கிரவுட் சோர்சிங்:முதலீடு திரட்ட புதுமையான வழி

ari

thumb_video_reward

 

அந்நிய முதலீட்டை திரட்ட இப்படி ஒரு வழி இருக்கிறதா என வியக்க வைக்கிறது அந்த இணையதளம்.அது மட்டுமா அட நம் நாட்டிலும் கூட இந்த வழியை பின்பற்றலாமே என்று நினைக்கவும் வைக்கிறது.

அந்நிய முதலீடு என்றவுடன் அரசாங்களின் வேலையாயிற்றே அது என்று நினைக்கலாம்.

ஆனால் கனெக்ட் அயர்லான்ட் என்னும் அந்த தளம் சாமன்யர்களும் அந்நிய முதலீட்டை திரட்டித்தரும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.இப்படி அயர்லாந்து மக்கள் பலரும் வெளிநாட்டு மூலத்தனத்தை கவர்ந்திழுப்பதில் உதவி செய்தால் நாட்டில் ஆயிரக்கணக்கில் புதிய வேலை வாய்ப்பை உருவாக்கி விடலாம் என்றும் அந்த தளம் நம்புகிறது.

அந்த நம்பிக்கையுடன் தான் வாருங்கள்,புதிய நிறுவனங்களை கொண்டு வாருங்கள் என்று அழைப்பும் விடுக்கிறது.

அந்நிய முதலீட்டை கவர்ந்திழுப்பதில் சாமான்யர்களும் பங்கேற்கலாம் என்பது உண்மையிலேயே ஆச்சர்யத்தை அளிக்கலாம்.நம்பமுடியாமலும் இருக்கலாம்!

முதலீட்டை திரட்டுவதும் வெளிநாட்டு நிறுவனங்களை வரவேற்பதும் மத்திய அல்லது மாநில அரசுகளின் பொறுப்பாயிற்றே இதில் சாமான்யர்கள் எப்படி பங்கேற்க முடியும் என்ற சந்தேகம் எழலாம்.இதெல்லாம் சாத்தியம் தானா என்று தோன்றலாம்.

ஆனால் இணைய உலகில் ‘கிரவுட் சோர்சிங்’ என்று பிரபலமாக குறிப்பிடப்படும் பொது மக்கள் பங்கேற்பு கோட்பாட்டின் மகத்துவத்தை அறிந்திருந்தால் இந்த சந்தேகம் ஏற்படாது.இது போன்ற அற்புதங்கள் சாத்தியமே என்ற எண்ணமே ஏற்படும்.

ஊர் கூடி தேர் இழுப்பது என்பார்களே அதே போல இணையம் மூலம் எந்த ஒரு செயலிலும் பொது மக்களின் பங்களிப்பை கோருவதே கிரவுட் அசோர்சிங் என்று சொல்லப்படுகிறது.அதாவது தனியே சாத்தியமாகாத பல விஷயங்களை பலருக் கைகோர்த்து கூட்டாக செய்து முடிப்பது என்பது இந்த தத்துவத்தின் அடிப்படை.

கிரவுட்சோர்சிங் கோட்பாட்டிற்கு எத்தனையோ அழகான உதாரண‌ங்கள் இருக்கின்றன.மேலும் மேலும் பல இணையதளங்கள் இந்த கோட்ப்பாடின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய நாடான அயர்லாந்து இப்போது அந்நிய முதலீட்டை திரட்ட இந்த வழியை தேர்வு செய்திருக்கிறது.

ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.ஒரு காலத்தில் செழிப்பான தேசங்களாக கருத்தப்பட்ட ஐரோப்பிய நாடுகள் இன்று வேலையில்லா திண்டாட்டத்திற்கு ஆளாகி அல்லல் படுகின்றன.பொருளாதார தேக்க நிலை,யூரோ நெருக்கடி என பல்வேறு பிரச்ச்னைகளால் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது .இந்நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்பது குதிரை கொம்பாகியிருக்கிறது.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் புதிய வேலை வாய்புகளை உருவாக்கவும் அந்நிய நிறுவனங்களை வரவைப்பதே சிறந்த வழி என அயர்லாந்து நினைக்கிறது.அரசு அளவில் இதற்கான முய்ற்சிகள் மேற்கொள்ளப்பாடு வருகின்றன.

