கூகுல் த‌லை மேல் ஒரு தேடியந்திரம்.

surf

மாற்று தேடியந்திரங்கள் எத்தனை இருந்தால் என்ன  தேடியந்திர மாற்றம் தேவையில்லை என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர்.அதாவது மாற்று தேடியந்திரம் வேண்டாம்,கூகுலே போதும் என நினைக்கின்றனர்.

ஆனாலும் மாற்று தேடியந்திரங்களுக்கு குறைவில்லை. கூகுலோடு போட்டியிட்டு வெல்ல முடியாவிட்டாலும் தங்களுக்கென தனி தேடல் பாதையை உருவாக்கி கொண்டுள்ள தேடியந்திரங்களும் இல்லாமல் இல்லை.

இவற்றில் சில இணையவாசிகளின் கூகுல் அபிமானத்தை சோதிக்க கூடியது.சிலவற்றின் நோக்கம் கூகுலின் தேடல் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் இருக்கிறது.ஒரு தேடியந்திரமாக கூகுலின் போதாமைகளை சுட்டிக்காட்டி அதற்கு தீர்வு அளிக்க முயலும் தேடியந்திரங்களும் இருக்கின்றன.

இந்த வகை மாற்று தேடியந்திரங்களில் சில  கூகுலோடு மல்லு கட்டாமல் அதன் தேடல் முடிவுகளை மேம்படுத்தி தரவும் முயல்கின்றன. சர்ஃப் கேன்யான் தேடியந்திரம் இதை தான் செய்கிறது.

கூகுல் மட்டும் அல்ல அதன் போட்டியாளர்களான பிங் மற்றும் யாஹுவின் தேடல் முடிவுகளையும் இது செம்மை படுத்தி தருகிறது.அதாவது இணைய தேடலில் உள்ள பொதுவான குறையை களைந்து தேடல் அனுபவத்தை சீராக்குவதாக சர்ஃப் கேன்யான் சொல்கிறது.

மாற்று தேடியந்திரம் என்றாலும் ஏற்கனவே பயன்படுத்தும் கூகுல் உள்ளிட்ட தேடியந்திரத்தை கைவிடாமலே பயன்படுத்தலாம் என்பது தான் இதன் சிறப்பு.கூகுல் அல்லது யாஹூ போன்ற தேடியந்திரங்களின் தலை மீது உட்கார்ந்து கொண்டு அவற்றின் தேடல் முடிவுகளை தேடுபவரின் நோக்கத்திற்கு ஏற்ப பட்டை தீட்டித்தருவது இதன் ஆதார் பலம்.

அந்த வகையில் இதை பிரவுசர்களின் நீட்சியாக பயன்படுத்தலாம்.அதாவது இதை டவுண்லோடு செய்து கொண்டால் பிரவுசர் துண்டாக ஒளிந்து கொள்ளும். தேடியந்திரங்களை பயன்படுத்தும் போது அவற்றின் தலை மீது அமர்ந்திருப்பது போல முடிவுகளை பார்த்து கொண்டே இருக்கும்.

தேடல் பட்டியல் தோன்றியதும் முடிவுகளுக்கு அருகே நீல நிற‌த்தில் உள்ள அம்புக்குறிய கிளிக் செய்ய வேண்டும். சர்ஃப் கேன்யானுக்கு சொந்தமான இந்த அம்பு குறி இப்போது நீங்கள் எதிர்பார்க்காத மாய‌த்தை நிகழ்த்தும்.தேடல் பட்டியலில் உள்ள முடிவுகளில் உங்கள் தேடலுக்கு மிகவும் பொருத்தமானதை முதலில் கொண்டு வந்து நிறுத்தும் .அந்த இணைய பக்கம் தேடல் பட்டியலில் 3 ம் பக்கத்திலோ அல்லது 4 ம் பக்கத்திலோ மறைந்திருக்கலாம்.நீங்கள் டைப் செய்த குறிச்சொல்லின் அடைப்பையில் உங்களுக்கு பொருத்தமாக அமையக்ககூடிய அந்த பக்கத்தை இந்த தேடியந்திரம் தானாக தேடி முதலில் கொண்டு வந்து நிறுத்துகிற‌து.

