உங்கள் பாஸ்வேர்டுக்கு வந்த ஆபத்து!.

elliot1

திரையுலகில் தலைவா படம் தமிழக‌த்தில் மட்டும் திரைக்கு வராமல் தாமதமாவது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது போல இணைய உலகில் பாஸ்வேர்டு பாதுகாப்பு தொடர்பான சர்ச்சை அமர்களப்படுகிறது. இந்த சர்ச்சையின் மையம் கூகுலின் குரோம் பிரவுசரில் சேமிக்கப்படும் பாஸ்வேர்டுகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்னும் குற்றச்சாட்டாக இருந்தாலும் உண்மையில் உங்கள் பாஸ்வேர்டுக்கு இணைய உலகில் பாதுகாப்பு இல்லை என்பதே இணையவாசிகள் இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது.

பாஸ்வேர்டு விஷயத்தில் அப்பாவி இணையவாசிகள் எந்த அளவுக்கு அபாயங்களை எதிர்கொள்ள வேண்டிருக்கிறது என்பதையும் இந்த சர்ச்சை உணர்த்துகிறது. பாஸ்வேர்டுக்கு ஒரு பாஸ்வேர்டு அவசியம் என்ற கருத்தையும் இந்த விவகாரம் வலியுறுத்துகிறது.

பாஸ்வேர்டு விழிப்புணர்வு பெற விரும்புகிறவர்கள் கட்டாயம் இந்த சர்ச்சை பற்றிய பின்னணியை தெரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி அம்பலமானது?

எலியட் கெம்பர் என்னும் இங்கிலாந்தை சேர்ந்த இணைய வடிவமைப்பாளர் தனது வலைப்பதிவில் வெளியிட்ட ஒரு பதிவில் இருந்து இந்த சர்ச்சை துவங்குகிறது. ‘குரோமின் பொறுப்பில்லாத பாஸ்வேர்டு பாதுகாப்பு உத்தி’ எனும் தலைப்பில் வெளியான இந்த பதிவு கூகுலின் குரோம் பிரவுசரில் பாஸ்வேர்டுகளை சேமிப்பதில் உள்ள, பலரும் கவனிக்காத அபாயத்தை சுட்டிக்காட்டியது.

கூகுலின் குரோம் பிரவுசரை பயன்படுத்துபவர்கள் இந்த வசதியை கவனித்திருக்கலாம்.அதாவது ஜிமியில் உள்ளிட்ட பாஸ்வேர்டு தளங்களுக்குள் நுழையும் போது ,உங்கள் பாஸ்வேர்டை சேமிக்க வேண்டுமா? என்ற கேள்வி கேட்கப்படும்.இப்படி சேமித்து கொண்டால் அடுத்த முறை இந்த சேவையை பயன்படுத்தும் போது பாஸ்வேர்டை மீண்டும் ஒருமுறை டைப் செய்யும் அவசியம் இல்லாமல் ஒரே கிளிக்கில் உள்ளே நுடைந்துவிடலாம் என்னும் நோக்கில் இணையவாசிகளுக்காக உண்டாக்கப்பட்ட சின்ன வச‌தி இது.

பாஸ்வேர்டை சேமித்து வைப்பது என கருதுபவர்கள் இந்த வசதியை நன்றி வேண்டாம் என நிராகரித்து விடுவார்கள்.பலர் நம்முடைய கம்ப்யூட்டர், அதில் நாம் ப‌யன்படுத்தும் பிரவுசரில் பாஸ்வேர்டை சேமித்து வைத்தால் என்ன என்று இந்த வசதியை பயன்படுத்துகின்றனர்.கூகுல் குரோம் மட்டும் அல்ல பயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசரிகளிலும் இந்த வசதி இருப்பதால் பாஸ்வேர்டு சேமிப்பு பற்றி யாரும் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை.

ஆனால் கெம்பர் கூகுல் குரோம் விஷயத்தில் ஒரு திடுக்கிடும் உண்மையை கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார்.

பாஸ்வேர்டு சேமிப்பு!elliot2

குரோமில் சேமிக்கப்படும் பாஸ்வேர்டுகள் அனைத்தையும் மற்றவர்கள் எளிதாக தெரிந்துகொண்டு விடலாம் என்றும் இது திடுக்கிட வைக்கிறது என்றும் அவர் இது தொடர்பான பதிவில் கூறியிருந்தார்.குரோம்//செட்டிங்ஸ்//பாச்வேர்டு என்று பிரவுசரின் முகவரி பகுதியில் டைப் செய்தால் போதும் பிரவுசரில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பாஸ்வேர்டுகளையும் அழகாக காட்டிவிடும்.

