தயாராகிறது சைபர்சிம்மன் கையேடு!

இணைய உலகிற்கான உங்கள் வலைவாசலாக விளங்கும் இந்த வலைப்பதிவை 5 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.ஒரு பத்திரிகையாள‌னாக பத்தாண்டுகளுக்கும் மேலாக இணையம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக எழுதி வருகிறேன்.இந்த அனுபவத்தின் அடிப்படையில் இது வரை எழுதிய பதிவுகளில் மிகச்சிறந்தவற்றை,பயன்பாட்டு நோக்கில் தொகுத்து புத்தகமாக வெளியிட விரும்புகிறேன்.

இந்த புத்தகம் தொடர்பாக உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற விரும்புகிறேன்.இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாகவும் ,தேவையானதாக‌வும் இருக்கும் என கருதுகிறீர்களா? இத்தகைய தொகுப்பை எதிர்பார்த்து இருக்கிறீர்களா?

இந்த தொகுப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இதில் எந்த எந்த பதிவுகள் இடம் பெற வேண்டும்? தொகுப்பு எந்த வகையில் அமைய வேண்டும்? தொகுப்புக்காக ஏதேனும் மாற்றங்கள்,கூடுதல் தகவல்கள் தேவையா?

இந்த நூல் மின்னூலாக இருக்கலாமா?

இது தொடர்பான உங்கள் ஆலோசனைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

இந்த புத்தகத்திற்காக நீங்கள் செலவிட தயாராக இருக்கும் கட்டணம் பற்றியும் குறிப்பிடவும்.

அன்புடன் சிம்மன்…

———-

Advertisements

18 responses to “தயாராகிறது சைபர்சிம்மன் கையேடு!

 1. தங்களது புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
  இதை நீங்கள் மின்னூலாக வெளியிட்டால், அனைவரும் பயன்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும்.
  விரைவில் எதிர்பார்க்கிறேன்..
  நன்றி..

 2. தமிழ் கூறும் நல்லுலகில் பணம் என்பதை மனதில் வைத்திருந்தால் தயை கூர்ந்து மாற்றிக் கொள்ளுங்க. உங்கள் மனம் சோர்வடைந்து விடும். ஆனால் என் பார்வையில் உங்கள் உழைப்பு பிரமிக்கக்கூடியது. மின் நூலாக மாற்றி விட்டு வலையேற்றுங்க. பதிப்பகம் அவர்கள் செலவில் இந்த நூலை கொண்டு வந்தால் அவர்கள் பொறுப்பில் கொடுத்து விட்டு ஒதுங்கி விடுங்க.

  மேலும் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துகள்

  • ஏன் அப்ப‌டி நினைக்கிறீர்கள் என்று கூற முடியுமா நண்பரே.தங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

   அன்புடன் சிம்மன்.

 3. Wish you all the best for your Very good idea, if you publish it as e-book,
  it can be reached world wide.

  Warm Regards.
  *Ravi*

  2013/7/9 Cybersimman\’s Blog

  > **
  > cybersimman posted: “இணைய உலகிற்கான உங்கள் வலைவாசலாக விளங்கும் இந்த
  > வலைப்பதிவை 5 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.ஒரு பத்திரிகையாள‌னாக
  > பத்தாண்டுகளுக்கும் மேலாக இணையம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக எழுதி
  > வருகிறேன்.இந்த அனுபவத்தின் அடிப்படையில் இது வரை எழுதிய பதிவுகளில்
  > மிகச்சிறந்தவற”

 4. புத்தகமாக வெளியிடுவதற்க்கு வாழ்த்துக்கள்,
  இதில்
  தொழில்நுட்பம் என்பது நாள்தோறும் மாறிக்கொண்டு, நேற்று கண்டுபிடுத்தது இன்று பழைய செய்தியாகிறது, அந்த வகையில் இப்போதும் தேவையான பதிவுகள் மட்டும் அதில் வெளியிடவும் அல்லது திருத்தம் செய்து சரியான பதிவாக வெளியிடவேண்டுகிறேன்

  • நிச்சயமாக நண்பரே. எந்த நிலையிலும் பயனுள்ள தகவலகளை மட்டுமே தொகுக்க திட்டமிட்டுள்ளேன்.மேலும் தேவையான அப்டேட்களையும் சேர்க்க உள்ளேன். விரைவில் புத்தக திட்டம் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

   தொடர்ந்து ஆதரவும் ஆலோசனையும் தருக.

   அன்புடன் சிம்மன்

 5. உங்களது நீண்ட நாளைய உழைப்பு ஒரு புத்தகமாக வடிவமைப்பு பெற இருப்பது குறித்து மகிழ்ச்சி.
  உங்களுக்கு கொடுக்கக்கூடிய ஆலோசனைகள் என்னிடம் இல்லை.
  உங்கள் முயற்சி வெற்றி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
  வாழ்த்துகள்!

  • மிக்க நன்றி. உங்கள் பணிவை மீறி நிச்சயம் உங்களிடமும் ஆலோச்னை இருக்கும்.தெரிவிக்கவும்

   அனுபுடன் சிம்மன்

 6. அன்பின் சிம்மன் – கடும் உழைப்பினை ஆதாரமாகக் கொண்டு ஐந்தாண்டுகளாக எழுதப்பட்ட பதிவின் சாராம்சம் தொகுக்கப்படுவது நன்று – நல்லதொரு செயல் – இத்தனை ஆண்டுகளாக எழுதப்பட்ட செயல்கள் காலத்தினால் மா|ற்றப்பட்டிருக்கும். அப்படியே எடுத்து எழுதாமல் இன்றைய நிலையில் அதன் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு இன்றைய நிலையினை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் அறியாததல்ல – அப்டேட் நிச்சயம் செய்வீர்கள் – இருப்பினும் மனதில் பட்டது கூறுகிறேன். தொகுப்பு சிறப்புடன் வெளி வர நல்வாழ்த்துகள்: – நட்புடன் சீனா

  • ஆலோச்னைக்கு நன்றி. நிச்சயமாக அப்படியே எழுதப்போவதில்லை. தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.அப்டேட் நிச்சயம் இடம்பெறும்.இயலும் போது மாதிரிக்கு சிலவற்றை தங்களுக்கு அனுப்புகிறேன். கருத்து தெரிவிக்கவும்.

   அன்புடன் சிம்மன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s