உலகின் அழகான இணையதளம்.

1noநீளமான கேள்வி .அதற்கான நச் என்ற பதில். இது தான் அந்த இணையதளம்.அந்த தளத்தில் வேறு எந்த விவரமும் இல்லை.ஆனாலும் அது முதல் பார்வையிலேயே வியக்க வைத்து விடுகிறது.

 

 இணையதளங்கள் எல்லா பிரவுசர்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமா? இந்த கேள்வியை தான் அந்த தளம் எழுப்புகிறது.அதிலும் எப்படி தெரியுமா? இந்த கேள்வி தான் அதன் இணைய முகவரியே!

 

இந்த கேள்வியால் கவரப்பட்டு தளத்திற்குள் எட்டிப்பார்த்தால் இல்லை எனும் பதிலை குறிக்கும் அங்கில சொல்லான நோ நம்மை வரவேற்கிறது. ஆம், இணையதள‌ங்கள் எல்லா பிரவுசர்களிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டியதில்லை என்பது தான் பதில் .

 

இணையதள முகவரியை கேள்வியாக்கி அதற்கான ஒற்றை சொல் பதிலை முகப்பு பக்கத்தில் வைத்திருக்கும் இந்த தளத்தின் புத்திசாலித்தனம் அசர வைக்கிறது.

 

இது போன்ற ஒரு தளத்தை இதற்கு முன்னர் பார்த்ததில்லை என்றும் சொல்ல வைக்கிறது.

 

பொதுவாக இணையதளங்களின் முகவரி தேவையில்லாமல் நீளமாக இருக்க கூடாது . நீளமான முகவரிகள் நினைவில் கொள்ள கடினமானவை .அவற்றை டைப் செய்யும் போதும் பிழைகள் ஏற்படலாம். எனவே தான் இணையதளஙக‌ளுக்கான இலக்கணத்தில் இனைய முகவரி சுருக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

 

இந்த இலக்கணத்தை மீறி நீளமான பெயர் கொண்ட இந்த தளம் அழகாக இருக்கிறது.

 

நிற்க ,இந்த தளத்தின் புத்திசாலித்தனம் ஒரு புறம் இருக்க அது சொல்ல வரும் விஷயம் முக்கியமானது.விதவிதமான பிரவுசர்கள் இருக்கின்றன.இணையதளங்கள் ஒவ்வொரு பிரவுசருக்கும் ஒரு மாதிரி தெரியும்.இது தளங்களின் பிரச்சனை அல்ல. பிரவுசரின் பிரச்ச‌னை.எந்த தளமாக இருந்தாலும் ஒரு பிரவுசர் ஒரே மாதிரி காட்ட வேண்டும் .அது பிரவுசரின் கடமை.அப்ப‌டி இருந்தால் ஒரே இணையதளம் எல்லா பிரவுசர்களிலும் ஒரே மாதிரி இர்ருக்க வேண்டியதில்லை.

 

எனது இணைய அனுபவத்தில் நான் பார்த்து ரசித்த அழகான தளம் இது.எளிமை தான் இதன் அழகு.இதே போல நீங்கள் பார்த்து ரசித்த வியந்த தளங்கள் எவை?

 

 

 ———–

http://dowebsitesneedtolookexactlythesameineverybrowser.com/

———-

இந்த வலைப்பதிவு பற்றி உங்கள் கருத்து என்ன? இதில் நீங்கள் மேலும் எதிர்பார்ப்பது என்ன? ஏதேனும் மாற்றங்கள் தேவையா? தெரிவிக்கவும்.மேலும் பார்க்க….https://cybersimman.wordpress.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/

One response to “உலகின் அழகான இணையதளம்.

  1. அன்பின் சிம்மன் – தளங்கள் எல்லா பிரவுசர்களிலும் ஒரே மாதிரியாகத்தானே தோன்றுகின்றன – பிரவுசருக்குத் தகுந்த மாதிரி தளங்க்ஜள் மாறுமா என்ன ? தெரியவில்லை- நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s