வானவியல் அறிவோம் வாருங்கள்.

சுட்டீஸ் நீங்கள் விரும்பினால் இப்போதே குட்டி வானவியல் நிபுணராக முடியும் தெரியுமா? அதாவது சூரிய குடும்பம் பற்றியும் விண்ணில் தோன்றும் நட்ச்த்திரங்கள் பற்றியும், நட்சத்திரங்களின் இருப்பிடமான யூனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்சம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

 

கிட்ஸ் அஸ்ட்ரானமி.காம் இணையதளம் அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது.

 

எளிமையான ஆங்கிலத்தில் வானவியலின் அடிப்படையான விஷயங்களை சுவாரஸ்யமாக விளக்குகிறது இந்த தளம். முதலில் பூமியின் இருப்பிடமான சூர்ய  குடும்பம் (சோலார் சிஸ்டம்) அதன் பிறகு பிரபஞ்ச வெளி, விண்வெளி பார்வை என்று ஒவ்வொரு தலைப்பாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

 

எந்த தலைப்பில் உள்ள கட்டுரையுமே போரடிக்காது,தெரியாத விஷயம் என்று மிரள வைக்காது. மாறாக  சுவாரஸ்யமான புதிய தகவல்களை தெரிந்து கொள்ள வைத்து மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

 

உதாரணத்திற்கு சூர்ய குடும்பத்தையே எடுத்துக்கொள்வோம். சூர்ய குடும்பத்தில் சூரியன் மையமாக இருப்பதும் நமது பூமி உள்ளிட்ட 9 கோள்கள் அதனை சுற்றி வருவதும் உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். பாட புத்தகத்திலும்,பள்ளிக்கூட சார்ட்களிலும் கோள்கள் சூரியனை சுற்று வரும் படங்களையும் பார்த்திருக்கலாம். 

 

ஆனால் சூரியன் பற்றியும் பூமி பற்றியும் இது வரை அறிந்திறாத தகவல்களை இங்கு படிக்கும் போது ஆச்சர்யமாகவும் இருக்கும் கூடவே மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமாகவும் இருக்கும். சூரிய குடும்பத்தில் 9 கோள்கள் இருந்தாலும் சூரியன் தான் அவை எல்லாவற்றிறையும் விட‌ பெரியது. எவ்வளவு பெரியது தெரியுமா? சூரிய குடும்பத்தின் 98 சத‌வீத ப‌ருப்பொருள் சூரியனுடையது.மற்ற கோள்கள் வெறும் 2 சதவீதம் தான். இன்னொரு விதமாக சொல்வதாயின் நம்முடைய பூமியை சூரியனில் வைத்தால் அதை விட சூரியன் கோடிக்கணக்கான ம‌டங்கு பெரிதாக இருக்கும்.

 

சூரியன் இப்படி மிகப்பெரிதாகவும் எடை கொண்டதாகவும் இருப்பதால் தான் மற்ற கோள்கள் எல்லாம் அதனை சுற்றிக்கொண்டிருக்கின்றன.

 

நம்முடைய பூமியும் சாதாரணமானதல்ல. சூரிய குடும்பத்தின் உள் வட்டத்தில் இருக்கும் கோள்களிம் பூமி தான் பெரியது. எல்லோரும் அறிந்தது போல பூமியில் மட்டும் தான் உயிர்கள் இருக்கின்றன.

 

இதே போல வீனஸ் கோள் எரிமலைகளால் நிரம்பியிருக்கிற‌து. பூமியும் வினசும் ஒரே அளவிளானவை. வீனசுக்கும் காற்று மண்டலம் உண்டு என்றாலும் அது ஊடுரவிப்பார்க்க முடியாத அள்வுக்கு மிகவும் அடர்த்தியானது. கோள்களில் வீனஸ் கொஞ்சம் சோம்பரியானது. அது தன்னைத்தானெ மிகவும் மெதுவாக சுற்றி வருவதால் அங்கு ஒரு நாள் என்பது நம்முடைய பூமி கணக்கு படி 100 நாட்கள் ஆகும். அதோடு வீனஸ் மற்ற கோள்களுக்கு நேர் எதிர் திசையில் சுற்றி வருவதால் அங்கு சூரியன் மேற்கில் தோன்று கிழக்கில் மறையும்.

 

இப்படி எண்ணற்ற சுவையான தகவல்களை படித்து தெரிந்து கொள்ளலாம். கோள்கள் பற்றி மட்டும் அல்லாமல் அவற்றை சுற்றி வரும் நிலவுகள் தொடர்பான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.கோள்களை தாண்டி டீப் ஸ்பேஸ் எனப்படும் வானவெளி பற்றியும் படிக்கலாம். வானவியல் ஆய்விலும் ஈடுபடலாம்.

 

இதை விட சுவாரஸ்யம் என்னவென்றால் சூரிய குடும்பம் பற்றிய தகவல்கள் அழகான அனிமேஷனாக இடம் பெற்றிருப்பது தான். அதாவது சூரிய குடும்பம் சுழன்று கொண்டிருப்பதை பார்த்து ரசித்து அதில் உள்ள கோள்களை கிளிக் செய்து தகவல்களை படித்துப்பார்க்கலாம். அது மட்டுமா நீங்கள் விரும்பினால் சூரிய குடும்ப்த்தை நீங்களே உருவாக்கியும் மகிழலாம். அதற்காக அனிமேஷன் வசதியும் இருக்கிறது.

 

இதே போலவே தினமும் இன்றைய வானம் எப்படி இருக்கும் என்ற தகவலும் தர்ப்படுகிறது. அதை பார்த்துவிட்டு இரவில் வானவியல் ஆய்வில் ஈடுபடலாம். தொலைநோக்கியை பயன்படுத்தும் குறிப்புகளும் இருக்கிறது. வானவியல் சார்ந்த விளையாட்டுகளும் இருக்கின்றன. வானவியல் அகராதியும் இருக்கிரது.

 

எதிர்காலத்தில் வான‌வியல் ஆய்வில் ஈடுபட விரும்பினால் இந்த தளத்தில் இருந்து இப்போதே துவங்குங்கள்.

 

 

 

http://www.kidsastronomy.com/index.htm

 

 

Advertisements

One response to “வானவியல் அறிவோம் வாருங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s