இதற்காக 2016 ம் ஆண்டு வாக்கில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை எற்படுத்தி தர வேண்டும் என்ற இலக்கோடு பல்முனை திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு கை கொடுக்கும் வகையில் தான் அந்நிய மூதலீட்டை கவர்ந்திழுப்பதில் அயர்லாந்து மக்களின் உதவியை நாடுவது என்று தீர்மானிக்கப்பட்டு அதற்கான ‘கனெக்ட் அயர்லான்ட்’ தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் தொடர்புகள் மூலம் அயர்லாந்தில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்க உதவுங்கள்,அதற்கான பரிசையும் பெற்றுக்கொள்ளுங்கள் என அழைக்கிறது இந்த தளம்.

அயர்லாந்து வாசிகள் இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் அந்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ள நிறுவனங்களை அறிந்திருந்தால் அதனை அறிமுகம் செய்து வைப்பது மட்டும் தான்.அதாவது சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ள நிறுவங்களை கண்டறிந்து அவற்றை அறிமுகம் செய்து வைத்து அந்நிறுவனத்தில் முடிவெடுக்க அதிகாரம் கொண்டவர் யார் என்று கைகாட்டி விட்டால்  போதும்.

இதற்காக மூன்று ‘ஆர்’களை பின்பற்றினால் போதும் என்றும் வழிகாட்டுகிறது.ரிஜிஸ்தர் செய்வதும் ரெஃபர் செய்வ‌தும் முதல் இரண்டு ஆர்கள். அதாவது உதவுதற்கு சம்தம் தெரிவித்து பதிவு செய்து கொள்வது முதல் படி.இது தான் ரிஜிஸ்தர். அடுத்ததாக நிறுவன தொடர்பகளை பரிந்துரைப்பது. இந்த இரண்டையும் செய்து விட்டால் முன்றாவது ஆர் குறிக்கும் ரிவார்டை பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்புகிறவர்கள் தாங்கள் அறிந்த தொடர்புகளை பரிந்துரைத்தால் மட்டும் போது. அந்நிறுவனம் முதலீடு செய்யுமா என்றோ அந்நிறுவனத்தை சம்மதிக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கவலைப்பட தேவையில்லை.அந்த‌ விஷயங்களை இதற்கான நிபுணர் குழு கவனித்து கொள்ளும்.

அந்நிறுவனத்தை எப்படி சம்மதிக்க வைப்பது,அதற்கான என்ன சலுகைகள் வழங்குவது,போன்ற எல்லாவற்றையும் குழு பார்த்து கொள்ளும்.இந்த முயற்சி வெற்றி பெற்று நிறுவனம் செயல்படத்துவங்கினால் அந்நிறுவனம் மூலமான வேலைவாய்ப்பிற்கேற்ப அதனை அறிமுகம் செய்தவருக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

பொது மக்களில் பலருக்கு பெரிய நிறுவங்களில் தொடர்பு இருக்கலாம்.அல்லது அத்தகைய தொடர்பு உள்ளவர்களை அறிந்திருக்கலாம்.அவர்கள் எல்லாம் குறிப்பிட்ட அந்நிறுவனம் அயர்லாந்தில் கால் பதிக்க விரும்புகிறதா என அறிந்து கை காட்டி விட்டாலே போதும் புதிதாக பல நிறுவனங்களை கவர்ந்துழுத்து விட முடியும் என்னும் நம்பிக்கையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டு மக்களுக்கு இருக்ககூடிய வர்த்தக தொடர்புகளை பயன்படுத்தி கொள்ளும் நோக்கத்தோடு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிலும் அயர்லாந்து நாட்டை சேர்ந்த பலர் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் குடி பெயர்ந்திருக்கும் நிலையில் பலருக்கு பெரிய சர்வதேச நிறுவங்களில் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதால் இந்த தளம் நல்ல பலனை தரும் என்ற நம்பிக்கை வலுப்படுகிறது.

