நகரங்கள் உங்கள் கையில்….


அலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வது நல்லது தான்.செல்ல இருக்கும் நகரம் பற்றிய அனைத்து விவரங்களும் இல்லாவிட்டாலும் கூட ஒரு பறவை பார்வையாக அந்நகரம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக இணையவாசிகள் இந்த தகவல்களை திரட்ட கொஞ்ச்ம இணைய ஆராய்ச்சியில் ஈடுபட்டாக வேண்டும்.

கூகுலில் நகரின் பெயரை டைப் செய்து அதில் வரும் முடிவுகளில் இருந்து கொஞ்ச்ம கொஞ்சமாக விவரங்களை சேகரிக்க வேண்டும்.விக்கிபீடியா கட்டுரை,வரைபட‌ விவரங்கள் என்று பல இடங்களில் இருந்து தகவல்களை திர‌ட்ட வேண்டும்.

அப்படியே ஷாப்பிங் செய்ய வேண்டிய இடங்கள் சுற்று பார்க்க வேண்டிய இடங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கான பொறுமை இல்லாதவர்கள் அல்லது இந்த வகை சுயதேடல் தேவையிலாதது என கருதுபவர்கள் நேரடியாக சுற்றுலா சார்ந்த தளங்களில் சென்று தேவையான நகரம் பற்றிய தகவலக்ளை ஒரே கிளிக்கில் பெற்று கொள்ள முயற்சிக்கலாம்.

இந்த வகையான சுற்றுலா விவர தளங்களில் அரைவ்டுஇன் தளமும் ஒன்று.இந்த தளம் ஒரே கிளிக்கில் எந்த ஒரு நகரம் பற்றிய தகவல்களையும் பறவை பார்வையாக எளிய வடிவில் புள்ளிவிவரங்களாக தருகிறது.

ஒரு விதத்தில் இதனை நகரங்களுக்கான தேடியந்திரம் என்றும் சொல்லலாம்.இதில் உள்ள தேடல் கட்டத்தில் உங்களுக்கு தேவையான நகரின் பெயரை குறிப்பிட்டால் போதும் அந்த நகரம் தொடர்பான விவரப்பக்கம் வந்து நிற்கிறது.

முதல் தகவலாக நகரின் அடிப்படை தகவல்களாக விரைவு விவரங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.நகரின் பெயர்,மக்கள் தொகை,இருப்பிடம்,விக்கிபீடியா கட்டுரை ஆகியவை இதில் அடக்கம்.அப்படியே கீழே வந்தால் அருகாமையில் உள்ள விமான நிலையங்கள்,நகரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.அருகே உள்ள நகரங்கள் தேவையா சிறிய நகரங்கள் மற்றும் சிற்றூர் போன்றவை தேவையா என்றும் முடிவு செய்து கொள்ளலாம்.

இவற்றுக்கு கீழே நகரில் இயங்கும் விமான சேவை நிறுவன‌ங்கள்,வானிலை விவரங்கள் மற்றும் நகரின் வேறு பெயர்கள் ஆகிய தகவல்க‌ளையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த விவரங்களுக்கு அருகே நகரின் வரைபடம் மற்றும் பறவை பார்வை காட்சி ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.நாணய மாற்று விவர தகவல்களும் இடம் பெற்றுள்ளது.

இவற்றில் எந்த எந்த தகவல்கள் தேவை என்றும் தீர்மானித்து அதற்கேற்ப சுருக்கி கொள்ளலாம்.

குறிப்பிட்ட‌ நகரமே உள்ளங்கையில் வந்து விடுவதாக சொல்ல முடியாவிட்டாலும் எந்த ஒரு நகரின் நாடித்துடிப்பையும் இந்த பக்கங்கள் படம் பிடித்து காட்டி விடுகின்றன என்று சொல்லலாம்.

நகரங்கள் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்வது மட்டும் அல்லாமல் விரும்பினால் இந்த தளத்தின் உள்ள பேஸ்புக் இணைப்பு மூலம் அந்த நகர்ம் குறித்த உங்கள் கருத்தையும் பதிவு செய்யலாம்.

முகப்பு பக்கத்திலே ஏதேனும் மூன்று நக‌ரங்களின் தகவல் புகைப்படத்தோடு இடம் பெற்றுள்ளன.இந்த படங்களுக்கு கீழே மற்ற நகரங்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதிகம் தேடப்படு நகரங்களுக்கு ஏற்ப இவற்றின் எழுத்துக்கள் சின்னதாகவும் பெரிதாகவும் இருக்கின்றன.அவற்றை கிளிக் செய்தாலே அந்த நகருக்கான பக்கத்திற்கு சென்று விடலாம்.

இணையதள‌ முகவரி;http://www.arrivedin.com/

Advertisements

2 responses to “நகரங்கள் உங்கள் கையில்….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s