இளம் எழுத்தாளர்களுக்கான பேஸ்புக்.

எழுத்தாளராவதற்கு தான் எத்தனை தடைகள்!

முதலில் எழுத வேண்டும்.எழுதியதை திருத்தி செப்பனிட்டு புத்தகத்தை வெளியிட வேண்டும்.அதன் பிறகு வாசகர்கள் கிடைக்க வேண்டும்.

இதற்கு மாறாக எழுதும் போதே வெளியிடுவதற்கான வாய்ப்பும் படிப்பதற்கான வாசகர்கள் கிடைத்தால் எப்படி இருக்கும்?

விட்புக் இணையதளம் இந்த அற்புதத்தை தான் சாத்தியமாக்குகிறது.

எழுத்தார்வம் கொண்டவர்களுக்கான பேஸ்புக் போன்ற வலைப்பின்னல் தளமாக இந்த விட்புக் உருவாக்கப்பட்டுள்ளது.

எழுதுங்கள்,படியுங்கள்,பகிருங்கள்! என அழைக்கும் இந்த வலைப்பின்னல் எழுத்தாளராக தேவையான எல்லாவற்றையும் வழங்குகிறது.

இதற்கு இந்த தளத்தில் உறுப்பினரானால் போதுமானது.(பேஸ்புக் பயனாளிகள் நேராக நுழைந்து விடலாம்).

உறுப்பினராகும் போதே எழுத்தில் நீங்கள் விரும்பும் வகைகளை (தொழில்நுட்பம்,இலக்கியம்,வரலாறு…)போன்றவற்றை குறிப்பிட்டு படித்த பள்ளி போன்ற அடிப்படையான விவரங்களையும் குறிப்பிடலாம்.

நிங்கள் குறிப்பிடும் எழுத்து வகைக்கேற்ப உங்களுக்காக புத்தகங்கள் சில பரிந்துரைக்கப்படும்.அவற்றை பிறகு பார்ப்போம்.இப்போது எழுதுவதை கவனிக்கலாம்.அதற்கு முன்பாக விட்புக்கில் உங்கள் பேஸ்புக் நண்பர்கள் யாராவது இருக்கின்றனரா என்று பார்த்து அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் எழுத்து திட்டத்தை தெரிவிக்கலாம்.

புதிதாக நாவல் எழுதப்போகிறேன் என்றோ அல்லது கம்புயூட்டர் பயன்பாடு அனுபவ குறுப்புகளை எழுதப்போகிறேன் என்றோ தெரிவிக்கலாம்.அதன் பிறகு எழுத துவங்கலாம்.எழுதும் போது ஏற்படும் எண்ணங்களையும் அனுபவங்களையும் பேஸ்புக் அப்டேட் போலவே பகிர்ந்து கொள்ளலாம்.

இனி எழுத ஆரம்பிக்கலாம்.

‘புதிய புத்தகத்தை உருவாக்க’என உள்ள பகுதியை கிளிக் செய்தால் எழுதுவதற்கான புத்தக பக்கங்கள் வந்து நிற்கின்றன.அதற்கு முன்பாக புத்தகத்தின் தலைப்பு,துணை தலைப்பு மற்றும் புத்தகம் பற்றிய விளக்கத்தையும் குறிப்பிட்டு புத்தகத்திற்கான அறிமுகத்தை அளிக்கலாம்.வலைப்பின்னல் தளம் என்பதால் புத்தகத்தில் மற்றவர்கள் பங்களிப்பு மற்றும் பின்னூட்டம் வடிவில் கருத்துக்களை அனுமதிக்க விருப்பமா என்றும் தெரிவிக்கலாம்.

இனி எழுத எந்த தடையும் இல்லை.சும்மா சொல்லகூடாது திரையில் தோன்றும் இணைய குறிப்பேட்டை பார்த்தாலே எழுத ஆர்வம் ஊற்றெடுக்கும்.அந்த அளவுக்கு சகல வசதிகளோடு சிறப்பாக இருக்கிறது குறிப்பேடு.

ஒவ்வொரு அத்தியாயமாக பெயரிட்டு எழுதி கொண்டே போகலாம்.எழுதியதை சேமித்து விட்டு அடுத்ததாக எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதுஎழுதலாம்.எழுதியதை எப்போது வேண்டுமானாலும் திருத்தி கொள்ளலாம்.

எழுதுவதற்கான இணைய குறிப்பேடு கிட்டத்தட்ட இபுக்கிற்கான அனைத்து வசதிகளுடனும் இருப்பதால் எழுதி முடித்தவுடன் முழு புத்தகமாக உருவாக்கி விடலாம்.

எழுதி முடித்த புத்தகத்தை இந்த தளத்திலேயே வெளியிடலாம்.அதாவது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.அவர்களும் அதை படித்து விட்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இவ்வளவு ஏன் புத்தகத்தை எழுதும் நிலையிலேயே கூட ஒவ்வொரு அத்தியாயத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.விரும்பினால் சக உறுப்பினர்கள் திருத்தங்களை தெரிவிக்கவும் அனுமதிக்கலாம்.அல்லது அவர்கள் கருத்துக்களை அறிந்து அதற்கேற்ப மேம்படுத்திக்கொள்ளலாம்.இன்னுமொரு பட மேலே போய் ஒத்த கருத்துள்ள உறுப்பினர்களை சேர்ந்து எழுதவும் அனுமதிக்கலாம்.

இந்த கருத்து பரிமாற்றமே விட்புக் வலைப்பின்னலை தனித்துவம் மிக்கதாக ஆக்குகிறது.

ஒரு படைப்பை உருவாக்கும் போதே அது பற்றி நண்பர்களோடும் இலக்கிய நிபுனர்களோடும் விவாதித்து அவர்கள் கருத்துக்களை அறிந்து அதற்கேற்ப அந்த படைப்பை பட்டை தீட்டிக்கொள்ளும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடாது.ஆனால் இந்த வாய்ப்பை ஆர்வம் உள்ள எல்லா இளம் எழுத்தாளர்களுக்கும் சாத்தியமாக்குகிறது விட்புக்.

எழுதும் போதே வாசகர்களை பெற வழி செய்வதோடு எழுத்து சார்ந்த நட்பை தேடிக்கொள்ளவும் வாய்ப்பு தருகிறது இந்த வலைப்பின்னல்.

நீங்களும் கூட மற்ற இளம் எழுத்தாளர்கள் எழுதுவதை படித்து கருது தெரிவித்து ஊக்குவிக்கலாம்.மற்ற எழுத்தாளர்களுக்கு நேரிடியாக செய்தி அனுப்பி தொடர்பு கொள்ளலாம்.அவர்களோடு உரையாடலாம்.எல்லாமே எழுத்து சார்ந்த உறவை வளர்க்கும்.

எழுத்தாளர்கள் தங்கள் பக்கத்தில் எழுதிய புத்தகத்தை இடம் பெற செய்வதோடு புத்தக அலமாரி,செய்தி பரிமாற்ற அறை,கூட்டு முயற்சி அரங்கு ஆகியவற்றையும் அமைத்து கொள்ளலாம்.

இவ்வளவுக்கும் இடையே தினமும் எழுத்தின் முன்னேற்றத்தை பகிர்ந்து கொள்ளலாம்.எழுத்தாளராக விரும்புகிற்வர்களுக்கு இது கிட்டத்தட்ட இணைய சொர்கம் தான்.

இணையதள முகவரி;http://www.widbook.com/home

Advertisements

5 responses to “இளம் எழுத்தாளர்களுக்கான பேஸ்புக்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s