இன்டுடைம் . இந்த தளம் வெறுமையானது.ஆனால் வண்ணமயமானது. இதில் தகவலகளோ புகைப்படங்களோ கிடையாது.ஏன் வழிகாட்டும் குறிப்புகளும் கிடையாது. எப்போது இதில் நுழைந்தாலும் முகப்பு பக்கம் வெறுமையாக இருக்கும். நீங்கள் பார்த்து கொண்டே இருக்கும் போது முகப்பு பக்கத்தின் நிறம் மாறிக்கொண்டே இருக்கும். நீளம் மஞ்சலாகும்,மஞ்சல் பச்சையாகும் ,பச்சை வெளீர் நீலமாகும்… இப்படி வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இந்த மாற்றமே ஒரு சுவாரஸ்யம் தான். கூடுதல் சுவாரஸ்யமாக முகப்பு பக்கத்தில் எந்த இடத்தில் கிளி செய்தாலும் அந்த இடம் இரண்டாக பிளவுபடும். மீண்டும் கிளிக்கினால் மேலும் இரண்டாகும் .மீண்டும் கிளிக் செய்தால் மீண்டும் பிளவு படும்.இந்த பிளவு பட்ட இடங்களிலும் வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
இணையத்தில் தகவல்களை தேடி களைத்து போகும் போது அல்லது தொடர்ந்து பணியாற்றிய சுமையை உணரும் போது சுவாரஸ்யம் அளிக்கும் கவனச்சிதறலாக இந்த தளத்தை பயன்படுத்தி புத்துணர்ச்சி பெறலாம்.
வண்ணங்களின் இடைவெளியில்லா தொடர் மாற்றம் உண்மையிலேயே சுவாரஸ்யமானது.
இணையதள முகவரி;http://www.intotime.com/
இதேபோலஃபாலிங்ஃபாலிங்இணையதளத்தில்முகப்புபக்கத்தில்வண்ணவண்ணகட்டங்கள்விழுந்துகொண்டேஇருக்கும். முகப்புபக்கத்தில்நுழைந்த்துமேஇந்தவண்ணவிளையாட்டுஆரம்பமாகிவிடும். வரிசையாகவண்ணவண்ணகட்டங்கள்அடுத்தடுத்துவிழுவிழஅடுத்தவண்ணகட்டம்திரையில்தோன்றிவிழுந்துமறையும்.பின்னணியில்இதற்கேற்றஒலிகளும்கேட்டுக்கொண்டேஇருக்கும். இதுவும்ஒருவிநோதகவனச்சிதறலுக்கானவழிதான்.
இணையதளமுகவரி: http://www.fallingfalling.com/
அன்பின் சிம்மன் – கவனச் சிதறல் – வண்ண மயமான திரைகள் – பார்த்துக்கொண்டே இருக்கலாம் – மழலைகள் பொழுது போக்க அருமையான தளங்கள் – பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
மழலைகளுக்கு என்பது நான் யோசிக்காத பயன்பாடு.
அன்புடன் சிம்மன்
கணினியில் தொடர்ந்து வேலை செய்யும் போது, கண்களுக்கு ஓய்வு அல்லது புத்துணர்வு கொடுக்க சிறிது நேரம் பச்சை வண்ணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தால் நல்லது என்று கூறுவர்.
என் அலுவலகத்தில் நான் இருக்கும் இருக்கைக்கு எதிரே அசோகா ஓட்டலின் பசுமையான புல் வெளி தரை தெரிகிறது. அதை அவ்வப்போது பார்ப்பேன்.
நீங்கள் சுட்டி காட்டிய தளத்தில் வண்ணத்தில் சில நிமிடங்கள் பார்த்தால் கண்களுக்கு
புத்துணர்வு கிடைக்கலாம் என்று நினைக்கிறேன்!