இது தம்பதிகளுக்கான பேஸ்புக்.

couple

 நண்பர்களோடு தொடர்பு கொள்ளவும் புதிய நண்பர்களை தேடி கொள்ளவும் பேஸ்புக் அருமையானது.பேஸ்புக் என்றாலே நண்பர்கள் தானே!
பேஸ்புக் போலவே இன்னும் பலவிதமான வலைப்பின்னல் சேவைகள் இருக்கின்றன.குறிப்பிட்ட விருப்பங்களின் அடிப்படையிலான தொடர்புகளை தேடிக்கொள்ளவும் அந்த துறை சார்ந்த நட்பு வளர்க்கவும் இவை உதவுகின்றன.

ஆனால் குடும்பத்திற்குள் இதே போல தொடர்பு கொள்ளவும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒரு வலைப்பின்னல் இல்லையே என்ற குறையை போக்கிகொள்ளும் வகையில் கப்புல் ஸ்டிரீட் சேவை அறிமுகமாகியிருக்கிறது.

இரண்டு நபர்களுக்கான வலைப்பின்னல் என்று வர்ணிக்கப்படும் இந்த செவை கணவன் ,மனைவிக்கு இடையே பேஸ்புக் பாணியிலான கருத்து பரிமாற்றத்தை சாத்தியமாக்குகிறது.அந்த வகையில் இதனை தம்பதிக்கான பேஸ்புக் என்று சொல்லலாம்.

பேஸ்புக் போன சமூக வலைப்பின்னல் தளங்கள் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தையும் நட்பு பாராட்டும் வித்த்தையும் மாற்றி அமைத்து வரும் நிலையில் நண்பர்களோடு தொடர்பில் இருப்பது எளிதாகியிருக்கிறது ,அதே அளவுக்கு தமபதிகளுக்கு இடையிலான கருத்து பரிமாற்றத்தை கொண்டு வர வேண்டாமா என்னும் கேள்வியோடு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே வீட்டில் வசிக்கும் தம்பதிகள் தான் பார்த்து கொள்ளவும் பேசிக்கொள்ளவும் எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கும் போது இதற்கென தனியே வலைப்பின்னல் சேவை தேவையா என்ற கேள்வி எழலாம்.

ஆனால் இணைய யுகத்தில் இல்லறத்தையும் இணையத்திற்கு கொண்டு வருவது எந்த அளவுக்கு பொருத்தமானது என்பதை தம்பதிகள் இந்த தளத்தை பயன்படுத்தி பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் உறுப்பினரானவுடன் பேஸ்புக் போன்ற ஒரு பக்கம் வந்து நிற்கிறது.பேஸ்புக் சுவற்றில் தகவல்களை பகிர்ந்து கொள்வது போலவே இதிலும் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.என்ன பேஸ்புக்கில் சுவர் தகவல்களை நண்பர்கள் எல்லோரும் பார்க்கலாம்,கருத்து தெரிவிக்கலாம்.இந்த தளத்தில் உறுப்பினரின் வாழ்க்கை துணை மட்டுமே பார்க்க முடியும்.(அதற்கு முன்பாக இமெயில் மூலம் உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கை துனைக்கு அழைப்பு விடுத்து இந்த தளத்தில் சேர்த்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு கணவனுக்கும் மனைவிக்கும் இரு பக்கத்திலும் அறிமுக பகுதி உருவாக்கப்படுகிறது)

கணவன் அலுவலகத்திற்கு சென்றதுமே வேலைக்கு நடுவே மனைவிக்கு இந்த சுவர் மூலம் ஒரு ஹாய் சொல்லலாம்,சாப்பிட்டாச்சா என்று நலம் விசாரிக்கலாம்.மனைவியும் தன் பங்கிற்கு தகவலை சுவரில் குறிப்பிடலாம்.கணவனோ மனைவியோ வெளியூருக்கு சென்றிருக்கும் போது இந்த சுவர் பரிமாற்றம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அன்பை வெளிப்படுத்த, முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள என எத்தனையோ வழிகளில் தம்பதிகள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

தகவல்களோடு புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

பரிமாற்றத்திற்கு  கை கொடுப்பதோடு இந்த தளம் நின்று விடவில்லை.தம்பதிகள் இதன் மூலமே தங்கள் வாழ்க்கையையும் செலவுகளையும் திட்டமிட்டு கொள்ளலாம்.

இதற்காக நாட்காட்டி உள்ளிட்டவை தனியே இருக்கின்றன.நாட்காட்டியில் திருமண நாள் போன்ற தினங்களை குறித்து வைக்கலாம்.அதோடு நிகழ்ச்சிகளையும் குறித்து வைக்கலாம்.அதே போல செய்ய வேண்டிய வேலைகளையும் குறித்து வைக்கலாம்.அதாவது ஷாப்பிங்,வீடு வேலைகள் போன்றவை.செலவுகளை குறித்து வைப்பதற்கான பகுதியும் இருக்கிறது.இந்த பகுதி மூலம் குடும்ப செலவுகளை அழகாக திட்டமிட்டு கொள்ளலாம்.செலவுகளின் விவரங்களையும் எப்போது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.

மேலும் கணவனோ மனைவியோ பிறந்த நாள் அல்லது திருமண நாள் போன்றவற்றின் போது எதிர்பார்க்கும் பரிசு பொருளை குறிப்பிடுவதற்கான விருப்ப பட்டியல்(விஷ் லிஸ்ட்)பகுதியும் இருக்கிறது.நினைவில் கொள்ள வேண்டியவற்றையும் குறித்து வைத்து கொள்ள ஒரு பகுதி இருக்கிறது.

முக்கிய விஷயம் என்றால் துணையை சாட்டிங் செய்யவும் அழைக்கலாம்.துணைக்கான சிறப்பு செய்தியையும் டைப் செய்து பார்வைக்கு வைக்கலாம்.இதற்கென்றே மஞ்சள் கட்டம் ஒன்று இருக்கிறது.இமெயிலிலும் எஸ் எம் எசிலும் கணவன் மனைவி தொடர்பு கொள்ளும் வழக்கம் நிலவும் காலகட்டத்தில் இல்லறத்துக்காகவெ ஒரு இணைய சேவை நல்லது தானே!பேஸ்புக் கால இல்லறம்!

———-

இணையதள முகவரி;

http://www.couplestreet.com

Advertisements

2 responses to “இது தம்பதிகளுக்கான பேஸ்புக்.

  1. அன்பின் சைஃபர்சிம்மன் – தேவையான தளம் – கணவன் மனைவி மனம் விட்டுப் பேசுவதற்கு முன்னர் இங்கு தகவல்கள் பரிமாறிக் கொள்ளலாம். இதனடிப்படையில் மனம் விட்டுப் பேசலாம். நேரில் திடீரென மனம் விட்டுப் பேசுவது எளிதான செயலல்ல. இத்தளத்தினைப் பயன்படுத்தி முன்னேற்பாடுகள் இருவரும் செய்த பின்னர் மனம் விட்டுப் பேசலாம்.. தகவலுக்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s