சிறுவர்களுக்கென்று ஒரு பிரவுசர்.

 

இணையத்தில் உலாவ பிரவுசர் அவசியம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.கூகுல் குரோம் ,பயர்பாகக்ஸ், எக்ஸ்ப்ளோரர் ஆகிய பிரபலமான பிரவுசர்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இவற்றில் ஏதாவது ஒன்றை உங்கள் வீட்டு கம்ப்யூட்டடரில் பயன்படுத்தவும் செய்யலாம்.

 

ஆனால்,நீங்கள் ஏன் பெரியவர்களுக்கான பிரவுசரை பயன்படுத்த வேண்டும்? உங்களுக்கு என்று உள்ள ஸ்பெஷல் பிரவசரை பயன்படுத்தி பார்த்தால் என்ன?ஆம், சுட்டிசாகிய உங்களுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பிரவுசர் இருக்கிறது தெரியுமா? அதன் பெயரும் கியூட்டானது தான். ‘கிட்ஸ்யூயி’.

 

எப்போதுமே சிறுவர்களின் உலகம் தனி தான். அதே போல் இணயத்திலும் சிறுவர்களுக்கான தனி உலகம் இருக்கவே செய்கிறது.அந்த சிறுவர் இணைய உலகில் உலாவுதற்கான வழியாக ‘கிட்ஸ்யூயி’அமைந்துள்ளது. அதாவது சிறுவர்களுக்கான இணையதளங்கள், சிறுவர்களுக்கான வீடியோக்கள், சிறுவர்களுக்கான கேம்கள் என எல்லாமே சுட்டிசுக்கான விஷயங்களாக பார்க்கலாம்,பயன்படுத்தலாம்.

 

அடிப்படையில் இந்த பிரவுசர் சுட்டிசுக்கான பாதுகாப்பிறகாக உருவாக்கப்பட்டது. இணையம் தகவல் கடல். அதில் எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன.ஆபத்தான விஷயங்களும் இருக்கின்றன. சிறுவர்கள் பார்க்க கூடாத தளங்களும் இருக்கின்றன.

 

இத்தகைய ஆபத்துகளில் பிள்ளைகள் சிக்கி கொள்ளக்கூடாது என்று அப்பா,அம்மாவுக்கு கவலையாக இருக்கும் இல்லையா? அந்த கவலையை போக்குவதற்காக ஆபத்தான இணையதளங்களை பிளாக் செய்யும் சாப்ட்வேர் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளன. பொதுவாக இவை பில்டர் என்று குறிப்பிடப்படுகின்றன. அதாவது சிறுவர்களுக்காக இணையத்தை வடிகட்டி தருகின்றன இந்த சாப்ட்வேர்கள்.

 

இணைய வடிகட்டிகளில் பலவகை இருக்கின்றன.இவற்றை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.

 

ஆனால் ஒரு விதத்தில் இவை பிள்ளைகளை கண்கானிப்ப்து போல தான். பெற்றோர்களின் நோக்கம் நல்லது தான் என்றாலும் பிள்ளைகள் இப்படி காண்காணிக்கப்படுவதயோ கட்டுப்படுத்தப்படுவதையோ விரும்பாமல் போகலாம்.

 

விளையாடும் போது தான் அங்கே போகாதே இங்கே போகாதே என்றால் இணையத்திலுமா கட்டுப்பாடு என்று நினைக்கலாம். ஆனால் சிறுவர்களுக்காக என்றே ஒரு பிரவுசர் இருந்தால் இந்த பிரச்சனை எல்லாம் கிடையாது அல்லவா? அந்த பிரவுசரில் சிறுவர்களுக்கு உகந்த விஷயங்களை மட்டுமே பார்க்க முட்டியும் என்பதால் பெற்றோர்களும் கவலை இல்லாமல் இருக்கலாம்,பிள்ளைகளும் சுதந்திரமாக இணையத்தை பயன்படுத்தலாம்.

 

கிட்ஸ்யுயி இப்படிப்பட்ட பிரவுசராக தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரவுசரை பயன்படுத்தும் போது சிறுவர்களுக்கெ என்று தேர்வு செய்யப்பட்ட இணையதளங்கள் மட்டும் வீடியோக்களே தோன்றும். இதில் தேடும் போது சிறுவர்களுக்கான தகவல்களே தோன்றும். சிறுவர்களுக்கு ஏற்ற தேடல் குறிப்புகள் வழங்கப்படுவதோடு புகைப்பட குறிப்புகளையும் காண‌லாம்.

 

இதில் பார்க்கும் இனையதளங்களை அப்படியே புக்மார்க் செய்து பின்னர் பார்த்து கொள்ளலாம். அதோடு பிரவுசரின் முகப்பு பக்கமும் புகைப்படங்கள் அனிமேஷன் என்று எப்போதுமே வண்ணமயமாக அட்டகாசமாக இருக்கும்.

 

அதே போல கல்வி சார்ந்த வீடியோக்களையும் பார்க்கலாம். பாதுகாப்பான கேம்களையும் ஆடலாம். எல்லாமே பெற்றோர்களும் ஆரிச்ரியர்களும் பார்த்து பார்த்து தேர்வு செய்தவை.

 

இப்படி இந்த பிரவுசரில் எல்லாமே சிறுவர்களுக்கானதாக இருப்பதால் சுட்டிசுக்கு பாதுகாப்பானது மட்டும் அல்ல ,போரடிக்காததும் கூட.

 

சுட்டிசின் உலகம் தன் என்னும் போது அவர்களுக்கான பிரவுசரும் தனியாக இருப்பது சரி தானே. இந்த பிரவுசர் இலவசமாக கிடைக்கிறது. கிட்ஸ்டயூயி தளத்தில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

 

இணையதள முகவரி;http://www.kidzui.com/

———

நன்றி சுட்டி விக‌டன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s