வாய்பாடு வசமாக உதவும் இணையதளங்கள்

கனித புலியாக திகழ வேண்டும் என்றால் முதலில் கூட்டல் கழித்தலும் ,பெருக்கல் வகுத்தலும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக வாய்பாட்டை மனப்பாடமாக தெரிந்திருக்க வேண்டும்.

 

வாய்பாடுகளை மனப்பாடம் செய்து கொள்ள பல வழிகள் இருக்கின்றன. இப்போது இணையத்தையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.ஆம்,வாய்பாடு புத்தகத்தை வைத்து கொண்டு சத்தம் போட்டு படித்தெல்லாம் அந்த காலம். இன்றைய ஹைடெக் யுகத்தில் வாய்பாடுகளை இணையதளம் வாயிலாகவே பார்த்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

 

டேபில்ஸ் டெஸ்ட் ( http://tablestest.com/) தளம் இதற்கு அழகான உதாரணம். இந்த தளம் முகப்பு பக்கத்திலேயே வாய்பாட்டை கட்டம் போட்டு வைத்திருக்கிறது. வழக்கமான முறையில் ஒன்னு முதல் பத்து வரையான வாய்பாடு வரிசையாக இருப்பதற்கு பதில் அழகாக ஒரே பக்கத்தில் 100 கட்டங்களுக்குள் பத்து வாய்பாடும் அடங்கி விடுகிறது.கிரிட் வடிவிலான இந்த கட்டத்தில் எண்களின் மீது கர்சரை கொண்டு செல்வதன் மூலம் அந்த எண்ணுக்கான பெருக்கல் சமன்பாட்டை தெரிந்து கொள்ளலாம். இதற்கான மேல்பகுதியிலும் இடது பக்கத்திலும் ஒன்னு முதல் பத்து வரையான எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.இரண்டு வரிசையிலும் ஒரு எண்ணை தேர்வு செய்தால் அதன் பெருக்கல் மதிப்பு கட்டத்தின் நடுவே தெரியும்.

 

இதன் மூலம் வாய்பாட்டை சுலபமாக மனப்பாடம் செய்து கொள்ளலாம். அது மட்டும் அல்ல அடுத்த கட்டமாக,நமது வாய்பாட்டுத்திறனை சோதித்து பார்த்துக்கொள்ளாம். ஆறு கட்டங்களாக சோதனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டத்தை தேர்வு செய்ததும், வரிசையாக பெருக்கல் சமன்பாடுகள் தோன்றுகின்றன.அதன் கீழ் கொடுக்கப்படும் எண்களில் இருந்து சரியான விடையை கிளிக் செய்ய வேண்டும்.கிளிக் செய்ய செய்ய பெருக்கல் சமன் மாறிக்கொன்டுடே இருக்கும்.

 

வீடியோ கேம் விளையாடுவது போலவே இந்த பெருக்கல் கணக்குகளை போட்டு பார்க்கலாம்.முதல் கட்டத்தை முடித்து விட்டால் அடுத்த கட்டத்திற்கு முன்னேற‌லாம்.ஒவ்வொரு கட்டத்திலும் பெருக்கல் சமன் கடினமாகி கொண்டே போகும். யாருடைய துணையும் இல்லாமால் நீங்களே உங்களை சோதித்து கொண்டு பெருக்கல் சமன்பாடுகளை பட்டைத்தீட்டி கொள்ளலாம்.

 

இதே போலவே மல்டிபிலிகேஷன் கன்ட்ரோல் தளமும் ( http://www.multiplicationtool.ஒர்க்/ ) பெருக்கலில் பயிற்சி எடுத்து கொள்ள உதவுகிறது. மேத் ஈஸ் ஃபன் (http://www.mathsisfun.com/tables.html )  தளமும் வாய்ப்பாட்டை கற்றுக்கொடுத்து பெருக்கல் கனக்கில் பயிற்சி அளிக்கிறது.வண்ணமய‌மான வரைபடங்களோடு எளிதான விளக்கமும் வ‌ழிகாட்டுகிறது.வாய்பாடு சோதனை பகுதியும் இருக்கிறது.

 

மேத் பிளேகிரவுன்ட் தளமும்(http://www.mathplayground.com/howto_learnmultfacts.html )  இதே வகை தான். ஆனால் இந்த தளத்தில் பெருக்கல் சோதனைகள் அச்சு அசல் வீடியோ விளையாட்டு போலவே இருக்கின்றன.விடைக்கான எழுத்துக்கள் தோன்றும் போது திரையில் விலங்குகளையும் மனிதர்களையும் காண‌லாம்.

 

 விக்கி ஹவ் தளம்(http://www.wikihow.com/Learn-Multiplication-Facts )  இவற்றில் இருந்து கொஞ்சம் மாறுபட்ட வையில் வாய்பாடு கற்றுத்தருகிறது. வாய்பாட்டின் அடிப்படையை புரிந்து கொள்ளக்கூடிய குறிப்புகளின் மூலம் அவற்றை எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்து கொள்ள வழிகாட்டுகிறது இந்த தளத்தில் உள்ள பெருக்கல் கட்டுரை.

 

எழுதிப்பார்ப்பது, உதாரனங்களோடு தொடர்பு படுத்தி பார்ப்பது என எளிதான குறிப்புகள் மூலம் பெருக்கல் சமன்பாடுகள் அழகாக நினைவில் நிறுத்துகிறது.நீளமான பெருக்கல் கணக்குகளை போடுவதற்கு வழிகாட்டும் தனிக்கட்டுரையோடு கனித தேர்வுக்கு தயாராக உதவும் வேறு கட்டுரைகளும் இருக்கின்றன.

 

கிட்ஸ்வேர்ல்டு தளமும் (http://www.kidzworld.com/article/4107-tips-and-tricks-to-tame-your-times-tables )  இதே போலவே அழகான அடிப்படையான விளக்க குறிப்புகளோடு வாய்பாட்டில் பயிற்சி அளிக்கிறது.வெறும் மனப்பாடமாக அல்லாமல் வாய்பாட்டை புரிந்து கொண்டு நினைவில் கொள்ள இந்த தளம் வழி காட்டுகிறது.கையில் உள்ள பத்து விரல்களை அடிப்படையாக கொண்டு மிகவும் சுவாரஸ்யமாக இந்த குறிப்புகள் அமைந்துள்ளன.( இந்த தளத்தில் உள்ள விளம்பர் நோக்கிலான கீவேர்டுகள் கொஞ்சம் தொல்லை தரலாம்.)

 

 

வாய்பாடு படிப்பதை அலுப்பே இல்லாமல் சுவாரஸ்யமாக மேற்கொள்ள வழிகாட்டும் இந்த தளங்களை கணித புலியாகும் ஆர்வம் கொன்டவர்கள் குறித்து வைத்துக்கொள்ளலாம்.

 

 ———

நன்றி ;சுட்டி விகடன்

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s