இந்த நம்பிக்கையோடு தான் உங்கள் நண்பர்கள்,குடும்பத்தினர் அல்லது தொடர்புகள் மூலம் அயர்லாந்திற்கு புதிய் வாலி வாய்ப்புகளை கொண்டு வர கைகொடுங்கள் என இந்த தளம் இருகரம் நீட்டி அழைக்கிறது.

அயர்லாந்த்தில் ஏன் முதலீடு செய்ய  வேண்டும் ,அதனால் என பலன் போன்ற விவரங்களை எல்லாம் குறிப்பிட்டு முதலீட்டாளர்களோடு வாருங்களேன் ப்ளிஸ் என அழைக்கிறது இந்த தளம் .

டெர்ரி கிலோன் என்னும் அயர்லாந்து தொழிலதிபர் அரசின் ஆதரவோடு இந்த தளத்தை அமைத்துள்ளார்.

‘புதுமையான பரிந்துரை வழியின் மூலம் கனக்ட் அயர்லாந்து திட்டம்,தனிநபர்கள் தங்கள் தொடர்புகள், குடும்பம்,நண்பர்கள் அம்ற்றும் வர்த்தக உறவு மூலம் வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்ய காத்திருக்கும் வர்த்தக நிறுவங்களை  கண்டறிந்து அயர்லாந்துடன் தொடர்பு கொள்ள வைக்க உதவுங்கள்’என்று அந்நாட்டு பிரதமர் இன்டே கென்னடி இந்த தளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இப்படி நிறுவங்களை பரிந்துரைத்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் தனிநபர்களுக்கு உரிய பரிசு அளிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் துவக்கப்பட்ட இந்த புதுமையான திட்டம் தற்போது பலனளிக்கவும் துவங்கியுள்ளது. இந்த திட்டத்தில் ஆர்வத்தோடு பங்கேற்று நிறுவன‌ங்களை பரிந்துரைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவிய தனிநபர்கள் பற்றியும் அவர்கள் உதவிய விதம் குறித்தும் இந்த தளத்தில் தகவல்கள் அளிக்கப்படுகிற‌து.

அவர்களின் அனுபவமும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இது ஒரு எளிய அறிமுகம் தான். இதற்கு நான் செய்தெதெல்லாம் அயர்லாத்துக்காக‌ காதுகளையும் கண்களையும் திறந்து வைத்துக்கொண்டு அறிமுகத்தையும் தொடர்பையும் ஏற்படுத்தி தந்தது தான் என்று ஹியூஜ் மாரிஸ் என்பவர் மகிழ்ச்சியோடு கூறியுள்ளார். இவர் மூலம் மாஃபிக் எஸ் ஏ என்னும் ஐரோப்பிய நிறுவனம் அயர்லாத்தில் முதலீடு செய்துள்ளது.

இதே போல பதிவு செய்து கொண்டவர்களும் தங்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். லாரா கிட் என்னும் பெண்மணி ,ஹாங்காங்கில் வசிப்பவர், அயர்லாந்துக்கு வர்த்தகத்தை கொண்டு வர முடிந்தால் எத்தனை சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.அயர்லாத்து சர்வதேச வர்த்தகத்தில் தனது இடத்தை மீண்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அயர்லாத்தில் முதலீடு செய்ய நிறுவங்களை சம்மதிக்க வைக்கும் எந்த செயலையும் வரவேற்பதாக டேவிட் ஷீன் என்பவர் குறிப்பிட்டு அதற்காக தான் இந்த திட்டத்தி இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு பத்திரிகைகளும் ஆர்ம்ப சந்தேகத்தை மீறி இந்த திட்டம் வெற்றி பெற்று வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளன.

 

 புதுமையான முயற்சி தான் சந்தேகமில்லை. கிரவுட் சோர்சிங் கோட்பாட்டின் விரிவாக்கமாக அமைந்துள்ள இந்த திட்டம் பெறும்  வெற்றி மற்ற நாடுகளுக்கும் வழிகாட்டியாக அமையலாம்.

 

இணையதள முகவரி;http://www.connectireland.com/en/home.aspx

 

 

———-

நன்றி: தமிழ் கம்ப்யூட்டர்-

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s