நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

நீங்கள் இந்தத் தளத்தில் என்ன படிக்க விரும்புகிறீர்கள்? இது தான் என மந்தி இபோதுள்ள கேள்வி.காரணம், உங்கள் விருப்பங்களை, தேவைகளை அறிந்து அதற்கேற்ற பதிவுகளை எழுத நினைக்கிறேன்.அவை மேலும் பயனுள்ளதாக இருக்கும் .

தினமும் இணையத்திலிருந்து கை கொள்ளாத விஷயங்கள் கிடைத்தபடியே இருக்கின்றன. இந்தத் தகவல் கடலிலிருந்து என் சொந்த ஆர்வத்தில் தேடித் தேடி எழுதியதை படித்து வந்தீர்கள் . அதற்கு நீங்கள் காட்டிய ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி.

இருந்தாலும் என் ஒருவனது தேர்வைத் தாண்டி உங்கள் தேவைக்காக எழுதுவதே சரி. நான் தொடாத விஷயங்கள் நிறைய. நான் தவிர்த்த விஷயங்களும் ஏராளம்.

இதைப் பற்றியும் நான் எழுதினால் உதவியாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் தலைப்புகள் அல்லது விஷ‌யங்கள் இருக்கிறதா? அவற்றை தெரிவிக்கவும். அவை தொடர்பான தகவலகளை திரட்டி உங்களுக்கான பதிவாக எழுதுகிறேன்.

இணையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து உங்கள் மனதுக்குள் இருக்கும் கேள்விகள் மற்றும் எதிர்பார்ப்புகளை தெரிவியுங்கள். அவை இந்த வலைப்பதிவை உங்களுக்கே உங்களுக்கானதாக ஆக்கும்.

இணையம், தொழில்நுட்பம் மீது எனக்குள்ள ஆர்வமும், பத்திரிகையாளனாக, வலைப் பதிவராக எனக்குள்ள அனுபவமும் எந்த தலைப்பைப் பற்றியும் தகவல்கள் தேடி, அலசி சுவாரஸ்யமாக எழுத உதவும்.

இணையம் மற்றும் தொழில்நுட்பம், வேண்டுமானால் அறிவியலையும் சேர்த்து கொள்ளுங்கள். விண்டோஸ் இயங்கு தளத்தில் கோப்புகளை நிறுவவது எப்படி என்றோ அல்லது எக்செல் கோப்புகளில் புதிய அட்டவணையை சேர்ப்பது எப்படி போன்ற செய்லவிளக்க கேள்விகளுக்கு பதில் சொல்ல என்னால் முடியும் என நினைக்கவில்லை. ஆனால் இத்தகைய கேள்விகளையும் எழுப்புங்கள். இதற்கு பதில் அளிக்க கூடிய பதிவர்களை விருந்தினராக அழைத்து எழுத சொல்கிறேன்.

இது உங்கள் வலைப்பதிவு. இந்த வலைப்பதிவு மேலும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

அன்புடன் சிம்மன்.

Advertisements

6 responses to “நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

 1. திரு.சிம்மன் அவர்களே..!

  பல்வேறு தலைப்பின் கீழ் தாங்கள் எழுதியுள்ள அனைத்து விஷயங்களுமே எனக்காக எழுதியது போல் தோன்றும். நானும் அவைகளை படித்துவிட்டு பலரிடம் பகிர்ந்து தங்களின் தயவால் ஒரு அறிவுஜீவியாகவே
  உலா வருகின்றேன்.

  என் எதிர்பார்ப்பு உங்களிடமிருந்து சமூகம் சார்ந்த விஷயங்களை எதிர்பார்கின்றேன். அதுவும் குறிப்பாக பள்ளி
  மாணவர்கள் முதல் கல்லூரிமாணவர்கள் வரை மாணவச் சமூதாயம் சார்ந்த பயனுள்ள பல விஷயங்களை சமூக பார்வைகள் கொண்டு ஒரு தொலைநோக்கோடு எழுதவேண்டும் என்பது..

  • அன்பு நண்பருக்கு,

   பாராட்டுக்கு நன்றி.அருமையான யோசனை.முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்த விஷய்ங்களையே இந்த பதிவில் எழுதி வருகிறேன்.எனினும் இணடெர்நெட் தொழில்நுட்பத்தின் மீதான எனது அபிமானம் அதன் சமூக நோக்கிலான பயன்பாடே.சமூக நோக்கில் இணைய பயன்பாடு குறித்து அவப்போது எழுதியிருக்கிறேன்.நீங்கள் குறிப்பிட்ட படி சமூகம் சார்ந்த விஷயங்களை நிச்சயம் எழுதுகிறேன்.

   இந்த வலைபதிவின் தன்மை மற்றும் வீச்சையும் விரிவு படுத்தக்கூடிய யோசனை .

   மிக்க நன்றி.

   அன்புடன் சிம்மன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s