இணையத்தில் பாதுகாப்பாக தேடுங்கள்!.

குட்டீஸ் இணைய உலகில் கூகுலை தெரியாதவர்களே இருக்க முடியாது.தேடல் உலகின் ராஜா என்று சொல்லப்பட்டும் கூகுலை நிச்சயம் நீங்களும் அறிந்து வைத்திருப்பீர்கள்.இணையத்தில் தகவல்களை தேட நீங்களே பலமுறை இந்த தேடியந்திரத்தை(சர்ச் இஞ்சின்)பயன்படுத்தியிருப்பீர்கள்.

கூகுல் போலவே வேறு பல தேடியந்திரங்களும் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.ஆனால் உங்களுக்காக என்றே தேடியந்திரங்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?அதாவது குட்டீஸ்களுக்கான என்றே உருவாக்கப்பட்ட பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கின்றன.

இந்த தேடியந்திரங்கள் பாதுகாப்பானவை.எளிமையானவை.குட்டீஸ்களுக்கு ஏற்ற வகையில் கலர்புல்லானவை தெரியுமா?

எப்படி என்று பார்போம்!

கூகுலில் எந்த தகவல் தேடினாலும் கிடைக்கும் தான்.ஆனால் கூகுலில் சிறுவர்கள் பார்வையில் படக்கூடாத தகவல்களும் தளங்களும் கூட கண்ணில் படலாம்.இதனால் தான் உங்கள் அம்மாவோ அப்பாவோ நீங்கள் இணையத்தை பயன்படுத்தும் போது பின்னால் இருந்து பார்த்து கொண்டே இருக்கலாம்.தவறான இணையதளத்தின் பக்கம் பிள்ளைகள் போய்விடகூடாது என்று கவலைப்படலாம்.

இதற்காக என்றே சிறுவர்கள் பார்க்ககூடாத தளங்களை தடுத்து விடும் சாப்ட்வேர் எல்லாம் கூட இருக்கின்றன.நல்ல தளங்களை மட்டுமே இந்த சாப்ட்வேர்கள் வடிகட்டி தருகின்றன.

இத்தகைய பாதுகாப்பு பிள்ளைகளுக்கு தேவை என்று எல்லா பெற்றோர்களும் எதிர்பார்க்கவே செய்வார்கள்.

அதனால் தான் சிறுவர்களுக்காக என்றே தனி தேடியந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த தேடியந்திரங்கள் பாதுகாப்பானவை மட்டும் அல்ல சுட்டீஸ் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மிகவும் சுவாரஸ்யமானவையும் கூட!

உதாரணத்திற்கு அகா கிட்ஸ்.காம் தேடியந்திரத்தை முதலில் பார்ப்போம்.குழந்தைகளுக்கான தேடியந்திரம் என்று தான் இந்த தளம் வரவேற்கிறது.

இந்த தேடியந்திரத்தின் முகப்பு பக்கத்தை (ஹோம் பேஜ்) பார்த்தாலே ரொம்ப ஜாலியாக இருக்கும்.சின்ன சின்ன பொம்மைகளோடு வரவேற்கும் இந்த தேடியந்திரத்தில் கூகுலில் இருப்பது போலவே தேடுவதற்கான கட்டம் இருக்கிறது.அதில் தேடுவதற்கான கீவேர்டை டைப் செய்து தேடலாம்.அதன் பிறகு தேடல் பட்டியல் தோன்றும் அதிலிருந்து தேவையான தகவலை எடுத்து கொள்ளலாம்.எல்லாமே உங்களுக்கு பொருத்தமான தளங்களாக இருக்கும்.

இந்த தேடியந்திரம் கொஞ்சம் விஷுவலானது.அதாவது படங்களாக தகவல்கள் தேவையா என்றும் தீர்மானித்து கொள்ளலாம்.தேடுவதற்கு முன்பே தவல்கள் சாதாரணமாக தோன்ற வேண்டுமா அல்லது காட்சி ரீதியாக (விஷுவலாக)தோன்ற வேண்டுமா என செலக்ட் செய்து கொள்ளலாம்.

இதை தவிர கார்ட்டூன்,விளையாட்டுகள்,பொம்மை செய்தல் ஆகிய தனிப்பகுதிகளும் இருக்கின்றன.இணையத்திலேயே வரைவதற்கான தனிப்பகுதியும் இருக்கிறது.

அது மட்டும் அல்ல தேட கட்டத்திற்கு மேலேயே பல குறிச்சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.அவற்றிலும் கிளிக் செய்து பார்க்கலாம்.

http://aga-kids.com/

இதே போலவே கிட்ரெக்ஸ்.ஆர்ஜி என்னும் தேடியந்திரம் அழகான டைனசோர் படத்தோடு வரவேற்கிறது.இந்த தேடியந்திரம் கூகுலை பயன்படுத்தி சுட்டீஸ்களுக்கு பொருத்தமான தளங்களை மட்டும் தருகிறது.இதில் குழந்தைகளுக்கு என்று தனிப்பகுதியும் பெற்றோர்களுக்கு என்று தனிப்பகுதியும் இருக்கிறது.

குழந்தைகளுக்கான பகுதியை கிளிக் செய்தால் குட்டீஸ் வரைந்த அழகான ஓவியங்களை பார்க்கலாம்.பெற்றோர் பகுதியில் இந்த தேடியந்திரம் பற்றியும் இது ஏன் குழந்தைகளுக்கு ஏற்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kidrex.org/

ஆஸ்க்கிட்ஸ் தேடியந்திரத்தில் எந்த சந்தேகத்தையும் கேள்வியாக கேட்டு தேடலாம்.நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கான பதில்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.இதை தவிர விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் பற்றியும் தேடலாம்.

http://www.askkids.com/

கிஸ்கிளிக்.ஆர்ஜி தேடியந்திரம் சிறுவர்களுக்காக என்று நூலகர்களால் உருவாக்கப்பட்டது.எனவே ஹோம் ஒர்கிற்கு தேவையான தகவல்களை இதில் தைரியமாக தேடலாம்.

http://kidsclick.org/

இவற்றை தவிர யாஹூவின் குழந்தைகளுக்கான தேடியந்திரமும் ஸ்குவரில்நெட் என்ற தேடியந்திரமும் ,ஸ்டடிசர்கில் என்ற தேடியந்திரமும் இருக்கின்றன.

———-

சுட்டி விகடனில் வெளியாகும் எனது தொடரின் இரண்டாவது பதுதி இது.

(நன்றி சுட்டி விகடன்)

2 responses to “இணையத்தில் பாதுகாப்பாக தேடுங்கள்!.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s