இறந்த போன இணையதளங்கள் தரும் சங்கடம்.

சைபசிம்மன் கையேட்டை தயாரிக்கும் பணியின் ஒரு பகுதியாக பழைய பதிவுகளில் பொருத்தமான மற்றும் சிறந்த பதிவுகளை தேர்வு செய்து கொண்டிருக்கிறேன். இந்த தேர்வு பணி ஒரே நேரத்தில் சுவாரஸ்யம் த்ருவதாகவும் அயர்ச்சி அளிக்க கூடியதாகவும் இருக்கிறது. அயர்ச்சிக்கு முக்கிய காரணம் நான் சுட்டிக்காட்டியிருந்த இணையதளங்களில் சில இப்போது புழக்கத்தில் இல்லாமல் இறந்து போன தளங்களாகி இருப்பது தான்.இத்தகைய தளம் சார்ந்த பதிவுகளை விட்டு விடுவதில் எந்த பிரச்ச‌னையும் இல்லை.ஆனால் இந்த தளங்களில் சில அவற்றின் கருத்தாக்கத்தால் இன்னமும் கவரக்கூடியதாகவும் வியப்பூட்டக்கூடியதாகவும் இருப்பது தான் இவை இல்லாமல் போனது குறித்து வருத்தம் தருகிறது.

நிச்சயம் இந்த தளங்கள் புழக்கத்தில் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் என்ன காரணங்களுக்காகவோ பல தளங்கள் மூடப்பட்டு விடுகின்றன. சில தளங்கள் ஏன் நிறுத்தப்பட்டன என்று கூட அறிய முடிவதில்லை.இணைய உலகின் மாபெரும் சோகம் இது.

மூடப்பட்ட தளங்களை பட்டியலிட்டு தனியே குறிப்பிடலாமா என யோசித்து கொண்டிருக்கிறேன்.அவை இணைய பாடமாக இருக்கலாம் அல்லவா?

அன்புடன் சிம்மன்.

———

https://cybersimman.wordpress.com/2013/07/14/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/

4 responses to “இறந்த போன இணையதளங்கள் தரும் சங்கடம்.

 1. அன்பின் சிம்மன் – மூடப்பட்ட தளங்களினைத் தேடுவது பயன் தராது – அத்தளங்கள் வேறு பெயர்களிளோ அல்லது அததளங்களீன் பயன்கள் வேறுவிதமாகவோ இருக்க வாய்ப்புண்டு – தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. என் சிற்றறிவிற்குப் பட்டதைக் கூறுகிறேன். நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  • மூடப்பட்ட தளங்களை நினைப்பதில் பயனில்லை.ஆனால் ஒரு சில தளங்கள் அவற்றின் கருத்தாக்கம் காரணமாக ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன.உதாரணத்திற்கு வர்ச்சுவல் கம்ப்யூட்டர் சேவையாக அறிமுகமான கோஸ்.ட் .காம்.கிளவுட் கம்ப்யூட்டங்க் கருத்தாக்கம் பிரபலமாவதற்கு முன் அறிமுகமான இந்த சேவை டெஸ்க்டாப்பை கம்ம்ப்யூட்டரில் இருந்து விடுவித்து நீங்கள் செல்லுமிடமெல்லாம் கொன்டு செல்ல உதவியது. ஆனால் அந்த தளம் இல்லை.ஆனால் வர்ச்சுவல் டெஸ்க்டாப் கருத்தாக்கம் அழிவில்லாதது.

   அன்புட‌ன் சிம்மன்

 2. நரசிம்மன் சார்! நலமா? <சமீபகாலங்களில் உங்கள் எழுத்துகளை இந்தியா டுடே, சுட்டி விகடனில் பார்க்கிறேன். வாய்ப்பு வரும் இதழ்களில் நிறைய தொடருங்கள்.

  செயல்படாத இணையதளங்கள் பற்றி நினைத்தென்ன பயன்? இருக்கும் தளங்களை பதிவு செய்யுங்கள்.
  நீங்கள் பணிபுரிந்த நிறுவனத்தில் பணி செய்த போது உங்கள் இன்டர்நெட் கட்டுரைகளைப் படித்து பிழை திருத்தம் செய்தேன். அந்தக் கட்டுரைகளின் பயன்பாடு- சுவாரஸ்யம் கடந்த நான்காண்டுகளாக இணையம் பயன்படுத்தும் போது தான் தெரிகிறது.
  உங்கள் சிம்மன் கையேடு தயார் ஆனதும் மீண்டும் படிக்க ஆசை!
  நேரம் வரும் போது – தினமலர்- வாரமலரில் உங்கள் எழுத்து இடம் பெற முயற்சிக்கிறேன்!

  • நண்பர் தேவராஜூக்கு நன்றி. இணைய கட்டுரைகள் பயனுள்ளதாக இருப்பது மகிழ்ச்சி. இறந்து போன தளங்கள் பற்றி கவலைப்படுவது வீண் தான்.ஆனால் இதையும் மீறி கவலைப்பட வைக்கும் இறந்த தளங்கள் பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் விரிவாக‌ எழுதுகிறேன்.

   அன்புடன் சிம்மன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s