வின்கலம் பேசக்கண்டேன்;டிவிட்டர் சிறப்பு பதிவு.

“மனிதர்கள் என்னை செவ்வாய்க்கு அனுப்பி வைத்தனர்.இன்று அவர்கள் படைப்பாற்றலை பூமிக்கு திருப்பி அனுப்பி வைக்கிறேன்”

இதை விட சுவாரஸ்யமான குறும்பதிவை நீங்கள் எதிர்கொள்ள முடியாது.டிவிட்டரில் வெளியான குறும்பதிவுகளில் மிகச்சிறந்த குறும்பதிவுகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.அதோடு டிவிட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது.

இந்த குறும்பதிவு வெளியானது செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வுக்காக சென்றிருக்கும் மார்ஸ் ரோவார் கியூரியாச்சியின் டிவிட்டர் கணக்கில் இருந்து!

பிரபல பாப் பாடகர் வில்லியம்மின் பாடல் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு ஒலிபரப்பட்டதை தான் கியூரியாசிட்டி வின்கலம் இவ்வாறு குறும்பதிவாக பகிர்ந்து கொண்டது.

இந்த நிகழ்வு ஒரு கிரகத்தில் இருந்து மற்றொரு கிரகத்திற்கு ஒலிபரப்பட்ட முதல் பாடலாக கருதப்படுகிறது.கியூரியாட்டி வின்கலம் எம்பி3 வடிவிலான பாட்ல் கோப்பை செய‌ற்கைகோள் மூலம் ஒலிபரப்பிய பாடலை கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு கூடத்தில் அம‌ர்ந்திருந்த பொறியியல் வல்லுனர்கள் கேட்டு ரசித்தனர்.

இந்த நிகழ்வு பத்திரிகைகளில் செய்தியாக வெளியாக பரவலான கவனத்தை ஈர்த்தது.

கியூரியாட்டி வின்கலம் தான் இந்த பாடலை ஒலிபர‌ப்பியது.இந்த தகவலை அந்த வின்கலமே டிவிட்டரில் குறும்பதிவாக பகிர்ந்து கொண்டது உண்மையிலேயே சுவாரஸ்யமானது தானே.

மனிதர்கள் என்னை இங்கே அனுப்பி வைத்தனர் அதற்கு நன்றி கடனாக நான் அவர்களின் பாடலை இங்கிருந்து அனுப்பி வைக்கிறேன் என்று வின்கலம் சொல்வது போல அமைந்திருந்த இந்த குறும்பதிவு அட,வின்கலம் மனிதர்கள் போலவே பேசுமா என்ன என்று கேட்க வைக்கலாம்.

வின்கலம் பேச வாய்ப்பில்லை;குறும்பதிவு செய்யவும் வாய்ப்பில்லை.மனிதர்கள் தான் வின்கலம் போல குறும்பதிவிடுகின்றனர் என்று சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்.ஆம் நாசா விஞ்ஞானிகள் தான் கியூரியாசிட்டியின் செவ்வாய் கிரக பயணத்தை அதன் சார்பாக டிவிட்டரில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

நாசா உள்ளிட்ட அமைப்புகள் டிவிட்டரை ஒரு தகவல் வெளியீட்டு சாதனமாக கருதி டிவிட்டரில் செயல்பட்டு வருகின்றன.அறிக்கை வாயிலாக செய்தி வெளியிடுவது போல வலைப்பின்னல் யுகத்தில் டிவிட்டர் மூலமாக குறும்பதிவுகளாக தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றன.

இப்படி டிவிட்டர் பயன்பாட்டில் முன்னோடியாக விளங்கும் நாசா, வின்வெளி ஆய்வில் முக்கிய பாய்ச்சலாக கருதப்படும் மார்ஸ் ரோவர் வின்கல பயணத்தையும் டிவிட்டர் வழியே பதிவு செய்யவும் பகிர்ந்து கொள்ளவும் தீர்மானித்து கியூரியாசிட்டி வின்கலத்திற்கான டிவிட்டர் கணக்கை துவக்கியது.இந்த கணக்கு மூலம் வின்கலத்தின் செயல்பாடுகள் குறும்பதிவுகளாக வெளியிடப்பட்டு வருகின்ற‌ன.

