நண்பர்களோடு புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள புதிய வழி.

இணையத்தில் பார்க்கும் நல்ல புகைப்படத்தை நண்பரோடு பகிர்ந்து கொள்ள விரும்பினால் என்ன செய்வீர்கள்?இமெயில் மூலம் அந்த படத்தை அனுப்பி வைக்கலாம்.அல்லது டிராப் பாக்ஸ் போன்ற இணைய சேமிப்பு சேவைகளை பயன்படுத்தலாம்.

இரண்டு வழிகளுமே வேண்டாம் வேறு ஒரு எளிய வழி தேவை என நீங்கள் நினைத்தால் ஒய்பிக்ஸ்மீ இணையதளத்தை பயன்படுத்திப்பார்க்கலாம்.

எந்த புகைப்படடத்தை பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களோ அந்த படத்தை இந்த தளத்தில் பதிவேற்றலாம்.அல்லது புகைப்படத்தை இந்த தளத்தில் உள்ள வெற்று மேகம் போன்ற பகுதியில் அப்படியே இழுத்து கொண்டு வந்து வைத்துவிடலாம்.

அதன் பிறகு அந்த புகைப்படத்திற்கான இணைய முகவரி ஒன்று தரப்படும்.அந்த முகவரியை அனுப்பி வைத்தால் அதனை பெறும் நணபரும் அந்த முகவரி மூலமாக நீங்கள் பதிவேற்றிய பக்கத்தை அதில் உள்ள புகைப்படத்தோடு பார்க்கலாம்.

நண்பர் தன் பங்கிறகு புகைப்படத்தை பதிலுக்கு பகிர்ந்து கொள்ள விரும்பினாலும் இதே முறையில் புகைப்படத்தை பகிரலாம்.

இணையதளத்தை ஒரு முறை புதுப்பித்து கொண்டால் மீண்டும் புதிய முகவரியில் புதிய புகைப்படத்தை பகிர்ந்து கொள்ள தயாராகலாம்.

புகைப்படம் மட்டும் அல்லாமல் இணையதளங்களில் ஸ்கிரின்ஷாட் போன்றவற்றையும் இப்படி பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த சேவையை பயன்படுத்த எதையும் டவுண்லோடு செய்யும் அவசியம் இல்லை.கூகுலின் கிரோம் பிரவுசரில் அணுகினால் புகைப்படம் பதிவேற்றப்பட்டது தொடர்பான எச்சரிக்கை தகவலையும் பெறலாம்.

இணையதள முகவரி;http://ypix.me/17d5/

Advertisements

3 responses to “நண்பர்களோடு புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள புதிய வழி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s