இது திகைப்பானது தானே.யோசித்து பாருங்கள் உங்கள் கம்ப்யூட்டரை அணுக கூடிய எந்த நபரும் மிக எளிதாக நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பாஸ்வேர்டுகளையும் தெரிந்து கொண்டு விடலாம் என்பது ஆபத்தானது தானே.பாஸ்வேர்டு பாதுகாப்பின்மை பற்றி பலவிதமாக எச்சரிக்கப்படுகிறது.தாக்காளர்கள் மற்றும் விஷமிகள் உங்கள் பாஸ்வேர்டை திருட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

தாக்காளர்களை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள் அவர்களாவது பாஸ்வேர்டை ஹேக் செய்ய போராடி பார்க்க வேண்டும். ஆனால், எந்த வித முயற்சியும் இல்லாம‌ல் குரோம் பிரவுசரில் சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை எவரும் தெரிந்து கொள்ளலாம் என்பது எவ்வளவு ஆபத்தானது?

அதிர்ச்சி!

அப்பாவி இணையவாசிகள் பெரும்பாலானோர் இது தெரியாமலே குரோமில் தங்கள் பாஸ்வேர்டுகளை சேமித்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆபத்தை எலியட் கெம்பர் கண்டுபிடித்த விதம் தற்செயலானது. அவர் கூகுல் விரோதி எல்லாம் இல்லை.வழக்கமாக சஃபாரி பிரவுசரை பயன்படுத்துபவர் அவர்.தனது புதிய திட்டம் ஒன்றுக்காக கூகுல் குரோம் பிரவுசரை பயன்படுத்த தீர்மானித்தார்.அப்போது தந்து பழைய பிரவுசரில் உள்ள புக்மார்க்களை எல்லாம் புதிய பிரவுசருக்கு மாற்றிக்கொள்ள விரும்பினார்.இதற்கு முயன்ற போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

புக்மார்க்ஸ் மற்றும் செட்டிங்கை மாற்றிக்கொள்வதற்காக புரவுசரில் தோன்றிய பெட்டியில், பிரவுசிங் வரலாறு, புக்மார்க்கள்,சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டு மற்றும் தேடல் வரலாறு ஆகியவற்றை மாற்ற விருப்பமா என கேட்கப்பட்டது.அது மட்டும் அல்லாமல் சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை மாற்ற விருப்பமா என்னும் கேள்விக்கு பதில் அளிக்கும் வாய்ப்பு தரபடாமல் இருந்தது.காரணம் அந்த பகுதி ஏற்கனவே கிளிக் செய்யப்பட்டிருந்தது தான். இதன் பொருள் , நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் பாட்ஸ்வேர்டுகள் மாற்றப்படும் என்பது தான் .

தேர்வு செய்ய வாய்ப்பளிக்கும் கேள்வியை முன் வைத்து அதற்கு பதில் அளிக்கும் வாய்ப்பை தராமல் அதை கட்டாயமாக்கி இருப்பது என்ன விதமான வாய்ப்பளிக்கும் விதம் என்ற கேள்வி கெம்பர் மனதில் எழுத்தது.இந்த கேள்வியோடு மேற்கொண்டு ஆய்வு செய்த போது தான், குரோம் செட்டிங் பகுதியில் பாஸ்வேர்டு சேர்த்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் காண்பி எனும் கட்டளையை கிளி செய்தால் சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டுகள் எல்லாம் தோன்றும் என அவர் கண்டுபிடித்தார்.

ஆக,ஒருவரது கம்ப்யூட்டரை அணுகும் வாய்ப்பு கிடைத்த எவரும் அதில் குரோம் பிர‌வுசரில் சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்ளலாம்.elliot4

பதில் இல்லா கேள்விகள்.

கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் பாஸ்வேர்டு பாதுகாப்பு தொடர்பான பல தார்மீக மற்றும் தொழில்நுட்ப கேள்விகளை இது எழுப்புவதாக கெம்பர் கூறுகிறார்.