இந்த குறும்பதிவுகளை வெளியிடுபவர்கள் நாசா விஞ்ஞானிகள் என்றாலும் அவை வழக்கமான செய்தி வடிவில் அலுப்பூட்டும் வகையில் இல்லாமல் மிகவும் சுவாராஸ்ய‌மாக வின்கலமே பகிர்ந்து கொள்வது போல அமைந்திருக்கின்றன.

வின்கலம் தொடர்பான செய்திகள் வரட்டுத்தனமான முறையில் மூன்றாம் நபரால் வெளியிடப்படுவதை விட தானே பேசும் தன்மையோடு பகிர்ந்து கொள்ளப்படுவது ஆர்வத்தை ஏற்படுத்தும் அல்லவா?

அதை தான் வின்கல டிவிட்டர் பக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ள நாசா குழு செய்து வருகிறது.அதாவது இந்த குழு வின்கலத்தில் குரலாக செயல்பட்டு வருகிறது.

இதற்கான அழகான உதாரணம் தான் மேலே பார்த்த குறும்பதிவு.

நாசாவின் நோக்கம் வின்கலத்தின் பயணத்தை பகிர்ந்து கொள்வது மட்டும் அல்ல இந்த பயணம் தொடர்பான ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் தான்.இல்லை என்றால் வழக்கம் போல முக்கிய முன்னேற்றங்களின் போது செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து யாருக்கும் புரியாத விஞ்ஞான் மொழியில் தகவல்களை கொட்டி விட்டு ஆய்வை கவனிக்க போயிருக்கலாம்.

ஆனால் நாசா மிகவும் முக்கியமான செவ்வாய் கிரக ஆய்வு குறித்த தகவல்களை சாமான்ய மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பியது.அதற்கு டிவிட்டரே ஏற்ற வழி என கருதியது.அதோடு இந்த பதிவுகள் நேரடியாக தொடர்பு கொள்ளும் தன்மையோடு இருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டு வின்கலத்தின் பார்வையிலேயே பகிரப்பட்டு வருகிறது.

இதில் நடைமுறை பயனும் இருக்கிறது.டிவிட்டரின் 140 எழுத்து வரம்பிற்குள் ஒவ்வொரு முறையும் வின்கலம் என்னும் வார்த்தையை பயன்படுத்துவதை விட நான் என வின்கலம் சார்பில் குறிப்பிடும் போது கூடுதல் வார்த்தைகளை தவிர்க்கலாம்.அதைவிட முக்கிய‌மாக இது பிந்தொட்ர்பாளர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்.

சும்மாவா ,இந்த வின்கலத்தால் ஈர்க்கப்பட்டு பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் இதன் டிவிட்டர் பக்கத்தை பின்தொடரும் போது அதன் பகிர்வுகள் சுண்டி இழுக்க வேண்டாமா?கிட்யூரியாசிட்டி பகிர்வுகள் அதை தான் செய்து வருகிறது.

வின்கலத்தில் இருந்து பெறப்படும் தகவல்கள் அல்லது அதன் செயல்பாடுகள் அதுவே பேசுவது போல குறும்பதிவாக வெளியாகின்றன.

உதாரண‌த்திற்கு ,வின்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கிய உடன்,தொலைக்காட்சிகளில் அந்த செய்தி பரபரப்போடு வெளியிடப்பட்டு கொண்டிருந்த நிலையில் “நான் பாதுகாப்பாக செவ்வாயில் இற‌ங்கி விட்டேன்.செவ்வாய் கிரகமே நான் உன் மீது அமர்ந்திருக்கிறேன்’ என கியூரியாசிட்டி டிவிட்டரில் பதற்றமே இல்லாமல் அறிவித்தது.

