டிவிட்டர் போக்குகளை அறிய கைகொடுக்கும் இணையதளங்கள்.

குறும்பதிவு சேவையான டிவிட்டரை நீங்கள் ஆர்வத்தோடு பயன்படுத்தி வரலாம். உங்கள் நட்பு வட்டத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்வதோடு செய்திகளை தெரிந்து கொள்ளவும் டிவிட்டரை நீங்கள் பயன்படுத்தலாம்.பேஸ்புக் போன்ற சமுக வலைப்பின்னல் சேவையானடிவிட்டர் ‘காலையில் என்ன சிற்றுண்டி சாப்பிட்டீர்கள்’என்பது போன்ற தனிப்பட்ட தகவலகளை நட்பு வட்டத்தில் பகிர்வதற்காக உருவாக்கப்பட்டாலும் அதை கடந்து டிவிட்டர் எங்கேயோ வந்து விட்டது. டிவிட்டர் இன்று நாட்டு நடப்புகளையும் உலக நிகழ்வுகளையும் தெரிந்து கொள்வதற்கான முக்கிய சாதனமாகியிருக்கிறது.

செய்தி நிறுவனங்களும் நாளிழ்களும் டிவிட்டர் கணக்கு வழியே செய்திகளை பகிர்ந்து கொள்கின்றன.நட்சத்திரங்களும் பிரபலங்களும் டிவிட்டரில் தகவல்களை வெளியிடுகின்றனர்.அவை செய்திகளாகின்றன. இவைத்தவிர எண்ணற்ற விதங்களில் டிவிட்டரில் செய்திகள் வெளியாகின்றன.

டிவிட்டரில் வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. முக்கிய செய்திகள் டிவிட்டரில் அதிர்வலைகளை பரப்புகிறது.உலகம் ஒரு விஷயத்தை பெரிதாக நினைக்கிறது என்றால் அதற்கான முதல் பொறியை டிவிட்டரில் பார்க்கலாம். டிவிட்டர் வெளியில் குறும்பதிவுகளாக விவாதிக்கப்படும் விஷயங்கள் உலகின் கவனத்தை ஈர்க்கின்றன.

சொல்லப்போனால் உலகின் நாடித்துடிப்பு என்று சொல்லக்கூடிய வகையில் டிவிட்டர் குறும்பதிவுகள் முக்கியத்துவம் மிக்க செய்திகளை அடையாளம் காட்டக்கூடியதாக விளங்குகிறது.

டிவிட்டர் அடையாளம் காட்டும் செய்திகளை டிவிட்டர் போக்குகள் மூலம் நீங்களும் முதலிலேயே கண்டு கொள்ளலாம்.பலவிதங்களில் பயந்தரக்கூடிய டிவிட்டர் போக்குகளை தெரிந்து கொள்ளநீங்கள் அதிகம் கஷ்டப்பட வேண்டியதில்லை. இதற்காக என்றே பிரதெயேக இணையதளங்களும் இருக்கின்றன. டிவிட்டர் போக்குகளை ஹாஷ்டேக் வடிவில் இந்த தளங்கள் அடையாளம் காட்டுகின்றன.

ஓட்டல்களில் இன்றைய ஸ்பெஷல் என்ன என்று கேட்பது போல டிவிட்டரில் இன்றைய போக்கு என்ன என்னும் கேள்விக்கு பதில் அளிக்கின்றன இந்த தளங்கள். சரியாக சொல்வதனால் இன்றைய போக்கு கூட இல்லை. இப்போதைய போக்கு.அதாவது இதே இந்த நொடியில் டிவிட்டரில் எந்த தலைப்பு அதிகம் பகிரப்பட்டு பலராலும் பின் தொடரப்படுகிறது என்பது.

இந்த போக்குகளை ஹாஷ்டேக் வடிவில் அடையாளம் காணலாம்.

ஹாஷ்டேக் என்பது டிவிட்டரில் குறிப்பிட்ட தலைப்பிலான போக்குகளை கொத்தாக வகைப்படுத்த உதவும் குறிச்சொல்.
(ஹாஷ்டேக் பதத்திற்கு முன்பாக # என்னும் குறியீடு அமைந்திருக்கும்.) சொல்லப்போனால் டிவிட்டர் இந்த ஹாஷ்டேக்குகளால் தான் வழிநடத்தப்படுகிறது.

உதாரணத்திற்கு கிரிக்கெட் சூதாட்டம் வெடித்த போது டிவிட்டரிலும் அது தொடர்பான குறும்பதிவுகள் பொங்கின. அப்போது சூதாட்டம் தொடர்பான குறும்பதிவுகள் எல்லாம் #பெட்டிங் என்பது போன்ற பதத்தோடு வெளியிடப்பட்டன. இந்த ஹாஷ்டேக் மூலம் சூதாட்டம் தொடர்பான குறும்பதிவுகளை எல்லாம் வரிசையாக பார்க்க முடிந்தது.இது போல எண்ணற்ற உதாரணங்களை கூறலாம்.

