பேஸ்புக் மூலம் புதிய நண்பர்களை பெற இந்த இணையதளம்.

964054_origபேஸ்புக் இப்போது ரொம்பவும் தான் பிரபலமாகிவிட்டது.யாரை கேட்டாலும் பேஸ்புக்கில் இருக்கிறார்கள்.அது தான் பேஸ்புக் மூலமே புதிய நண்பர்களை தேடிக்கொள்ள உதவுவதற்காக ஒரு இணையதளம் உருவாகியுள்ளது.

பேஸ்புக்கே நண்பர்களுக்கான வலைப்பின்னல் தானே,பிறகு அதன் மூலம் நண்பர்களை தேட தனியே ஒரு இணையதளம் எதற்கு என்று கேட்க தோன்றலாம்.

பேஸ்புக் நண்பர்களுக்கான இடம் என்ற போதிலும் பேஸ்புக்கின் உண்மையான பலம் நண்பர்கள் இல்லை.அதன் பலம் நண்பர்களின் நண்பர்கள்,அவர்களின் நண்பர்கள்! இவர்களில் இருந்து தான் புதிய நம்பகமான நண்பர்களை தேடித்தருவதாக சொல்கிறது ‘3 டிகிரீஸ் நேஷன்’ என்னும் அந்த இணையதளம்.

புதிய நகரத்துக்கு செல்லும் போது அங்கு பழகி கொள்ள புதிய நண்பர்கள் தேவை என்றாலோ அல்லது நண்பன் விஜய் போல ஒரு பிரண்ட் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாலோ இந்த தளம் அத்தகைய நண்பர்களை அடையாளம் காட்டுகிறது.அதுவும் நமது பேஸ்புக் வலைப்பின்னலில் இருந்து தேடித்தருகிறது.

புதிய நண்பர்கள் தேவை என்று விரும்பினால் சாட்டிங் செய்வது உட்பட பல வழிகள் இல்லாமல் இல்லை.இதற்காக என்றே சில பிரத்யேக இணையதளங்கள் இருக்கவும் செய்கின்றன.

ஆனால் அறிமுகம் இல்லாதவர்களோடு பேசிப்பழக தயாராக இருப்பவர்களுக்கு தான் இவை சரியாக இருக்கும்.நம்மில் பலர் நல்ல நண்பர்கள், நல்ல நண்பர்கள் மூலமே அறிமுகமாக வேண்டும் என்று தானே விரும்புவோம்.அதாவது நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் அறிமுகம் செய்து வைக்கும் நபர்களோடு கை குலுக்கி பேசுவது போன்ற ஒரு சகஜ உணர்வு எல்லோரிடமும் வந்துவிடாது.

யோசித்து பார்த்தால் நமது சிறந்த நண்பர்கள் இப்படி அறிமுகம் செய்யப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

பேஸ்புக் வலைப்பின்னலின் அடிப்படை தத்துவமே இது தான்.நமது நண்பர்கள் அவர்களின் நண்பர்கள்…. இப்படி தான் பேஸ்புக் வலைப்பின்னல் பரந்து விரிகிறது.ஆனால் அவப்போடு இவர்களை நீங்கள் பிரண்டாக்கி கொள்ளலாம்,என்ன என்றால் உங்கள் இருவருக்கும் இடையே இத்தனை பொது நண்பர்கள் உள்ளனர் என்று பரிந்துரைப்பதை தவிர பேஸ்புக் இந்த நட்பு சங்கிலியை பயன்படுத்தி கொள்ள எதையும் செய்வதில்லை.

இந்த குறையை தான் 3 டிகிரீஸ் நேஷன் போக்குகிறது.பரஸ்பர நண்பர்கள் வலைப்பின்னலில் இருந்து புதிய நண்பர்களை இது சல்லடை போட்டு தேடித்தருகிறது.

எப்படி என்றால், முதலில் பேஸ்புக் நண்பர்களின் நட்பு பட்டியலில் இருந்து அவர்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள்,அவர்களின் நட்பு வட்டங்களில் உள்ளவர்கள் என்று நண்பர்களின் நண்பர்களை எல்லாம் திரட்டிக்கொள்கிறது.இந்த பட்டியலை நாமே கூட தயார் செய்து விடலாம்.

ஆனால் இந்த நண்பர்கள் குவியலில் இருந்து நமக்கு பொருத்தமான நண்பர்களை தேடித்தருவது தான் இந்த தளத்தின் பணி.

இருப்பிடம் ,குணாதிசயம்,ரசனை,பழக்க வழக்கங்கள் என பல் வேறு அம்சங்களை அலசிப்பார்த்து தகுதி வாய்ந்த நண்பர்களை இந்த சேவை பரிந்துரைக்கிறது.

உதாரணமாக உங்கள் இருப்பிடம் அருகிலேயே உள்ள நண்பர்களை தேடிக்கொள்ளலாம்.புத்தகம் படிப்பாவர்கள் புத்தக ஆர்வம் உள்ளவர்களாக தேடிப்பார்க்கலாம்.அவர்கள் புதியவர்கள் என்றாலும் உங்கள் நண்பனின் நண்பர் என்பதால் அதை சொல்லியே நீங்கள் அறிமுகமாகலாம் என்பதோடு அவர்களை தொடர்பு கொள்வது பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

அதே போல திடிரென புதிய நகருக்கு செல்ல நேர்ந்தால் அங்கே நண்பர்களாக கூடியவர்கள் யாரேனும் உள்ளனரா என்று இந்த தளத்தின் வழியே தேடிப்பார்த்து தொடர்பு கொள்ளலாம்.

சொல்லப்போனால் இந்த தளத்தின் நிறுவனரான பிரயான் ஸ்கோர்டாடோ புதிய நகரம் ஒன்றுக்கு சென்றிருந்த போது அங்கே யாருமே நண்பர்கள் இல்லாத நிலையில் தனது நண்பரின் நண்பர் ஒருவர் அந்த நகரில் இருப்பதை நினைவில் கொண்டு அவரை தொடர்பு கொண்டு அறிமுகம் செய்து கொண்டார்.அதன் பிறகு இருவரும் நெருக்காமான நண்பர்களாகிவிட்டனர்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கத்தில் இதே போல புதிய நண்பர்கள் எல்லோருக்கும் கிடைக்க வழி செய்யும் வகையில் பேஸ்புக் வலைப்பின்னலில் இருந்து நண்பர்களை தேடிக்கொள்ளும் சேவையை உருவாக்கினார்.

இணையதள முகவரி;http://www.3degreesnation.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s