இந்த அப்டேட்டை தங்கள் டிவிட்டர் பதிவு வரிசையில் பார்த்த குறும்பதிவாளர்கள் பரவசமடைந்திருப்பார்கள் அல்லவா?

கியூரியாசிட்டி இப்படி தனது சாத‌னை நிமிடத்தை பகிர்ந்து கொள்வதற்கு முன் அந்த பயணத்தின் முக்கிய கட்டங்களையும் ஒருவித பரபரப்போடு பகிர்ந்து கொண்டு வந்தது.ஒரு எதிர்பார்ப்பையும் உருவாக்கி வந்தது.

அந்த குறும்பதிவுகள இப்போது திரும்பி பார்த்தாலும் சுவாரஸ்யமாக இருப்பதை உணரலாம்.அந்த பதிவுகள் இதோ:

“எனது சென்சாரில் இறுதி சோதனை நடத்த உள்ளனர்.தரையிரங்க இன்னும் 11 நாட்கள் உள்ளன”

“முன்னேறி வருகிறேன்.நாசா எனது பாதையை கண்காணித்து வருகிறது.இன்னும் 10 நாட்கள் உள்ளது”

“லன்டனில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டிருக்க நான் இறுதிகட்ட சரிபார்த்தல்களுக்காக தயாராகி கொண்டிருக்கிறேன்.இன்னும் 9 நாட்கள் உள்ளன”

“செவ்வாய்க்கான இறுதி கட்டத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறேன்.இறகு இன்னும் ஒரு வாரம் உள்ளது.ஆக‌ 5 ல் நீங்கள் பார்ப்பீர்களா?”

‘இன்று எனது பிளைட் குழு தானாகவே நுழைந்து,இறங்கி தரையில் நிலைகொள்வதற்கான செயலில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.”

‘டைம்லைன் செயல்படத்துவங்கியுள்ளது.நுழைந்து,இறங்கி தரையில் நிலைகொள்வதற்கான சாப்ட்வேரை நானே இயக்கத்துவங்கியுள்ளேன்.செவ்வாய்க்கு இன்னும் நான்கு நாட்கள்’

‘இன்னும் 3 நாட்கள் உள்ளன்.எந்து எஞ்ஜினியர்கள் விளக்குவதை கேளுங்கள்’

‘எல்லாம் சீராக இருக்கிறது.நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்,இறங்குவதற்கான பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறேன்.இன்னும் 3 நாட்கள்.’

‘செவ்வாயிலிருந்து 5 லட்சம் மைல் தொலைவில் இருக்கிறேன்.பூமியில் இருந்து செவ்வாய் சிவப்பு கிரகம் நிலவின் அளவில் தெரிகிறது.இன்ன்னும் 2 நாட்கள்.’

‘இன்னும் ஒரு நாள் தான்.இறங்குவதற்கு முன்னான எனது விளக்கத்தை பாருங்கள்’

‘செவ்வாயின் ஈர்ப்பை உணர்கிறேன்,34 மணிக்கும் குறைவாக உள்ளது.ஈர்ப்பு எனது இறங்குதலை பரபரப்பாக்கியிருக்கிறது”

‘இப்போது பூமிக்கு நிலவு இருப்பதை விட செவ்வாயிக்கு அருகில் இருக்கிறேன்.இன்னும் 28 மணி’

‘இன்று இறங்கப்போகிறேன்.சில மணிகளே இருக்கின்றன.’

‘ செவ்வாயை நெருங்க 2 மணி நேரம்.16,300 மைல்களே உள்ளன,வேகமாக நெருங்கிறேன்,8900 மைல் வேகம்.’

‘பிரிக்கும் படலம் வெற்றிகரமாக முடிந்தது.செவ்வாய்க்கு 17 நிமிடங்கள்.’