டிவிட்டரில் தனிப்பட்ட கணக்குகளை நமது விருப்பத்தின் அடிப்படையில் பின் தொடரலாம்.பிடித்த பிரபலங்கள் மற்றும் அபிமான நடசத்திரங்களின் கணக்குளையும் பின் தொடரலாம்.

இவைத்தவிர திடிரென பார்த்தால் டிவிட்டரில் குறிப்பிட்ட ஒரு தலைப்பு பற்றி விவாதம் அனல் பறக்கும். அந்த தலைப்பில் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் குறும்பதிவுகள் வெளியாகும்.இந்த பதிவுகள் எல்லாம் அவற்ருக்குறிய பொது குறிச்சொல்லான ஹாஷ்டேகுடன் வலம் வரும்.

டிவிட்டரே கருத்துக்களுக்கான வலைப்பின்னல் சேவை தானே.ஆக,ஒரு கருத்து பகிரப்படும் போது மற்றவர்களையும் கவரலாம்.அவர்களும் தங்கள் பங்கிற்கு அதை ஒட்டியோ வெட்டியோ குறும்பதிவிடலாம்.அவை ஹாஷ்டேகால் இணைக்கப்படும் போது, டிவிட்டர் போக்காக மாறுகிறது.

இப்படி தினம் நூற்றுக்கணக்கான போக்குகள் உருவாகின்றன.

இந்த போக்குகளை ஹாஷ்டேக் கொண்டு அறிந்து கொள்ளலாம் தான்.இணைய உலகில் எங்கு பார்த்தாலும் ஒரு ஹாஷ்டேக் அடிபடும் போது, அது தான் அப்போதைய போக்கு என தெரிந்து கொள்ளாம். சில நேரங்களில் இந்த போக்குகளை தாமதமாக தெரிந்து கொண்டதாக வருந்த நேரலாம்.

இதற்கு மாறாக எப்போதும் டிவிட்டர் வெளியில் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என நினைத்தால்,டிவிட்டர் போக்குகளை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்.

வாட் த டிரென்ட்(http://whatthetrend.com/ ) இணையதளம் இந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறது.

இந்த தளம் டிவிட்டர் உலகில் இப்போது எந்த போக்கு பிரபலமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.டிவிட்டரில் மேலெழும் போக்குகளை அவற்றின் செல்வாக்கிற்கு ஏற்ப டாப் டென்னாக பட்டியலிடுகிறது.இவை தவிர அன்றைய தினம் முழுவதும் பிரபலமான பிரபலமாகி கொண்டிருக்கும் அனைத்து போக்கிற்கான ஹாஷ்டேக் பட்டிலயையும் காணலாம்.

ஹாஷ்டேக்குகல் பொதுவாக உலகம் எந்த தலைப்பில் நாட்டம் கொண்டிருக்கின்ர என்பதை உணர்த்துகின்றன. அந்த வகையில் இந்தபட்டியல் டிவிட்டர் உலகில் எந்த தலைப்புகள் எல்லாம் கவனத்தை ஈர்க்கின்றன என்பதை சுட்டிக்காட்டி உலகம் எவற்றில் எல்லாம் ஆர்வம் கொண்டுள்ளது என்பதை உணர்த்துகிறது.

முகப்பு பக்கத்தில் காணும் பட்டியல் தவிர தளத்தின் இடது பக்கத்தில் உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் எந்த போக்கு பிரபலமாக இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.நாடுகளின் பெயருக்கு அருகிலேயே அந்நாடுகளில் மேல்ழும் ஹாஷ்டேக் இடம் பெறுகிறது.போக்கு மாற மாற இந்த பட்டியலும் மாறிக்கொண்டே இருக்கும்.

இந்த தளத்தில் கூடுதன் சிறப்பு, ஒவ்வொரு ஹாஷ்டேகும் ஏன் பிரபலமாயிற்று என்பதற்கான விளக்கமும் தரப்படுகிறது. இந்த தளத்தின் மற்றொரு சிறப்பம்சம் டிவிட்டர் உலக போக்குகளை உணர்த்தும் ஹாஷ்டேகுகளுக்கான விளக்கம் டிவிட்டர் பயனாளிகளால் சமர்பிக்கப்படுகின்றன் என்பது தான்.

டிவிட்டர் போக்குகளின் மாறிக்கொண்டே இருக்கும் ஹாஷ்டேகுகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு புது ஹாஷ்டேகிலும், அதற்கான விளக்கத்தை அளிக்கும் முதல் நபராக நீங்கள் இருக்கலாம் என அழைப்பு விடுக்கப்படுகிறது.அதை ஏற்று நீங்கள் ஹாஷ்டேகிற்கான விளக்கத்தை அளிக்கலாம்.அதிகம் இல்லை,டிவிட்டர் பணியில் 140 எழுத்துகளுக்குள் விளக்கம் இருக்க வேண்டும். விளக்க குறிப்பில் உங்கள் டிவிட்டர் முகவரியை எல்லாம் நுழைக்க கூடாது.இப்படி சமர்பிக்க முதலில் உறுப்பினராக வேண்டும்.

