்,எல்லபக்கத்திலும் ஆண்கள் அப்பாவிகள்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s