தமிழில் வெளியாகும் சிறந்த வலைப்பதிவுகளை படிக்க வேண்டும் என்றால் தமிழ்மணம்,இன்ட்லி போன்ற திரட்டிகள் தவிர வலைச்சரம் போன்ற தளங்களும் இருக்கின்றன.
வலைச்சரத்தை தமிழ் பதிவுகளை அறிமுகம் செய்வதற்கான புதுமையான முயற்சி என சொல்லலாம்.2006 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் முன்னோடி முயற்சி.
வாரம் ஒரு ஆசிரியரின் பார்வையில் அந்த வார பதிவுகளை அறிமுகம் செய்யும் வகையில் வலைச்சரம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம குறிப்பிட்ட ஓவ்வொரு ஆசிரியரின் ரசனை மற்றும் பார்வை அடிப்படையில் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்து கொள்ள முடிகிறது.குறிப்பாக தமிழ் வலைப்பதிவுக்கு புதிதாக வருபவர்களுக்கு வலைச்சரம் சரியான வழிகாட்டி.இதன் பழைய பதிவுகளை பார்த்தாலே இந்த தளத்தின் அறிமுகம் எத்தனை பரந்து விரிந்து இருக்கிறது என்பதை உண்ரலாம்.கூடவே தமிழ் வலைப்பதிவுலகம் எத்தனை செழுமையாக இருக்கிறது என உணரலாம்.
வலைச்சரம் பதிவுகளை தொகுக்கும் முயற்சி பற்றி அதன ஆசிரியர் சீனா குறிப்பிட்டுள்ளார்.பயனுள்ள,தேவையான முயற்சி. அவர் குறிப்பிட்டுள்ளதை பார்த்தால் தேடல் வசதி கொண்ட இனையதளம் போல இந்த தொகுப்பு அமையும் என தெரிகிறது. அது சிறப்பாக இருக்கும். தொகுப்பில் இடம் பெற்ற பதிவர்களின் அப்டேட் தினமும் இடம் பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இது போன்ற முயற்சிக்கு அனைவரது ஆதரவும் தேவை. இதற்கு யோச்னைகளையும் வழங்க கோரியுள்ளார்.விருப்பமுள்ளோர் வலைச்சரத்திற்கு சென்று ஆதரவும் ஆலோசனையும் வழங்கலாம்.
அன்புடன் சிம்மன்.
————
அன்பின் சிம்மன் – தகவல் பகிர்வினிற்கு நன்றி – ஆலோசனை கூறுங்கள் – எப்படி செய்யலாம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
நண்பருக்கு,
இந்த தொகுப்பு வலைப்பதிவர்களுக்கான தகவல் திரட்டு போல அமையலாம்.பதிவர்களின் இனைய முகவரி போன்ற விவரங்களோடு பதிவர்கள் அவர்கள் செயல்படும் துறைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டால் அடையாளம் காண உதவியாக் இருக்கும்.
அன்புடன் சிம்மன்.
வலைசரத்தில் நானும் ஒருவாரம் ஆசிரியராக இருந்தேன். தினமும் அதில் வரும் இடுகைகளைப் படிக்கத் தவறுவதில்லை. திரு சீனாவின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.