சின்ன சின்ன வேலைகளுக்கு ஒரு இணையதளம்.

<
போராளி படத்தில் சசிகுமார் பிள்ளையார் பைடு சர்வீஸ் என்னும் பெயரில் புதுமையான நிறுவனம் ஒன்றை நடத்தி முன்னேறுவார்.சென்னைக்கு பிழைக்கு வந்த‌ இடத்தில் வேலை கிடைக்கவில்லையே என்றெல்லாம் புல‌ப்பிக்கொண்டிருக்காமல் கையில் ஒரு செல்போனை வைத்து கொண்டு எந்த வேலையாக இருந்தாலும் எங்களை அழையுங்கள் செய்து தருகிறோம் அதற்கான சேவை கட்டணம் தாருங்கள் என்று சொல்லியபடி பிள்ளையார் பைடு சர்வீசை சசி ஆரம்பித்து நடத்தி அசத்துவார்.

 

இந்த சேவையை இனையத்தின் மூலம் இன்னும் கூட சிறப்பாக செயல்படுத்தலாம்.சோட்டு.கோ இணையதளம் அதை தான் செய்ய முற்படுகிறது.

 

சின்ன சின்ன வேலைகளை செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கிறது.தலைக்கு மேல் வேலை இருக்கும் பலரால் இந்த வேலைகலை கவனிக்க முடிவதில்லை,அல்லது இந்த வேலைக்காக போய் நின்றால் முக்கிய வேலை கெட்டுப்போய்விடுகிறது.

 

இன்னொரு பக்கமோ கைநிறைய நேரத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து கொண்டிருப்பவர்களும் அதிகம் உள்ளனர்.இவர்களில் பலர் சின்னதாக வேலை கிடைத்தால் செய்யத்தயாராக இருக்கலாம்.

 

இந்த இருவருக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தி தருவது தான் சோட்டு தளத்தின் நோக்கம்.

 

பிசியாக இருப்பவர்கள் தங்களுக்கு உடனடியாக ஆக வேண்டிய சின்ன வேலைகளை இந்த தளத்தில் பட்டியலிடலாம்.அதனை செய்து முடிப்பவர்களுக்கு தரத்தயாராக இருக்கும் தொகையையும் குறிப்பிடலாம்.

 

 

இந்த வேலையை செய்து தர விருப்பமுள்ளவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு வேலையை நிறைவேற்றி தந்து அதற்கான கட்டண‌த்தை பெற்று கொள்ளலாம்.

 

மின் கட்டண‌த்தை செலுத்த வேண்டும்,பிறந்த நாள் பரிசு பொருள் தேர்வு செய்து வாங்கி தர வேண்டும்,ஒரு பக்க கட்டுரையை மொழி பெயர்த்து தர வேண்டும்,சின்னதாக ஒரு சர்வே நடத்தி தர வேண்டும்,இணைய வடிவமைப்பிற்கான உதவி செய்ய வேண்டும் என்பது போன்ற எந்த விதமான வேலையையும் இந்த தளத்தில் பட்டியலிடலாம்.

 

இந்த வேலைகளை எல்லாம் போஸ்ட் ஏ டாஸ்க் பகுதியில் பட்டியலிடலாம்.இதற்கு பேஸ்புக் கணக்கு மூலம் உறுப்பினராக வேண்டும்.

 

இது போன்ற  வேலைகளை செய்ய தயாராக இருப்பவர்கள் இந்த பட்டியலை பார்த்து தொடர்பு கொள்ளலாம்.இதற்காக பைன்ட் ஏ டாஸ்க் பகுதி இருக்கிற‌து.

 

ஓய்வு நேரம் உள்ள கல்லூரி மாணவர்கள்,பகுதி நேர பணியை எதிர்நோக்கியிருப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த வேலையை செய்து தர முன் வரலாம்.

 

கை நிறைய வேலைகளை வைத்து கொண்டு அவற்றுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் திணறுபவர்கள் அந்த வேலையை இங்கே பட்டியலிட்டு விட்டு நிம்மதியாக இருக்கலாம்.

 

வேலை செய்ய தயாராக இருப்பவர்கள் இத்தகயை சின்ன சின்ன வேலையை செய்வது குறித்து தயக்கம் அடையாதவர்களாக இருக்க வேண்டும்.மேலும் ஒரு சில வேலைகளை ஆர்வம் மற்றும் ஈடுபாடு காரணமாகவும் செய்யலாம்.

 

உதாரண‌த்திற்கு ஒருவருக்கு அவசரமாக ரெயில் டிக்கெட் புக் செய்ய வேண்டிய தேவை இருக்கலாம்.ஆனால் இணையத்தில் புக் செய்வதில் கூட அவருக்கு அனுபவம் இல்லாமல் இருக்கலாம்.இணையத்தில் டிக்கெட் புக் செய்வதெல்லாம் சர்வ சாதாரணமாக அறிந்து வைத்திருக்கும் ஒருவர் தனது அனுப‌வத்தின் அடிப்படையில் இந்த வேலையை ஒரு உதவி போலவே கூட செய்து தரலாம்.

 

இப்படி இன்னும் நிறைய உதாரண‌ங்களை நடைமுறையில் காணலாம்.

 

 

சோட்டு என்றால் இந்தியில் சின்ன பையன் என்று பொருள்.பல நேரங்களில் சின்ன சின்ன வேலைகளை சின்ன பையன்களிடம் உதவியாக கேட்போம் அல்லவா?அந்த வேலைகளை மற்றவர்கள் மூலம் செய்து முடித்து கொள்வதற்கான பாலமாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

டாஸ்கமிகோ போன்ற இணையதளங்கள் இந்த பிரிவில் மேலை நாட்டில் பிரபலமாக உள்ளன.இணையத்தின் தொடர்பு ஏற்படுத்தி தரும் ஆற்றலை ப‌யன்படுத்தி உதவி தேவைபடுபவர் உதவ தயாரக இருப்பவர் என இரு தரப்பினரையும் சேர்த்து வைக்கும் வகையில் இந்த தளங்கள் அமைந்துள்ள‌ன

இந்தியாவைப்பொருத்த வரை இது புது முயற்சி.

 

இணையதள முகவரி;http://www.chotu.co/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s