அதில் ஒன்று ஒரு கம்ப்யூட்டர் இன்னொருவரால் அணுகப்படும் போது எப்படியும் அது பாதுகாபில்லாமல் போய்விடுகிறதே, அதன் பிறகு அதில் உள்ள பாஸ்வேர்டுகளை கண்டுபிடிப்பதா பிரச்சனை என்று சிலர் கேட்கலாம், என்பது.எனவே குரோமில் உள்ள பாதுகாப்பு ஓட்டையை பெரிதாக்காமல் பாஸ்வேர்டுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது தான் முக்கியம் என்று இதற்கு பதிலும் அளிக்கப்படலாம் என்கிறார் கெம்பர்.

ஆனால் பிரச்ச்னை கூகுல் தனது குரோம் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை தெளிவாக குறிப்பிட முன்வராதது தான் என்கிறார் அவர். குரோம் பிரவுசர்களை இணையம் முழுவதும் விளம்பரம் செய்யும் கூகுல் அதன் பாஸ்வேர்டு சேமிப்பு அத்தனை பாதுகாப்பானது இல்லை என்பதை இணைவாசிகளுக்கு குறிப்பிடமால் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்புகிறார்.

இந்த பதிவு வெளியாவனவுடன் இணைய உலகில் ஒரு சூறாவளியே உண்டானது. குரோம் பிரவுசரில் சேமிக்கப்படும் பாஸ்வேர்டுகளில் உள்ள ஆபத்து என இது தொடர்பான செய்திகள் சுட்டிக்காட்டியதால் பரபரப்பு உண்டாது.

கூகுலின் பொறுப்பின்மை<el/strong>

இந்த செய்தி பிரபலமான ஹேக்கர் நியுஸ் தளத்தில் வெளியான போது கூகுலின் பாதுகாப்பு அதிகாரி இது தொடர்பாக பட்டும்படாமல் பதில் அளித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கூகுல் அதிகாரி,பாஸ்வேர்டு பாதுகாப்பிற்கு இணையவாசிகளே பொறுப்பேற்க வேண்டும்,இது தொடர்பாக எது செய்தாலும் அது தவறான பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி விடும் என்பது போல் கூறியிருந்தார்.சர்ர்சைக்குறிய விஷயங்களில் அரசு பதில் அளிக்கும் முறையில் அமைந்திருந்த அவரது பதில் எதையும் நேரடியாக விளக்கவில்லை.நாங்கள் பொறுப்பல்ல எல்லாவற்றுக்கும் நீங்களே பொறுப்பு என சொல்லமால் சொல்லியது.

கூகுலின் இந்த பதில் பொறுப்பற்றது என பலரும் ஆவேசப்படுகின்றனர். வலையின் பிதாமகனான டிம் பெர்னஸ் லீயும் கூட இதை தனது டிவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டி ,கூலின் பதில் ஏமாற்றம் தருவதாக கூறியிருந்தார்.

இது தொடர்பான விவாதத்தில் , சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை அப்படியே விடாமல் அவற்றை அணுக ஒரு மூல பாஸ்வேர்டை உருவாக்கித்தர  வேண்டும் என்ற யோசனை தெரிவிக்க‌ப்படுகிறது.பய‌ர்பாக்சில் இந்த‌ வசதி இருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

கூகுல் இதை செய்ய முன் வருமா என்பது ஒருபறம் இருக்க , பாஸ்வேர்டுகளை பிரவுசர் உட்பட எங்கும் சேமித்து வைப்பது நல்லதல்ல என்பதை இந்த விவகாரம் உணர்த்துகிறது.அப்படியே நாம் சாதரணமாக நினைக்கும் பாஸ்வேர்டில் எவ்வளவும் சிக்கலான அம்சங்கள் இருக்கின்றன் என்பதையும் பாஸ்வேர்டு பாதுகாப்பில் ஏன் சாமன்யர்களும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது.

http://blog.elliottkember.com/

 

——–

————-
பாஸ்வேர்டு பற்றிய தொடர் பதிவுகளில் இது எட்டாவது பதிவு: https://cybersimman.wordpress.com/?s=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+&submit=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95

Advertisements

2 responses to “உங்கள் பாஸ்வேர்டுக்கு வந்த ஆபத்து!.

  1. Pingback: குரோமின் பாஸ்வேர்ட் சர்ச்சை – பாதுகாப்பது எப்படி? | Kinniya Express·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s