‘செவ்வாயின் வாயு மண்டலத்தில் நுழைகிறேன்.பதட்டமான 7 நிமிடங்கள் ஆரம்பமாகிறது.’

‘பாதுகாப்பான இறங்கி கொண்டிருக்கிறேன்’

‘பாரசூட் விரிந்துவிட்டது.900 மைல் வேகம்.4 நிமிடங்கள்.’

‘செவ்வாயில் வெற்றிகரமாக இறங்கிவிட்டேன்.செவ்வாயே உன் மீது நான் இருக்கிறேன்.’

நேரடி சுய வர்ணனை போல அமைந்திருந்த இந்த குறும்பதிவுகள் கியூரியாசிட்டி வின்கல‌த்தின் முன்னேற்றத்தை அதன் பார்வையிலேயே அழகாக விவரித்திருந்தது.

அதிலும் செவ்வாயில் இறங்கி விட்டேன் என்று வின்கலம் பெருமிதத்தோடு அறிவித்த போது பின் தொடர்பாளர்களுக்கு மிகுந்த பரவசத்தையும் சாதனை உணர்வும் ஏற்பட்டிருக்கும்.

செவ்வாய்க்கு வின்கலம் அனுப்பபடும் செய்தி பற்றி மிடியாவில் படித்து அதன் முன்னேற்றம் குறித்து அறிய ஆர்வம் ஏற்பட்டிருந்த நிலையில் கியூரியாசிட்டியின் சாதனை பயணத்தின் தகவல்களை அதன் மூலமே அறிந்து கொள்ள இந்த குறும்பதிவுகள் உதவின.

நாளிதழ்கள் அல்லது டிவி மூலம் செய்தியாக் தெரிந்து கொள்வதை காட்டிலும் இப்படி வின்கலத்தின் டிவிட்டர் பதிவுகள் மூலமே அதன் முன்னேற்றத்தை அறிய முடிந்தது புதிய அனுபவம் என்றே சொல்ல வேண்டும்.

கியூரியாசிட்டி செவ்வாயில் இறங்கிய செய்தி பூமியில் வெற்றிக்களிப்பை ஏற்படுத்த தொடர்ந்து அது தனது செய்ல்பாடுகளை குறும்பதிவுகளாக பகிர்ந்து கொண்டது.
உதாரணத்திற்கு ‘என்னிடம் இருந்து புகைப்படத்தை கேட்கிறீர்கள்.இதே நான் எடுத்த முதல் புகைப்படங்கள் ‘என்னும் குறும்பதிவோடு செவாயில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டன‌.

இதே போலவே ஒவ்வொரு செயலும் குறும்பதிவாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.

பூமிக்கு பாடலை அனுப்பி வைத்தது தொடர்பான குறும்பதிவும் இந்த வரிசையில் தான் வெளியானது.

தொடர்ந்து கியூரியாசிட்டியின் ஆய்வுகள் சுவாரஸ்யமான முறையில் குறும்பதிவுகளாக வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த டிவிட்டர் பக்கத்தை பின் தொடர்ந்தால் கியூரியாசிட்டியை நேரடியாக பின் தொடர்வது போன்ற உண‌ர்வை பெறலாம்.விண்வெளி ஆய்வில் இது ஒரு மகத்தான அனுபவம்.

டிவிட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கும் இது அழகான உதாரணம்.விண்வெளி ஆய்வை எப்படி மேலும் ஜன்நாயகமயமாக்கலாம் என்பதற்கும் அழகான உதாரணம்.
இந்த சாதனைக்கு பின்னே நாசா விஞ்ஞானிகள் குழு இருக்கிறது.

நாசாவின் சமூக ஊடக மேளாலரான வெரோனிகா மெகிரிகார் தாலைமையிலான மூவர் குழு கியூரியாசிட்டி சார்பில் இந்த குறும்பதிவுகளை வெளியிட்டு வருகிறது.


https://twitter.com/MarsCuriosity

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s