ஹாஷ்டாகிற்கான விளக்கம் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தால் அதை செம்மை படுத்தவோ மாற்றி அமைக்கவோ செய்யலாம். இந்த கூட்டு பங்களிப்பு ஒருவித ஜனநாயக தன்மையை இந்த தளத்திற்கு வழங்குகிறது.

அதிக விளக்கங்களை சமர்பிக்கும் உறுப்பினர்களின் பட்டியலும் தனியே தரப்படுகிறது.

தினமும் விஜயம் செய்து டிவிட்டர் உலகின் போக்குகளை தெரிந்து கொள்ளலாம்.அல்ல்து எப்போது தோன்றுகிறதோ அப்போது விஜயம் செய்யலாம்.எப்போது இந்த தளத்தில் நுழைந்தாலும் டிவிட்டர் உலகில் இப்போது எது சூடாக இருக்கிறது என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

இதே போல டிவென்டர்( http://twendr.com/) இணையதளமும் டிவிட்டர் போக்குகளை அடையாளம் காட்டுகிறது.உலகம் முழுவதற்குமான போக்கு மற்றும் இந்தியா உள்ளிட்ட35 நாடுகளுக்கான டிவிட்டர் போக்குகளை இந்த தளம் பட்டியலிடுகிறது. தளத்தின் முகப்பு பக்கத்தில் முதலில் உலக அளவிலான போக்குகள் இடம் பெறுகின்றன.அருகே வரிசையாக மற்ற நாடுகளுக்கான பட்டியலை பார்க்கலாம்.இந்த பட்டியல் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது.ஒவ்வொரு நாட்டிலும் நகரங்களுக்கான டிவிட்டர் போக்கு பட்டியலும் தனியே கொடுக்கப்படுகிறது. இந்தியா என்றால் சென்னை உள்ளிட்ட 14 நாடுகளுக்கான போக்குகள் இடம் பெறுகின்றன.

டிவென்டர் தளத்தின் தோற்றமும் வடிவமைப்பும் எளிமையாக குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்கின்றன.

டிரென்ட்ஸ்மேப் (http://trendsmap.com/ ) தளம் உலக் வரைபடத்தின் மீது டிவிட்டர் போக்குகளை சுட்டிக்காட்டுகிறது.அதாவது இப்போது உலகில் எந்த எந்த பகுதியில் டிவிட்டரில் எந்த ஹாஷ்டேக் பிரபலமாக உள்ளதோ அதை அந்த இடத்தில் காட்டுகிரது இந்த தளம்.குறும்பதிவுகள் மட்டும் அல்லாது தொடர்புடைய புகைப்படங்கள்,வீடியோ காட்சிகள் ஆகியவற்றையும் காட்டுகிறது. ஒரு வார கால போக்குகளை இந்த தளத்தில் பெற முடியும். வரைபடத்திற்கு கீழே தனியே நாடுகள் மற்றும் நகரங்களுக்கான பட்டியலும் இடம் பெறுகிறது.தனியே உங்கள் நகருக்கான போக்கையும் காண முடியும்.

டிவீட்டேப்ஸ்(http://tweettabs.com/) தளம் கொஞ்சம் வித்தியாசமானது. இது டிவிட்டர் போக்குகள் தொடர்பான சமீபத்திய குறும்பதிவை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பிட்ட ஹாஷ்டேகை இதில் சமர்பித்து அதற்கான சமீபத்திய குறும்பதிவுகளையும் தேடும் வசதி இருக்கிறது.

மேப்மேஷ்(http://www.mapmash.in/twitterlocal.html) தளமும் வரைபடம் மூலம் டிவிட்டர் போக்குகளை உணர்த்துகிறது.

இவற்றைத்தவிர டிவிட்டர் அதிகார பூர்வ தளமும் டிவிட்டர் போக்குகளின் பட்டியலை தருகிறது.

இந்த தளங்கள் மூலம் டிவிட்டரில் சமீபத்திய போக்குகளை எப்போது தேவையோ அப்போது தெரிந்து கொள்ளலாம். செய்திகளை தெரிந்து கொள்ள உதவுவதோடு வர்த்தக நிறுவனங்கள் தங்களுக்கு பயன்படக்கூடிய போக்குகளையும் தெரிந்து கொள்ளலாம்.தேவைப்பட்டால் தங்களுக்கு விருப்பமுள்ள தலைப்பில் ஏதேனும் ஹாஷ்டேக் உருவாகி உள்ளனவா என்றும் பார்த்து அவற்றை பின் தொடரலாம்.

உடனுக்குடன் செய்திகளும் தகவல்களும் பகிரப்படும் ரியல் டைம் பரிமாற்ற காலத்தில் நீங்களும் அப்டேட்டாக இருக்க இந்த தளங்கள் கைகொடுக்கும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s