வழக்கமாக இதை நீங்களே செய்ய வேன்ட்டியிருக்கும். குறிச்சொல்லுக்கேற்ற பக்கங்கள் பட்டியலிப்பட்டாலும் அவற்றை ஒவ்வொன்றாக அல‌சி ஆராய்ந்து எது பொருத்தமானது என தீர்மானிக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் நேரம் செல்வாகும்.

சர்ஃப் கேன்யான் இந்த வேலையை இணையவாசிகள் சார்பில் மேற்கொள்கிறது.இணையவாசிகளின் குறிச்சொல்லை கண்காணித்து அதன் அடிப்படையில் சரியான இணைய பக்கங்களை தேடல் பட்டியலில் இருந்து இழுத்து வந்து நிறுத்தி வியக்க வைக்கிற‌து.

முதல் முடிவு வந்ததும் அடுத்ததாக மீண்டும் ஒரு முறை நீல அம்பு குறியை கிளிக் செய்தால் அடுத்த கட்டமாக தேடி மேலும் பொருத்தமான பக்கத்தை காட்டுகிறது.

ஒரு எளிய உதாரணம் மூலம் இந்த செயல்பாட்டை புரிந்து கொள்ளலாம்.டால்பின் என்று தேடும் போது தேடியந்திரங்களுக்கு சின்னதாக ஒரு குழப்பம் ஏற்படும்.டால்பின் என்பது மீனா அல்லது மியாமி டால்பின்ஸ் எனும் கால்பந்து அணியா என அது தடுமாறும்.எனவே இரண்டு வகையான முடிவுகளையும் பட்டியலிடும்.

அதன் பிறகு மீனா,கால்பந்து அணியா என முடிவு செய்வ்து இணையவாசிகள் பொருப்பு.இதே போல ஒவ்வொரு தேடலின் போதும் தேடல் பட்டியலில் உள்ள இணைய பக்கங்களை சீர் தூக்கி பார்ப்பது இணையவாசிகளின் வேலை.

இந்த பணியை செய்து முடிக்கும் பொருப்பை தான் சர்ஃப் கேன்யான் ஏற்றுக்கொள்கிறது.இணையவாசிகள் தங்கள் தேடல் இது தான் என்று குறிப்பால உணர்த்திவிட்டால் இந்த தேடியந்திரம் அதனடிப்படையில் தேடல் பட்டியலில் மறைந்திருக்கும் முடிவுகளை தேடி கொண்டு வருகிறது. இதன் மூலம் தேடல் அனுபவத்தை சுழுமையாக்கி தருகிறது.

தேடல் பக்கங்களை தேடுபவரின் நோக்கத்திற்கு ஏற்ப மாற்றித்தருவதே இதன் தனிச்சிற‌ப்பு.

அல்டவிஸ்டா காலத்தில் இருந்து தேடல் எவ்வள்வோ மேம்பட்டிருக்கிறது.குறிப்பாக கூகுல் தனது பேஜ் ராங்க் தொழில்நுட்பம் மூலம் குறிச்சொல்லுக்கு பொருத்தமான முடிவுகளை வழ‌ங்குகிறது.ஆனாலும் கூட பல நேரங்களில் தேடல் முடிவுகள் மிகவும் பொதுப்படையாக அமைந்து விடுகின்றன.இணையவாசிகள் நோக்கத்தை அறிந்து கொண்டு அவரக்ளுக்கு ஏற்ற தேடல் முடிவுகள தருவதன மூலம் சர்ஃப் கேன்யான் இந்த குறைக்கு தீர்வாக முயல்கிறது.

அருமையான மாற்றுத்தேடிய்ந்திரமான இது 2006 முதல் செயல்படுகிரது என்பது ஆச்சர்யமான விஷயம் .அதை விட ஆச்சரயம் நடுவே காணாமல் போய்விடாமல் இன்னும் தாக்குபிடிப்பது.சரக்கிருப்பதால் தானோ.

தேடியந்திர முகவரி:<a href="http://surfcanyon.com/

“>http://surfcanyon.com/

Advertisements

4 responses to “கூகுல் த‌லை மேல் ஒரு தேடியந்திரம்.

  1. அன்பின் சைபர்சிம்மன் – பல அரியதகவல்கள் – பகிர்வினிற்கு நன்றி – பயன் படுத்துவோம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s