ஒரு தேடியந்திரம் வரலாகிறது.

altavista

நீங்கள் அல்டாவிஸ்டாவை அறிந்திருக்கலாம்.பயன்படுத்தியிருக்கலாம்.அப்படி ஒரு தேடியந்திரம் இருப்பதையே மறந்திருக்கலாம். அநேகமாக எல்லோரும் மறந்து விட்ட அந்த தேடியந்திரத்தை யாஹு இப்போது நினைவுபடுத்தியிருக்கிறது.அதுவும் கடைசி முறையாக நினைவுபடுத்தியுள்ளது.

ஆம்,யாஹு தன் வசம் இருந்த அல்டாவிஸ்டா தேடியந்திர சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இணைய தேடியந்திரங்களுக்கு என்று நீண்ட வரலாறு இருக்கிறது.அதில் மைல்கல்லாக விளங்கியது அல்டாவிஸ்டா. அதாவது இணைய உலகில் கூ.மு (கூகுலுக்கு முன்) காலத்தில் கொடி கட்டி பறந்த தேடியந்திரம் அல்டாவிஸ்டா. அப்போது லைகோஸ்,கோ,இன்ஃபோசீக் என பல போட்டி தேடியந்திரங்களும் அதனுடன் இருந்தது.
பின்னர் கூகுல் உதயமான பிறகு அல்டவிஸ்டா ஒரங்கட்டப்பட்டு மறக்கப்பட்டது. ஆனால் மற்ற ஆரம்ப கால தேடியந்திரங்கள் போல அது முற்றிலுமாக மறைந்துவிடவில்லை. யாஹூ நிறுவனம் அதை வாங்கி நடத்தி வந்தது.
யாஹு வசம் இருந்த காலத்தில் அல்டாவிஸ்டாவை எத்தனை பேர் பயன்படுத்தி வந்தனர் என்பது தெரியவில்லை. இப்போது அல்டாவிஸ்டாவை கைவிடப்போவதாக யாஹூ அறிவித்துள்ளது. ஜூலை 8 ம் தேதி முதல் அல்டாவிஸ்டா நிறுத்தப்படும் என யாஹூ அறிவித்துள்ளது.

தினசரி பயன்படும் சேவைகளில் கவனம் செலுத்த அல்டாவிஸ்டா உள்ளிட்ட சில சேவைகளை மூடுவதாக யாஹூ அறிவித்துள்ளது.
1995 க்கு பிறகு இணையவாசிகளுக்கு வழிகாட்டி வந்த அல்டாவிஸ்டா மூடப்பட்டு வரலாராக மாறுவது வருத்தம் தான். அதைவிட வருத்தமானது ஒரு காலத்தில் இணையத்தின் நுழைவு வாயில் என கருதப்பட்ட வலைவாசலான யாஹூ கூகுல் யுகத்தில் செல்வாக்கு இழந்து நிறபதும், தனது சாம்ப்ராஜ்யத்தை கட்டிக்காக்க முடியாமல் தான் கையகப்படுத்திய பல சேவைகளுக்கு மூடு விழா நடத்தி வருவதும் தான்.

அல்டாவிஸ்டா வரலாற்றில் காணாமல் போகு முன் அதில் ஒரு முறைதேடிப்பாருங்கள்…

http://www.altavista.com/

Advertisements

2 responses to “ஒரு தேடியந்திரம் வரலாகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s